உண்மையான சூர்யவம்சம் ஜோடி.. மணிமேகலை சொன்ன குட் நியூஸ்.. குவியும் வாழ்த்து!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான மணிமேகலை, பிரியங்காவுடன் ஏற்பட்ட பிரச்னையால் அந்நிகழ்ச்சியில் இருந்து விலகினார். பின்பு, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் இருந்தார். பின்னர், ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியை விஜயுடன் சேர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார். இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அவர் தற்போது ரசிகர்களுக்கும் மட்டும் அல்ல அவரது நீண்ட நாள் கனவும் நிறைவேறியுள்ளது.
காதல் திருமணம்: படிக்கும் போதே சன் மியூசிக்கில் பணியை செய்தாலும், அவ்வப்போது கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி செலிபிரட்டிகளை பேட்டி எடுத்தும் வந்துள்ளார். மணிமேகலையும், ஹூசைனும் காதலித்து வந்த நிலையில் இருவரும் திடீரென திருமணம் செய்துகொண்டனர். இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் எதிர்ப்புகள் கிளம்பியது. பின்னர், நண்பர்கள் முன்னிலையில், திருமணம் செய்துகொண்டதோடு அவர்களது திருமணம் குறித்த செய்தியும் விவாதமாக மாறியது.

யூடியூப்: கடந்த 2010ஆம் ஆண்டில் சன்மியூசிக்கில் பணிக்கு சேர்ந்த மணிமேகலையை இப்போது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் உண்டு. சோஷியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவாக இருக்கும் அவர், சின்னத்திரையிலும் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். அவர் செய்யும் குறும்புகள் அல்லது காரில் வெளியே செல்வது போன்ற செயல்களை தனது யூடியூப் சேனலில் பதிவிடுவார். அதேபோன்று பெயர் முகம் தெரியாத கிராமத்தில் இறங்கி அங்கு சிக்கன் வறுத்து சாப்பிடுவது, அங்கிருக்கும் கிராம மக்களுடன் அரட்டை அடிப்பது போன்ற நிகழ்வுகளை செய்வார். கணவருடன் வெளியே சென்று ஊர் சுற்றுவதும் உண்டு.
வாழ்க்கை: இருவருக்கம் சொல்லி கொடுக்க யாரும் இல்லை. எங்கள் கனவுகளை கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற்றி கொள்வோம். யாருடை சப்போர்ட் இல்லாமல் இருவரும் வாழ்க்கையை தொடங்கினர். ஒரு சாதாரண வீட்டில் வாழ்ந்து வந்தனர். பின்பு புதிய கார் ஒன்றை வாங்கியதை இன்ஸ்டாவில் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் மணிமேகலை. அதேபோன்று கணவராக மட்டும் இல்லாமல் ஹூசைன் மணிமேகலைக்கு நண்பராக உறுதுணையாக இருந்து வருகிறார். இதுவரை இருவருக்குள்ளும் எந்தவித முரண்பாடும் எழவில்லை.

குக் வித் கோமாளி: விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக மணிமேகலை என்ட்ரி கொடுத்தார். அடுத்தடுத்து அவர் வெற்றிப்படிக்கட்டுகளை தாண்டி குக்வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்தும் வழங்கினார். இந்நிலையில், இதில் போட்டியாளராக வந்த பிரியங்காவின் செயல்கள் மணிமேகலையை மிகவும் காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை வெளியேறினார். தற்போது, ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

புதிய வீடு: பல்வேறு விழா மேடைகளை தொகுத்து வழங்கி வரும் மணிமேகலை தற்போது ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். மணிமேகலை கூறியது போல் சென்னையில் புதிய அபார்ட்மெண்டில் மணிமேகலையும் - ஹூசைனும் குடியேறியுள்ளனர். அதேபோன்று இரண்டு சொகுசு கார், பைக் என அடுத்தடுத்து வளர்ந்து வரும் மணிமேகலைக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன. லட்சியத்தை நோக்கி நகரும் மணிமேகலைக்கு வாழ்த்து மழை பொழிகிறது. புதிய அபார்ட்மெண்ட் சாவியை பதிவிட்டு மணிமேகலை புதிய வீடு வாங்கியுள்ளதாக தெரிவித்தார். மேலும் அந்த வீட்டின் மதிப்பு எப்படியும் 1.50 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவர்கள்தான் உண்மையான சூர்ய வம்சம் ஜோடி என கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











