பாடகியான விஜய் டிவி தொகுப்பாளினி பாவனா
டிவி தொகுப்பாளினிகள் பெரும்பாலும் சீரியல் அல்லது சினிமாவில் நடிப்பார்கள். ஆனால் விஜய் டிவி சூப்பர் சிங்கரின் தொகுப்பாளினி பாவனா, பாடகியாக களம் இறங்கியுள்ளாராம். இதை அவரே தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
திருமணம் செய்துகொண்டு கணவருடன் மும்பையில் செட்டில் ஆன பாவனா, சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியை மீண்டும் தொகுத்து வழங்க வந்திருக்கிறார்.
அவருக்கு சினிமாவில் பாடகியாகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறதாம். பிரேசில் என்ற திரைப்படத்தில் ஒரு பாடலைப் பாடியுள்ளாராம்.

ஃபுட்பால் புரமோசன்
தமிழ் திரைப்படமான பிரேசில் படத்தில் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை மையமாகக் கொண்டும் பாடல் எழுதப்பட்டுள்ளது. அதை தன்னுடைய ஐஸ்கிரீம் குரலில் பாடியுள்ளார் பாவனா.

உலகம் ஒரு கால்பந்து
யுடியூப்பில் இந்த பாடல் அப்லோடு செய்யப்பட்டுள்ளது. "ஆல் த பீப்பில் ஆப் இந்தியா, ஆல் த பீப்பிள் ஆப் சென்னை... என்று தொடங்கும் இந்த படலில், உலகம் ஒரு கால்பந்து... அது ஜெயிக்க நீ முந்து... மாமு மாமு மாமு கொஞ்சம் தில்லுருந்தா காமி.... சென்னைதான் நமக்கு சோறு... சோறு...என்று பாடியுள்ளார் பாவனா...

ஆடிய பாவனா
இதில் பாடுவதோடு நன்றாக ஆடியுள்ளார் பாவனா. பேசாமல் இனி ஆல்பங்களில் பாடி ஆடலாம் பாவனா. தொகுப்பாளினி பாவனாவிற்கு குரல் நன்றாக கை கொடுக்கிறது.

மகிழ்ச்சியில் பாவனா
தான் பாடியுள்ளதை மகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ள பாவனா, தனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் அம்ஜத் அகிலன், இசையமைப்பாளர் குருபிரசாத் ஆகியோருக்கு நன்றி கூறியுள்ளார்.

சப்போர்ட் பண்ணுங்கப்பா
பிரேசில் கால்பந்து போட்டியை மையமாகக் பாடப்பட்டுள்ள இந்தப் பாடலை கேட்டுவிட்டு தனக்கு சப்போர்ட் பண்ணுங்கப்பா என்று கேட்டுள்ளார் பாவனா.


Click it and Unblock the Notifications











