கண் கலங்கிய மணிமேகலை.. ஜீ தமிழில் பட்டுனு இப்படி உண்மையை சொல்லிட்டாரே!
சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த VJ மணிமேகலை தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியை மிர்ச்சி விஜய்யுடன் சேர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சியில் நடுவர்களில் ஒருவரான பாபா மாஸ்டர் மணிமேகலையை கலாய்க்கும் வீடியோவும் அதற்கு செய்யும் லூட்டிகளும் சமீபத்தில் வெளியாகி டிரெண்டானது. இதனிடையே மணிமேகலை டான்ஸ் ஜோடி நிகழ்ச்சியில் மனம் உடைந்து கண்ணீர் விட்டு அழும் காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது. இதற்கு அவரது ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்துள்ளனர்.
தீராத பிரச்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் விஜே மணிமேகலை தொகுப்பாளினியாக இருந்தபோது, நிகழ்ச்சிக்கு போட்டியாளராக வந்த ஒரு தொகுப்பாளர் ஒருவர் என்னை வேலை செய்ய விடாமல் தடுக்கிறார். நான் வாங்கும் சம்பளத்திற்கு வேலை செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால், அவர் சொல்வது தான் நடக்க வேண்டும் என்று எனது வேலையில் குறுக்கிடுகிறார். எனக்கு சுயமரியாதை இருக்கிறது. நான் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுகிறேன் எனக் கூறி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகினார்.

ஆனால், மணிமேகலை தொகுப்பாளினி பிரியங்காவைத்தான் சொல்கிறார் என்று சமூக வலைதளங்களில் மணிமேகலையின் ரசிகர்கள் பலரும் பிரியங்காவை விமர்சித்தனர். ஆனால், இந்த விவகாரத்தில், விஜய் டிவி பிரபலங்கள் பலரும் பிரியங்காவிற்கு ஆதரவு தெரிவித்து பதிவிட்டனர். பின்னர் விஜய் டி.வியில் ஒளிபரப்பாகும் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்காத மணிமேகலை ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
புதிய வீடு: டான்ஸரான ஹூசைனை மணிமேகலை காதலித்து திருமணம் செய்துகொண்டார். மணிமேகலை மற்றும் ஹூசைனின் பெற்றோர் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், நண்பர்கள் முன்னிலையில், திருமணம் செய்துகொண்டனர். படிப்படியாக வாழ்வில் முன்னேற்றம் கண்டு வரும் மணிமேகலை சமீபத்தில் பெரிய அபார்ட்மெண்டில் சொந்த வீடு ஒன்றை வாங்கியுள்ளார். இதுகுறித்த அறிவிப்பை அவரே வெளியிட்டார். முன்னதாக புதிய கார் ஒன்றை வாங்கியதாகவும் தெரிவித்தார். இவர்களை பார்த்து பலரும் சூர்ய வம்சம் ஜோடி என புகழ தொடங்கினர்.

கண்ணீர் விட்ட மணிமேகலை: கடந்த வாரம் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி நிகழ்ச்சியில் மணிமேகலை கண்கலங்கி உடைந்து பேசும் வீடியோ வைரலானது, அந்த வீடியோவில், நான் கடந்த 8 வருடமாக தொகுப்பாளராக இருக்கிறேன். ஒரு காமெடி நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தபோது, இவங்க ஆங்கர் லீட் கொடுப்பாங்க, லிங்க் கொடுப்பாங்க, இவங்கள பர்ஃபார்ம் பண்ண விட்டா எப்படி பண்ணுவாங்க என பலரும் கிண்டல் செய்தார்கள். ஆனால், இப்போ மணிமேகலை சூப்பரா perform பண்ணுவாங்க, அவங்களுக்கு ஆங்கரிங் வருமா சொல்லும் அளவிற்கு இப்போ மாறிவிட்டது. நம்பிக்கை வைத்து உழைத்தால் எதையும் செய்யலாம் என கண்கலங்கி பேசினார். தற்போது இதுதொடர்பான வீடியோ இணயத்தில் வைரலாகி வருகிறது.
ரசிகர்கள் ஆறுதல்: இந்த வீடியோவை பார்த்த அவரது ரசிகர்கள் ஐ லவ் மணிமேகலை. நீங்க எதார்த்தமாக பேசுகிறீர்கள். கவலைப்படாதீங்க நீங்க மேலும் வளர வேண்டும் என்றும் உங்களுக்காக நாங்க இருக்கோம் என்றும் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











