விஜே சித்ராவின் அம்மா செய்த காரியம்.. நெகிழ்ந்து போய் அழுது விட்ட ரசிகர்கள்

சென்னை : சொல்ல வார்த்தை இல்லை .மகளுக்கு பின் தாய் செய்த செயல் தற்போது ரசிகர்களின் மனதை பெரிதும் பாதித்திருக்கிறது.

விஜே சித்ராவை போலவே அவருடைய அம்மாவும் செய்திருக்கிறாரே என்று ரசிகர்கள் கவலையிலும் சந்தோஷம் அடைந்து இருக்கின்றனர்.

தன் மனதில் ஆயிரம் கவலை இருந்தாலும் தன்னுடைய மகளை நேசிப்பவர்களை சந்தோசப் படுத்தி இருக்கிறாரே என்றும் ரசிகர்கள் அவரைப் பாராட்டி வருகின்றனர்.

முல்லைக்கு தான் தனி பட்டாளம்

முல்லைக்கு தான் தனி பட்டாளம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலின் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜே சித்ரா ரசிகர்களின் மனதில் தனக்கென்று பெரிய இடத்தையே பிடித்து இருந்தார். இந்த சீரியலில் பலர் நடித்திருந்தாலும் அவருக்கு என்று பலர் இந்த சீரியலை தொடர்ந்து பார்த்து வந்தனர். அவருடைய நடிப்பையும் அழகையும் பிடித்துப்போனதால் அவருக்கென்று தனி ரசிகர்களாக மாறியிருந்தனர்.

அனைவருக்கும் பரிச்சயமானவர்

அனைவருக்கும் பரிச்சயமானவர்

விஜே சித்ராவை பொறுத்தவரைக்கும் அவர் சீரியலில் மட்டுமல்லாமல் பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி தொகுப்பாளராகவும் வலம் வந்திருக்கிறார் .அதனாலேயே அவர் அனைவருக்கும் பரிச்சயமான நபர் தான். சின்ன வயதிலிருந்தே நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக வீட்டில் எந்த சப்போர்ட்டும் இல்லாமல் தனிப்பெண்ணாக ஒவ்வொரு பிரச்சனைகளையும் எதிர் கொண்டு இவர் முன்னேறிக் கொண்டிருந்தார்.

இடியாய் இறங்கிய மரணம்

இடியாய் இறங்கிய மரணம்

வாழ்க்கையில் ஒவ்வொரு துறைகளிலும் ஒவ்வொரு படியாக முன்னேறி கொண்டிருந்தவர் திடீரென மரணம் அடைந்து விட்டார் என்று செய்தியை கேள்விப்பட்டதும் அவருடைய குடும்பத்தை போலவே அவருடைய ரசிகர்களும் பெரும் அதிர்ச்சியிலும் அதிக கவலையிலும் இருந்தனர். தற்போது வரைக்கும் அவருடைய இறப்பு யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாமலும் கடந்து போக முடியாமலும தான் இருந்து வருகிறது.

ரசிகர்களுடன் கொண்டாட்டம்

ரசிகர்களுடன் கொண்டாட்டம்

அவர் யாரையும் போல அல்லாமல் எவ்வளவு பெரிய செலிப்ரிட்டியாக மாறி இருந்தாலும் எனக்கு ரசிகர்கள்தான் முக்கியம் என்று ரசிகர்கள் மீது அதீத பாசத்தை வைத்து இருந்தார் .அதனால் அவருடைய ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பல பேன்ஸ் பேஜ்களை வைத்திருந்தார். அதுமட்டுமல்லாமல் ரசிகர்களுக்கு அடிக்கடி சர்ப்ரைஸ் கொடுத்து ஒரு பிரண்ட்ஸ் போலத்தான் பழகி வந்தார் .அது மட்டுமல்லாமல் அவருடைய ரசிகர்களின் பிறந்தநாளுக்கு சில நேரங்களில் நேரடியாக சென்று பரிசுகள் கொடுத்து ஷாக் கொடுத்திருந்தார்.

இப்போ இல்லையே என ஏக்கம்

இப்போ இல்லையே என ஏக்கம்

அந்தமாதிரி அவர் பிறந்த நாள் கொண்டாடிய ஒரு ரசிகர் தற்போது இந்த பிறந்த நாளில் அவர் இல்லாததை நினைத்து ரொம்பவே வருத்தம் அடைந்து ஒரு போஸ்ட் போட்டிருக்கிறார். சித்ராவின் அம்மா இந்த பிறந்தநாளுக்கு அந்த ரசிகரின் வீட்டுக்கு சென்று கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார். இந்த வீடியோஸ்களும், போட்டோஸ் களும் இன்ஸ்டாகிராமில் வைரலாக வலம் வருகிறது . இந்த வீடியோவை பார்த்ததும் பலர் சித்ராவை நினைத்துத் தங்களுடைய மனக் கவலையை தெரிவித்து வருகின்றனர்.

எல்லார் மனதிலும் இருக்கிறார்

எல்லார் மனதிலும் இருக்கிறார்

அதுமட்டுமல்லாமல் தாயைப் போல பிள்ளை என்றுதான் பழமொழி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இங்கு பிள்ளையை போல தாயாக இருக்கிறீர்கள் அம்மா என்று சித்ராவின் அம்மாவுக்கும் பலர் ஆறுதல் அளித்து வருகின்றனர் .என்னதான் ரசிகராக இருந்தாலும் எந்த ஒரு நடிகையயும் இந்த அளவிற்கு ரசிகர்களின் மீது பாசத்தை வைக்க மாட்டார்கள். ஆனால் சித்ரா அனைவரிடமும் சகஜமாக பழகி எல்லோர் மனதிலும் இப்ப வரைக்கும் வாழ்ந்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X