ஸ்ரீராம ஜெயம்.. மாஷா அல்லாஹ்.. சென்னையில் அபார்ட்மெண்ட் வாங்கிய மணிமேகலை.. அந்த கிராமத்து வீடு?
சென்னை: சன் மியூசிக் தொகுப்பாளினியாக இருந்து வந்த மணிமேகலை விஜய் டிவிக்கு சென்று வேறலெவலில் பாப்புலர் ஆனார். அதிலும், குக் வித் கோமாளி ஷோவில் கோமாளியாக மணிமேகலை அடித்த லூட்டி எல்லாம் ரசிகர்களை செம என்டர்டெயின் செய்தது. அதைவிட குக் வித் கோமாளி நிகழ்ச்சியை விட்டு வெளியேறி மீண்டும் தொகுப்பாளினியாக உள்ளே வந்து அங்கேயும் பிரியங்காவுடன் சண்டைப் போட்டு விஜய் டிவியை விட்டு மொத்தமாக மணிமேகலை வெளியேறிய சம்பவங்கள் எல்லாம் சோஷியல் மீடியாவில் மிகப்பெரிய அதிர்வலைகளை கிளப்பின.
வெறும் 10 ஆயிரம் ரூபாய் வாடகை கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டு வந்த நிலையில், மணிமேகலை கிராமத்தில் சொந்தமாக வீடு கட்டி வருவதாக வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து வந்த நிலையில், திடீரென தற்போது சென்னையிலேயே ப்ரீமியம் அபார்ட்மென்ட் வாங்கி புதுமனை புகுவிழாவே நடத்தியுள்ளார்.

அதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ள மணிமேகலை கொடுத்திருக்கும் கேப்ஷன் தான் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
ஸ்ரீராம ஜெயம்.. மாஷா அல்லாஹ்: இந்து பெண்ணான மணிமேகலை இஸ்லாமியரான உசைனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். ஆனால், இரு மதத்தையும் இருவரையும் தொடர்ந்து வழிபட்டு தமிழ்நாட்டில் மத வேறுபாடுகள் எல்லாம் கிடையவே கிடையாது என்பதற்கு முன்னுதாரணமாக திகழ்கிறார் மணிமேகலை. அதன் வெளிப்பாடாகவே கேப்ஷனில் ”ஸ்ரீராம ஜெயம்.. மாஷா அல்லாஹ்” என மணிமேகலை இரு மதக் கடவுள்களையும் குறிப்பிட்டு தங்களுக்கு இப்படியொரு வாழ்க்கையை அமைத்து கொடுத்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

சென்னையில் புது வீடு: விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மணிமேகலை உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் தொடர்ந்து பல கலை நிகழ்ச்சிகளையும் சினிமா நிகழ்வுகளையும் தொகுத்து வழங்கி சம்பாதித்து வருகிறார். சமீபத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு தனது கார், பைக் மற்றும் ஜல்லி அரைக்கும் எந்திரத்துக்கு எல்லாம் பூஜை போட்ட போட்டோக்களை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில், தற்போது சென்னையில் ப்ரீமியம் அபார்ட்மெண்ட் வாங்கி குடியேறியுள்ளதாக புதுமனை புகுவிழா புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்கள் மற்றும் பிரபலங்களின் வாழ்த்துகளை பெற்றுள்ளார்.
10 ஆயிரம் வாடகைக்கே கஷ்டப்பட்டேன்: உசைனை திருமணம் செய்துக் கொண்டு வாழ்ந்து வரும் நாளில் இருந்து என்னை பற்றி உங்கள் அனைவருக்குமே தெரியும். ஆரம்பத்தில் 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து இதே சென்னையில் வாடகைக்கு வீடு எடுக்கவே கஷ்டப்பட்டேன். இன்று சென்னையில் எங்களுக்கென ஒரு ப்ரீமியம் அபார்ட்மெண்ட் கிடைத்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு இந்த வீட்டுக்காக அட்வான்ஸ் கொடுத்துவிட்டு வீடு கையில் எப்போது கிடைக்கும் என காத்திருந்தேன். இன்று சூப்பராக வீடு கிடைத்ததில் எனக்கும் உசைனுக்கும் ரொம்பவே சந்தோஷம். எங்களை வாழ்ந்துங்கள் நண்பர்களே என மணிமேகலை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டுள்ளார்.

கிராமத்தில் பண்ணை வீடு: மணிமேகலை மற்றும் உசைன் சொந்த ஊரில் வீடு ஒன்றை கஷ்டப்பட்டு கட்டி வருவதாக சில போஸ்ட்டுகளை முன்னதாக பகிர்ந்து வந்த நிலையில், திடீரென சென்னையிலும் ஒரு வீடு வாங்கியிருப்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அப்போ அந்த கிராமத்து வீடு பண்ணை வீடாக ரெடியாகுதா மணிமேகலை என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











