இந்த உலகமே எதிர்த்தாலும் உன்னை நீ நம்பு... அஜித் பட பாணியில் கெத்து காட்டும் மணிமேகலை!

சென்னை: சன் டி வி தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக கரியரை தொடங்கி படிப்படியாக உயர்ந்து பலருக்கும் எடுத்துக்காட்டாக இருக்கிறார் மணிமேகலை. சமீபத்தில் சொந்தமாக வீடு, கார் என அசத்தி வருகிறார். தற்போது அவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில், எல்லோரும் புருவம் உயர்த்தும் வகையில் மணிமேகலை போட்டிருக்கும் போஸ்ட்டை பார்த்து அவரது ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அப்படி என்ன செய்துவிட்டார் என்பதை இதில் காணலாம்.

காதல் திருமணம்: சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக இருந்த மணிமேகலை, அவர் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் ராகவா லாரன்ஸ் மாஸ்டருடன் ஹூசைன் நடனம் ஆடியுள்ளார். இதை பார்த்து இம்ப்ரஸ் ஆன மணிமேகலை ஹூசைனுடன் பேச ஆசைப்பட்டுள்ளார். ஆனால் அவரது தொலைபேசி எண் கிடைக்கவில்லை. பிறகு, இருவருக்குமான சந்திப்பு ஏற்பட்டு நட்புடன் பேசி பழகி காதலிக்க தொடங்கினர். ஆனால், இவர்களது காதல் திருமணத்திற்கு இருவரது வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களது எதிர்ப்பை தொடர்ந்து மணிமேகலை - ஹூசைனும் அவரது நண்பர்கள் உறவினர்கள் முன்னிலையில் கடந்த 2017ல் ரிஜிஸ்டர் மேரரேஜ் செய்துகொண்டனர். எவ்வளவு போராடியும் எனது தந்தையின் மாற்ற முடியவில்லை. எனது குடும்பத்தை எதிர்த்து என் காதலனை கரம் பிடித்துள்ளேன். என்றாவது ஒருநாள் என் தந்தையின் மனம் மாறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன் என மனம் உருக தெரிவித்திருந்தார்.

vj-manimegalai-got-best-anchor-award

சொந்த வீடு: யாருடைய துணையும் இன்றி நானும் எனது காதல் கணவனும் போராடி இந்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என மன வேதனையுடன் மணிமேகலை தெரிவித்திருந்தார். முன்னதாக தனது சொந்த ஊரில் பண்ணை வீடு ஒன்றை கட்டியிருக்கிறார். இதைத்தொடர்ந்து சொந்தமாக கார், பைக் வாங்கியதையும் தனது சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து கடந்த மாதம் சென்னையில், ப்ரீமியம் அபார்ட்மென்ட் வாங்கி புதுமனை புகுவிழா நடத்தினார். இதுதொடர்பான வீடியோவையும் சமூகவலைதளத்தில் பகிர்ந்தார். அப்போது "ஸ்ரீராம ஜெயம்.. மாஷா அல்லாஹ்" என இரு மதக் கடவுள்களையும் குறிப்பிட்டு இந்த வாழ்க்கையை அமைத்து கொடுத்ததற்கு நன்றி எனவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

vj-manimegalai-got-best-anchor-award

விஜய் டிவினாலே தொல்லைதான்: குக் வித் கோமாளி பஞ்சாயத்திற்கு பிறகு விஜய் டிவியில் இருந்து விலகிய மணிமேகலை, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியை விஜய்யுடன் சேர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி தொடங்கி 3 வாரத்தில் ஹிட் நிகழ்ச்சியாக மாறியிருக்கிறது. நிகழ்ச்சியின் போது மணிமேகலை கண்டபடி உளருவதை புரோமோ வீடியோவாக வெளியிட்டு டிஆர்பி-யும் எகிற வைக்கிறது. நேற்று வெளியான புரோமோவில் மணிமேகலை விஜய்யிடம் விஜய் டிவி என்றாலே பிரச்னைதான் என கூறியுள்ளார். இதை கவனித்த விஜய் உடனடியாக விஜய்யிடம் இப்ப என்ன சொன்ன.. அதை திரும்ப சொல்லு நீதான் தைரியமான ஆளாச்சே என கேட்க. அப்போது மணிமேகலை சிரித்து மழுப்பி விடுகிறார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

vj-manimegalai-got-best-anchor-award

விருது பெற்ற மணிமேகலை: ஆடி பாடி கலகலப்பாக இருக்கும் மணிமேகலைக்கு She India குழுவினர் சிறந்த தொகுப்பாளினிக்கான விருதை வழங்கி கெளரவித்திருக்கிறது. விருது பெற்ற கையோடு மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். உலகம் உன்னை எதிர்க்கும் போதும் உன்னை நீயே நம்பு போதும் என கேப்சன் போட்டு பதிவிட்டிருக்கிறார். இதற்கு ரசிகர்கள் மிகுந்த வரவேற்பு அளித்து ஆரவராத்துடன் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X