கையில் மது பாட்டிலுடன் ஆட்டம் போட்ட… பிரபல தொகுப்பாளினி!
சென்னை : பிரபல தொகுப்பாளினி விஜே மகேஸ்வரி கையில் பாட்டிலுடன் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் மிகவும் வைரலாகி வருகிறது.
ஆரம்பகாலத்தில் அடக்க ஒடுக்கமாக டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய விஜே மகேஷ்வரி தற்போது கவர்ச்சி பதுமையாக வலம் வருகிறார்.
இழந்த மார்க்கெட்டை பிடித்து விட பல நடிகைகள் கையில் வைத்திருக்கும் ஆயுதமான கவர்ச்சியை மகேஸ்வரியும் கையில் எடுத்துள்ளார்.

தொகுப்பாளினி மகேஸ்வரி
90'ஸ் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தமான தொகுப்பாளினி விஜே மகேஸ்வரி. மற்ற தொகுதிப்பாளினிகள் எல்லாம் ஒல்லி பெல்லி இடையுடன் வலம் வந்த போது இவர் மட்டும் கொழுக்கு மொழுக்குனு இருந்தார். இதனால் பல இளைஞர்களின் கனவு நாயகியாகவே மாறினார்.

ஜொள்ளுவிடும் ரசிகர்கள்
சன் மியூசிக் தொலைக்காட்சியில் பாட்டு கேட்க கால் பண்ணுவதை விட இவரிடம் ஒரு வார்த்தையாவது பேச வேண்டும் என்பதற்காகவே பலர் போன் செய்வார்கள் அந்த அளவுக்கு விஜே மகேஸ்வரி ஃபேமஸ். இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை ஜொள்ளுவிட்டு பார்க்கவே ஒரு கூட்டம் அலைபோதும்.

திருமணம்
விஜேவாக தனது பயணத்தை தொடங்கிய மகேஸ்வரி, விஜய் டிவியின் புது கவிதை மற்றும் சில சீரியல்கள் ஒரு சில படங்களில் பிஸியாக நடித்து வந்தார். பிஸியாக இருக்கும் போது சாணக்கியன் என்பவரை திருமணம் செய்து கொண்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

மார்க்கெட் இல்லை
திருமணத்திற்கு பிறகு சினிமாவிலிருந்து விலகி இருந்த விஜே மகேஸ்வரி சென்னை 28 பார்ட் 2வில் நடித்தார். ஆனால், முன்பைப்போல அவ்வளவு க்ரேஷ் இல்லாமல் போனதால் இழந்த இடத்தை மீண்டும் பிடிக்க தாறுமாறான புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் பகிர்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

தாறுமாறு கவர்ச்சி
அடக்க ஒடுக்கமான விஜேவா வந்து ரசிகர்களை ஜொள்ளுவிடவைத்த நம்ம மகேஸ்வரி தற்போது இணையமே திணறும் அளவுக்கு புகைப்படத்தை பகிர்வதை வழக்கமாக கொண்டுள்ளார். சமீபத்தில் மினுமினுக்கும் கறுப்பு நிற டைட்டான உடையில் உடல் வளைவு மொத்தமும் தெரியும்படி ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருந்தார் இந்த புகைப்படத்தை ஏகப்பட்ட லைக்குகளை அள்ளியது.

கையில் பாட்டிலுடன்
தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார். இந்த வகையில் தற்போது அம்மணி ஒருபடி மேலே போய் கையில் பாட்டிலுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், நீச்சல் குளத்தின் அருகே , குட்டியூண்டு டவுசர் போட்டுக்கொண்டு கையில் பாட்டிலுடன் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு எக்குதப்பாக கமெண்ட்டுகள் வந்தாலும், அவரின் ரசிகர்கள் அவரை உருகி உருகி வர்ணித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











