வரம்பு மீறிய தயாரிப்பாளர்கள்… பறிபோனது பட வாய்ப்பு… விஜே பார்வதியின் சர்ச்சை பேச்சு!

சென்னை : பிரபல யூடியூப் சேனல் ஒன்றில் தொகுப்பாளினியாக பணியாற்றி ரசிகர்களிடையே பிரபலமானவர் தான் விஜே பார்வதி.

பிரபலமான ரேடியோவில் ஆர்ஜேவான இவர், தெருக்கூத்து என்ற நிகழ்ச்சியின் மூலமாக பட்டி தொட்டி எங்கும் ஏகப்பட்ட ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ளார்.

சர்வைவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய விஜே பார்வதி, பல தயாரிப்பாளர்கள் படத்தில் நடிக்க அழைப்பதாகவும், அதே சமயம் தன்னிடம் அத்துமீறி நடக்க முயல்வதாகவும் சர்ச்சைக்குரிய கருத்தை கூறியுள்ளார்.

சர்வைவர்

சர்வைவர்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜே பார்வதி. நிகழ்ச்சி தொடங்கிய 3 நாளிலே பஞ்சாயத்தை கூட்டினார். மணலில் விழுந்ததை பார்த்து ஸ்ருஷ்டி சிரித்தது தனக்கு ஹர்ட் ஆகிவிட்டது என கூறி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நீ சிரித்ததால் தான் நான் சிரித்தேன் என ஸ்ருஷ்டி கூறுகிறார். அதே போல 'மேகரா இருக்குனு நடிக்குறீங்களா' என தன்னை பார்வதி பேசியதாக புகார் சொன்னார் ஸ்ருஷ்டி.

மூன்றவது உலகத்தில்

மூன்றவது உலகத்தில்

ஒரு சின்ன விஷயத்தை ஊதி பெரிதாக்கி சர்வைவரில் பிரச்சனையை கிளப்பிய பார்வதி எலிமினேட் ஆகி 3வது உலகத்தில் வசித்து வந்தார். இதையடுத்து, நேற்று விஜயலட்சுமி எலிமினேட்டாகி மூன்றாம் உலகத்திற்கு வந்தார்.

வெளியேறினார்

வெளியேறினார்

ஏற்கனவே 3ம் உலகத்தில் இருந்த விஜே பார்வதி, காயத்ரி, விஜயலட்சுமி ஆகிய மூவருக்கும் இடையே வைத்த லாக் டாஸ்கில் விஜயலட்சுமி பாதுகாக்கப்பட்டார். பின்னர் பார்வதிக்கும் காயத்ரிக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் பார்வதி தோற்றுவிட்டதால் இதையடுத்து பார்வதி சர்வைவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

தவறாக நடக்க முயன்றனர்

தவறாக நடக்க முயன்றனர்

சர்வைவர் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பார்வதி ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில்,தனக்கு பல படவாய்ப்புகள் வந்ததாகவும், அதில் தயாரிப்பாளர்கள் பலர் என்னிடம் தவறாக நடக்க முயன்றதாகவும் இதனால் நான் அந்த வாய்ப்புகளை வேண்டாம் என்று கூறிவிட்டேன். இதனால்தான் எனக்கு பட வாய்ப்பு வரவில்லை என்று கூறியுள்ளார்.

நெட்டிசன்ஸ் கேள்வி

நெட்டிசன்ஸ் கேள்வி

சர்வைவரில் சின்ன விஷயத்தை ஊதி பெரிதாக்கும் பார்வதி இந்த விஷயத்தை எப்படி கூறாமல் இருந்தார் என்றும், பட வாய்ப்பு இல்லை என்பதை நாசூக்காக நேரடியாக சொல்லாமல் எப்படி சொல்கிறார் என்றும் விஜே பார்வதியை நெட்டிசன்ஸ் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X