டேய் நண்பா… நிஜமாவே வேற லெவல்ல பண்ணி இருக்க…பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகரை புகழ்ந்த தீபிகா!

சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் லட்சமி அம்மாவின் மரணத்திற்கு பிறகு குடும்பமே சோகத்தில் மூழ்கி உள்ளது. இந்த சீரியல் பல பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகிக் கொண்டு இருக்கிறது.

அம்மா இறந்த செய்தி கேள்விபட்ட கண்ணன், கதறி அழுதபடி தலைதெறிக்க ஓடிவந்து கதறி அழுவார் இதில் கண்ணன் தத்ரூபமாக நடித்து இருப்பார்.

இவரின் நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்ற நிலையில், இந்த சீரியலிலிருந்து விலகிய தீபிகாவும் கண்ணனை வெகுவாக புகழ்ந்து தள்ளியுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் அனைவருக்கும் மிகவும் பிடித்த சீரியலில் ஒன்றாகும். குடும்பப் பாசம், அண்ணன் தம்பி பாசம் உள்ளிட்டவை இந்த சீரியலில் இயல்பாக காட்டப்பட்டு இருக்கும். சாதாரண ஒரு கூட்டு குடும்பம் எப்படி இருக்குமோ அதே போல் எதார்த்தமான கதையை மையமாக வைத்து இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

ஏராளமான ரசிகர்கள்

ஏராளமான ரசிகர்கள்

அண்ணன் தம்பிகளை மையமாக வைத்தே இந்த சீரியல் எடுக்கப்பட்டுள்ளது. இந்த சீரியலில், ஸ்டாலின், சுஜிதா, சரவண விக்ரம், ஹேமாராஜ், குமரன் தங்கராஜன், வெங்கட் ரங்கநாதன், சரவண விக்ரம், ஹேமா சதிஷ், காவ்யா அறிவுமணி உள்ளிட்ட பலர் நடித்து வரும் நிலையில், ஒவ்வொரு கேரக்டருக்கும் தனித்தனியே மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

ரகசிய திருமணம்

ரகசிய திருமணம்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடைசி தம்பி கண்ணன் உறவுக்கார பெண் ஐஸ்வர்யா காதலித்து யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொள்கிறான். இதனால், கண்ணனை அந்த குடும்பமே ஒதுக்கி வைக்கிறது. இதையடுத்து, கண்ணனின் அம்மா உடல் நலக்குறைவால் இறந்து விடுகிறார். இதனால் குடும்பமே சோகத்தில் மூழ்கியது.

Recommended Video

Pandian Stores தெடரில் இருந்து Deepika விலக இதுதான் காரணம் | Sai Gayathri, Ishwarya
கதறி அழுத கண்ணன்

கதறி அழுத கண்ணன்

கண்ணன் வந்ததும் உடலை எடுக்கலாம் என்று வீட்டில் அனைவரும் காத்திருந்தனர். ஆனால், நேரமானதால், உடலை மயானத்திற்கு எடுத்து சென்று விடுகின்றனர். அம்மா இறந்த செய்தியை கேள்விபட்ட கண்ணன்,கதறி அழுதபடி தலைதெறிக்க ஓடிவருவார். ஆனால் அவர் வருவதற்குள் அவரது அண்ணன் கொள்ளி வைத்துவிடுகிறார். இதனால், கண்ணன் கடைசி நேரத்தில் கூட உடலை பார்க்க முடியாத பாவி ஆகிவிட்டேனே என மண்ணில் புரண்டு கதறி அழுகிறார் கண்ணன் இந்த எபிசோடு சமீபத்தில் ஒளிபரப்பானது.

குவியும் பாராட்டு

குவியும் பாராட்டு

இந்த காட்சிகளில் கண்ணன் கேரக்டரில் நடித்த சரவணன் தம்முடைய அபார நடிப்பை வெளிப்படுத்தியதாக ரசிகர்கள் பலரும் அவரை பாராட்டி வந்தனர். அவர் அழுது புரண்டு, தன் துக்கத்தை வெளிப்படுத்தியது மிகவும் இயல்பாகவே இருந்தது சீரியலை பார்த்த அனைவரும் உண்மையில் கண்கலங்கினார்கள் என ரசிகர்கள் பலரும் கூறி வந்தனர்.

டேய் நண்பா

டேய் நண்பா

இந்நிலையில், அந்த சீரியலிலிருந்து சமீபத்தில் வெளியேறிய விஜே தீபிகா தன் பதிவில், டேய் நண்பா.. நிஜமாவே வேற லெவல்ல பண்ணி இருக்க.. நீ என் ஃபிரண்டுடா.. இதெல்லாம் ஆக்டிங்தான்.. இது எல்லாமே எனக்கு புரிகிறது. இருந்தாலும் இந்த ஒரு சீனை பார்க்கும்போது ரொம்பவே எமோஷனலா இருக்கு.வேற லெவல் பண்ணிட்ட போ... முக்கியமா உன்னுடைய ஆக்டிங் செம, ஃபயரா இருந்தது என சரவணை வெகுவாக புகழ்ந்து இருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X