ஊரு கண்ணு.. உறவு கண்ணு.. ஜம்முனு வீட்டைக் கட்டி.. குடியேறிய VJ மணிமேகலை உசேன் தம்பதியர்

சென்னை: சின்னத்திரையில் தனது துடிப்பான மற்றும் நகைச்சுவையான பேச்சால் ரசிகர்களைக் கவர்ந்தவர் வி.ஜே. மணிமேகலை. சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி, அதன் பின்னர் விஜய் டிவியின் முன்னணித் தொகுப்பாளினியாகவும், 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதை வென்றவராகவும் வலம் வந்தார்.

இவரது திரைப்பயணத்தை விட, நிழல் உலக சினிமா கதைகளை மிஞ்சும் அளவுக்குப் பல திருப்பங்களும் தடைகளும் நிறைந்தது இவரது நிஜ வாழ்க்கைக் காதல் கதை. அப்படி இருக்கையில் தனது காதல் கணவருடன் இணைந்து தனது கனவு வீட்டைக் கட்டி, கிரகபிரவேஷமும் ஜம்முனு நடத்தி முடித்துவிட்டார். இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மணிமேகலை மற்றும் அவரது கணவர் உசேனின் காதல் கதையைப் பொறுத்தவரையில், ஒரு தனியார் நிகழ்ச்சியின் படப்பிடிப்பின் போதுதான் இருவரும் முதன்முதலில் சந்தித்துக் கொண்டனர். ஆரம்பத்தில் நட்பாகத் தொடங்கி, உசேனின் அமைதியான குணமும், மணிமேகலையின் கலகலப்பான சுபாவமும் இருவரையும் ஈர்க்க, இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது.

VJ Manimegalai and Hussain Move Into Their Dream Home Housewarming Photos Win Hearts

முதலில் விஜே மணிமேகலை மற்றும் உசேன் காதலுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது மதம் தான். மணிமேகலை இந்து குடும்பத்தைச் சேர்ந்தவர், உசேன் இஸ்லாமியர் என்பதால் குடும்பத்தினர் இந்த காதலுக்கு மிகக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர். குடும்பத்தினர் தங்களது காதலை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதைப் புரிந்துகொண்ட மணிமேகலை, ஒரு துணிச்சலான முடிவை எடுத்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி, வீட்டை விட்டு வெளியேறி உசேனைப் பதிவுத் திருமணம் செய்துகொண்டார். மிகவும் எளிமையான முறையில் நண்பர்கள் முன்னிலையில் இந்த திருமணம் நடந்தது.

மக்கள் ஆதரவு: திருமணத்திற்குப் பிறகு ஆரம்பத்தில் இவர்களது வாழ்க்கை எளிதாக இருக்கவில்லை. கையில் போதிய பணவசதி இல்லாமல், குடும்பத்தின் ஆதரவும் இல்லாமல் வாடகை வீட்டில் தங்களது வாழ்க்கையைத் தொடங்கினர். ஆனால், உசேன் - மணிமேகலை ஜோடி தங்களது உழைப்பால் மெல்ல மெல்ல உயர்ந்தனர். விஜய் டிவியில் நுழைந்த பிறகு மணிமேகலையின் புகழ் உச்சத்தைத் தொட்டது. இருவரும் இணைந்து தொடங்கிய 'Hussain Manimegalai' யூடியூப் சேனல் இவர்களுக்குப் பெரிய பிளஸ் ஆக அமைந்தது. இவர்களது எதார்த்தமான வீடியோக்கள் ரசிகர்களை மொத்தமாக சர்ப்ரைஸ் ஆக்கியது.

VJ Manimegalai and Hussain Move Into Their Dream Home Housewarming Photos Win Hearts

முன் உதாரணம்: தங்களது கடின உழைப்பால் சொந்தமாக சொகுசு கார், சென்னைக்கு அருகில் விவசாய நிலம், மற்றும் பண்ணை வீடு கட்டும் அளவிற்குப் பொருளாதார ரீதியாக உயர்ந்தனர். ஆரம்பத்தில் இவர்களுடன் பேசாமல் இருந்த மணிமேகலையின் குடும்பத்தினர், தற்போது இவர்களது காதலைப் புரிந்து கொண்டு சுமூகமான உறவில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மதம், குடும்ப எதிர்ப்பு, ஆரம்பகாலப் போராட்டங்கள் என அனைத்தையும் தாண்டி, "உண்மையான காதல் இருந்தால் வாழ்க்கையில் எதையும் சாதிக்கலாம்" என்பதற்கு உசேன் - மணிமேகலை ஜோடி ஒரு சிறந்த உதாரணம்.

கிரகபிரவேசம்: ஏற்கனவே குறிப்பிட்டது போல், தனது காதல் கணவருடன் இணைந்து தனது கனவு வீட்டைக் கட்டி, கிரகபிரவேஷமும் ஜம்முனு நடத்தி முடித்துவிட்டார். இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மணிமேகலை பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்த பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Read more about: instagram vj manimegalai vijay tv
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X