அந்தரத்தில் தலைகீழாக தொங்கிய ஜாக்குலின்... இன்ஸ்டாகிராமை அதிர வைத்த வெறித்தனமான பிட்னஸ் போட்டோஸ்!

சென்னை: விஜய் டிவியின் தொகுப்பாளினியாக வலம் வந்து, தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலம் அடைந்துள்ள விஜே ஜாக்குலினின் லேட்டஸ்ட் வொர்க்அவுட் புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன.

'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியில் ரக்‌ஷனுடன் இணைந்து ஜாக்குலின் செய்த ஆங்கரிங் கலாட்டாக்கள் இன்று வரை ரசிகர்களின் ஃபேவரைட். சின்னத்திரை ஆங்கராக கலக்கிய ஜாக்குலின் 'தேன்மொழி பிஏ' என்கிற சீரியல் மூலம் நடிகையாக அவதாரம் எடுத்தார். தொடர்ந்து வெள்ளித்திரை பக்கம் வந்த ஜாக்குலின், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான 'கோலமாவு கோகிலா' படத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் தங்கையாக எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

Jacquline yoga photos
Photo Credit:

நடிகை ஜாக்குலின்: திரைப்படங்களுக்குப் பிறகு சிறிய இடைவெளி எடுத்த ஜாக்குலின் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கினார். ஆரம்பத்தில் சக போட்டியாளர்களிடம் சண்டைக்கோழியாக வம்புக்கு நின்ற ஜாக்குலினை பார்த்து ரசிகர்கள் அதிர்ந்தனர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவரின் எதார்த்தமான குணம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. பிக்பாஸ் வரலாற்றிலேயே தொடர்ச்சியாக 15 வாரங்கள் நாமினேஷனுக்கு வந்தும், மக்களின் அசுரத்தனமான ஓட்டுகளால் காப்பாற்றப்பட்ட ஒரே போட்டியாளர் ஜாக்குலின் தான். ஃபினாலே வாரத்தில் ரசிகர்களின் நம்பிக்கையை காப்பாற்ற பணப்பெட்டியோடு வெளியேற முயன்றார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக நேரத்தை கணிக்க தவறியதால் நூலிழையில் எலிமினேட் ஆகி வெளியேறினார்.

அந்தரத்தில் ஜாக்குலின்: பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த ஜாக்குலின், காதலர் தினத்தன்று தனது காதலரான கேமராமேன் யுவராஜ் செல்வநம்பியை ரசிகர்களுக்கு அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.தற்போது சமூக வலைத்தளங்களில் 'ஏரியல் யோகா' செய்யும் கடினமான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். ப்ளூ கலர் டி-சர்ட் மற்றும் பிளாக் லெகிங்ஸ் உடையில், துணியின் துணையோடு அந்தரத்தில் பறப்பது போலவும், கைகளை மட்டும் தரையில் ஊன்றி தலைகீழாக நின்று பேலன்ஸ் செய்வது போலவும் ஆச்சரியமான போஸ்களை கொடுத்துள்ளார். பிக்பாஸ் வீட்டுல சண்ட கோழியா இருந்த ஜாக்குலினா இது? பிட்னஸ்ல வேற லெவல்ல மிரட்டுறாங்களே என ரசிகர்கள் கமெண்ட்களில் பாராட்டி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X