சித்துவை நெனச்சு நெனச்சு.. விடிய விடிய போஸ்டர் ஒட்டிய ரசிகர்கள்.. செம வைரல்

சென்னை: வி ஜே சித்துவின் இறப்பிற்குப் பிறகு அவருடைய ரசிகர்கள் தற்போது அவருக்காக நோட்டீஸ் ஒட்டி செய்து வரும் விளம்பரங்களும் வீடியோக்களும் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.

அதுவும் இல்லாமல் சித்ரா வுக்காக அவருடைய ரசிகர்கள் அவருக்காக பாட்டு எழுதி இருக்கிறார்கள் இந்த பாட்டும் தற்போது பலரால் ரசிக்கப்பட்டு வருகிறது.

விஜே சித்ரா முதலில் தொகுப்பாளராக அறிமுகமாகி சீரியல்களில் அதுவும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கேரக்டரில் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை கவர்ந்தவர்.

கால்ஸ் பட போஸ்டர்

கால்ஸ் பட போஸ்டர்

தற்போது உயிரோடு இல்லாமல் இருந்தாலும் அவருடைய ரசிகர்களின் மனதில் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதற்கு அடையாளமாகத் தான் தற்போது அவருடைய ரசிகர்கள் அவருடைய திரைப்படத்தின் நோட்டீஸ்களை சென்னையில் எங்கெல்லாம் இடம் இருக்கிறதோ அங்கெல்லாம் ஒட்டி வருகின்றனர்.

முல்லை

முல்லை

எத்தனை நடிகர்களின் படங்கள் திரைக்கு வந்தாலும் யாருக்குமே இல்லாத அளவிற்கு செய்தது இல்லை .தற்போது சித்ராவின் ரசிகர்கள் இந்த திரைப்படம் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக உழைத்து வருகின்றனர். விஜே சித்ரா என்று சொன்னதுமே பல பேருக்கு தெரிந்து விடும் அளவிற்கு பட்டி தொட்டி எல்லாம் பிரபலமான இவர் பாண்டியன் ஸ்டோர் சீரியல் முல்லை கேரக்டரில் நடித்தார் என்று சொல்வதை விடவும் வாழ்ந்து விட்டார்.

செல்லமான சித்து

செல்லமான சித்து

அவர் இறப்பிற்கு பிறகு இந்த சீரியலின் புது கேரக்டர் வந்தாலும் இப்ப வரைக்கும் இந்த சீரியலில் முல்லை கேரக்டர் என்றாலே சித்ராவின் முகம் தான் ஞாபகத்திற்கு வருகிறது. அந்த அளவிற்கு அனைவரின் மனதிலும் முல்லையாக பசைபோல ஒட்டிக் கொண்டார். அவர் சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார். சீரியலில் கதாநாயகியாகவும் நடித்து இருக்கிறார் .

அதிக ரசிகர்கள்

அதிக ரசிகர்கள்

ஆனால் அதைவிடவும் இன்ஸ்டாகிராம் மூலமும் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். இன்ஸ்டாகிராமில் இவருக்காக பல ரசிகர்கள் ஃபேன்ஸ் பேஜ்களை ஓப்பன் பண்ணி வைத்திருக்கிறார்கள். அவர்களின் வீட்டில் ஒருவர் போல இவர் நடந்து கொண்டதால் அனைவருக்குமே செல்லப் பிள்ளையாகவும் தலைவியாகவும் தான் வலம் வந்து கொண்டிருந்தார் .

நம்ம வீட்டுப் பொண்ணு

நம்ம வீட்டுப் பொண்ணு

இவரை யாரும் செலிபிரிட்டி என்று பார்க்காமல் தங்களுடைய வீட்டில் ஒரு நபராகவும் தங்களுடைய பெஸ்ட் பிரண்டு தான் பார்த்து வந்தனர் .அதனால் தான் முதன்முதலாக இவர் திரைப்படத்தில் நடிக்கிறார் என்றதும் சித்ராவை விடவும் அவருடைய ரசிகர்கள் சந்தோஷம் அடைந்திருக்கின்றனர். தன்னுடைய ரசிகர்களின் பிறந்த நாளுக்கு நேரில் சென்று அவர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்து அசத்தியவர் சித்ரா.

பாசத்தைப் பொழிந்தவர்

பாசத்தைப் பொழிந்தவர்

அது மட்டுமல்லாமல் சில ரசிகர்களின் வீட்டுக்கு செல்ல முடியாமல் சூழ்நிலை இருந்தாலும் கூட போனில் விஷ் பண்ணியாவது தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து விடுவார் .இந்த அளவிற்கு அனைவர் மீதும் பாசம் வைத்திருந்ததால் தான் சித்ராவுக்கு அவருடைய ரசிகர்களும் ஒவ்வொருவராக தொடர்ந்து கிப்ட் களை அனுப்பி வைத்தனர்.

வேதனை

வேதனை

கடைசியாக கொண்டாடப்பட்ட சித்ராவின் பிறந்தநாளுக்கு கூட அவருடைய ரசிகர்கள் அதிகளவில் பரிசுகளை கொடுத்து அசத்தி இருந்தனர் .ஆனால் தற்போது அவருடைய ரசிகர்கள் அனைவருமே அவருடைய இழப்பை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். சித்ராவின் இழப்பு எவ்வளவு பெரிய வேதனை என்று அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் அவருடைய ஆசை கனவான கால்ஸ் திரைப்படம் இன்று உலகெங்கும் தியேட்டரியில் வெளியாகிறது.

தீவர ரசிகர்கள்

தீவர ரசிகர்கள்

அவருடைய கனவை நினைவாக்க வேண்டும் என்பதற்காக அவருடைய ரசிகர்கள் தீயாக வேலை செய்து வருகின்றனர் .இரவு பகல் பாராது கிடைக்கும் இடங்களில் எல்லாம் விளம்பரங்களை ஏற்படுத்தி வருகின்றனர். அதுவுமில்லாமல் எந்தச் செலவும் யாரும் செய்யாமல் சொந்த செலவிலேயே ரசிகர்கள் நோட்டீஸ் ஒட்டி அவருக்காக அவருடைய லட்சியத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற துடிப்புடன் பணியாற்றி வருகின்றனர்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X