சரத்குமார் காலில் விழுந்த மணிமேகலை.. வரலட்சுமி கொடுத்த ரியாக்ஷன்.. சின்ராசு இன்னும் மாறலை
சென்னை: இயக்குநர் விக்ரமன் இயக்கத்தில் சரத்குமார், தேவயாணி நடிப்பில் வெளியான சூர்ய வம்சம் திரைப்படம் எவர்க்ரீன் ஹிட் படமாக இருக்கிறது. இப்படத்தில் சரத்குமார் சின்ராசு கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபலம் அடைந்தார். இதில் இரண்டு கதாப்பாத்திரங்களில் வந்து அசத்தியிருப்பார். இப்போதும் தொலைக்காட்சிகளில் பார்த்து ரசிக்க கூடிய படமாக சூர்ய வம்சம் இருக்கிறது. இந்நிலையில், விஜே மணிமேகலை சூர்ய வம்சம் படத்தில் ஒரு சீனை ரீ கிரியேட் செய்திருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதற்கு வரலட்சுமி சரத்குமார் கொடுத்த ரியாக்ஷயனும் ரசிக்கும் படியே இருக்கின்றன.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி ஹிட் நிகழ்ச்சியாக மாறியிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் நடிகை சினேகா, வரலட்சுமி சரத்குமார், மாஸ்டர் பாபா பாஸ்கர் ஆகியோர் நடுவர்களாக இருக்கின்றனர். மேலும், இந்நிகழ்ச்சியை ஆர்.ஜே.விஜய்யும், விஜே மணிமேகலையும் தொகுத்து வழங்கி வருகின்றனர். டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் மணிமேகலை செய்யும் ஒவ்வொன்றும களேபரமாகத்தான் இருந்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் மாஸ்டர் பாபா பாஸ்கர் நடனம் குறித்து பேசிய போது மணிமேகலை மாஸ்டர் நான் ஒரு நடன கலைஞருக்கு வாழ்க்கை கொடுத்திருக்கேன் அதை மறந்துடாதீங்க கலகலப்பை ஏற்படுத்தினார்.

விஜய் டிவி பிடிக்காது: விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்தவர் மணிமேகலை. ஆனால், அந்நிகழ்ச்சியில் ஏற்பட்ட பிரச்னைக்கு பிறகு முழுவதுமாக விஜய் டிவியை விட்டு ஒதுங்கினார். தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடைபெறும் டான்ஸ் ஜோடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இதனிடையே, நிகழ்ச்சியின் நடுவே விஜய்யும் மணிமேகலையும் சேர்ந்து செய்யும் லூட்டிகளை பார்க்க சகிக்காது. அந்த அளவிற்கு ஒருவரை ஒருவர் மாறி மாறி கலாய்த்துக்கொள்வார்கள். அந்த வகையில் சமீபத்தில் விஜய் நடனம் குறித்து பேசும் போது இதற்குத்தான் விஜய் டிவியே பிடிக்காது என கூறிய மணிமேகலை திடீரென உஷார் ஆகி விஜய் பெயரே பிடிக்காது என தெரிவித்தார்.

சரத்குமார் காலில் விழுந்த மணிமேகலை: சரத்குமாரின் மகளான வரலட்சுமி கடந்தாண்டு மும்பையை சேர்ந்த
நிக்கோலாய் சச்தேவ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் சமீபத்தில் அளித்த பேட்டியும் வைரல் ஆனது. நிக்கோலாயும் எனது தந்தையும் நல்ல நண்பர்களாக மாறிவிட்டார்கள். என்னை மதிப்பதில்லை என்றும் ஜாலியாக தெரிவித்தார். இந்நிலையில், டான்ஸ் ஜோடி நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நடிகர் சரத்குமாரும், வரலட்சுமியின் கணவர் நிக்கோலாய் சச்தேவும் வந்தனர். கலகலப்பாக சென்ற இந்த நிகழ்ச்சியில் சரத்குமார் சூர்ய வம்சம் படம் குறித்து மனம் திறந்து பேசினார். அப்போது பக்கத்தில் இருந்த விஜே மணிமேகலை திடீரென சின்ராசு சார்னா சின்ராசு சார்தான் எனக் கூறி தனது கையில் இருந்த மோதிரத்தை கீழே போட்டு சரத்குமாரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார்.
நட்சத்திர ஜன்னலில்: பின்னர் சரத்குமாரும் மணிமேகலைக்கு ஆசீர்வாதம் செய்தார். சூர்ய வம்சம் படத்தில் மருமகளான தேவயாணி அப்பா சரத்குமாரின் காலில் விழும் சீனை டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி மேடையில் மணிமேகலை ரீ கிரியேட் செய்திருக்கிறார். தற்போது இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சூர்ய வம்சம் சின்ராசி காலில் ஆசீர்வாதம் வாங்கியாச்சு, இது ஒரு எமோஷன் என்றும் வீடியோவில் மணிமேகலை தெரிவித்திருக்கிறார். அதன் பின்னர், நட்சத்திர ஜன்னலில் பாட்டிற்கு சரத்குமார் அவரது மகள் வரு, மருமகன் நிக்கோலாய் ஆகியோருடன் நடனம் ஆடியுள்ளார்.


Click it and Unblock the Notifications











