Don't Miss!
- Finance
மார்ச் காலாண்டு முடிவுகள்.. பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியது..!
- Sports
சிஎஸ்கேவுக்கு எதிராக செய்யனுமா? முடியவே முடியாது..! கிறிஸ் கெயிலிடம் பேசிய சத்குரு ஜக்கி வாசுதேவ்
- News
ஷீனா போரா கொலை வழக்கு: இந்திராணி முகர்ஜிக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்
- Automobiles
ஒரு சில ஊர்ல கன்னாபின்னானு ஓட்றாங்க... எந்த நகரில் நல்ல கார் டிரைவர்கள் அதிகம் இருக்கறாங்க தெரியுமா?
- Technology
விவோ ஒய்75 4ஜி விரைவில் இந்தியாவில் அறிமுகம்: 44 எம்பி செல்பி கேமரா அம்சம்., பட்ஜெட் விலை!
- Lifestyle
வெங்காய சட்னி
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அப்போ சிருஷ்டி.. இப்போ ஐஸ்வர்யா.. சண்டை போட்டே சர்வைவ் பண்ணலாம்னு நினைக்கிறாரா பார்வதி?
சென்னை: சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியை முடிந்தவரை பிக்பாஸ் நிகழ்ச்சியாக மாற்ற முயற்சித்து வரும் ஒரே கேரக்டர் என்றால் அது விஜே பார்வதி மட்டும் தான் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
ஆள் பலத்தையும் அறிவு பலத்தையும் பயன்படுத்தி விளையாட வேண்டிய சர்வைவர் ஷோவில் சண்டை போட்டே சர்வைவ் பண்ணி விடலாம் என நினைத்து விட்டாரா பார்வதி என ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
இந்த வாரம் எப்படியாவது பார்வதியை எலிமினேட் செய்து விடுங்க என ஏகப்பட்ட ட்ரோல் மீம்களும் பறக்கின்றன.
“சர்வைவர்“ நிகழ்ச்சியில் நானா?... அடப்பாவிகளா…ஷாக்கான டிடி!

சர்வைவர் தமிழ்
பல வெளிநாட்டு ரியாலிட்டி ஷோக்கள் தமிழில் உருவாக்கப்பட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றன. பிக் பாஸ், மாஸ்டர் செஃப் ஷோக்களை தொடர்ந்து சர்வைவர் நிகழ்ச்சியும் தற்போது தமிழில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பி உள்ளது.

போட்டியாளர்களை பற்றி
தினமும் நட்சத்திரங்களின் நிஜ முகங்களை பார்க்கும் ரசிகர்கள் அவர்கள் செய்யும் சின்ன சின்ன விஷயங்களையும் நுணுக்கமாக நோட் பண்ணி பாராட்டியும் கலாய்த்தும் வருகின்றனர். சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியில் நல்லா போட்டி போடும் போட்டியாளர்களை விட சண்டை போடும் பார்வதி தான் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறார்.

ஜூலியுடன் ஒப்பிட்டு
சர்வைவர் தமிழ் நிகழ்ச்சி ஆரம்பித்த உடனே சண்டை போட்ட விஜே பார்வதியை பிக் பாஸ் ஜூலியுடன் ரசிகர்கள் ஒப்பிட்டு மீம்களை போட ஆரம்பித்தனர். தொடர்ந்து விஜே பார்வதியை டார்கெட் செய்து நெட்டிசன்கள் ஓட்ட அவரும் பல கன்டன்ட்களை கொடுத்து வருகிறார்.

சிருஷ்டியுடன் சண்டை
மேகா, தர்மதுரை உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை சிருஷ்டி டாங்கே சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். விஜே பார்வதி ஓடி வந்து விழுந்ததை பார்த்து அவர் சிரித்து விட்டார் என அவருடன் பார்வதி போட்ட சண்டை தான் பலரையும் அந்த நிகழ்ச்சி பக்கமே திருப்பியது.

ஓவர் புலம்பல்
போட்டியாளர்கள் தாங்கள் செய்யும் ஒவ்வொன்றையும் தனியாக கேமரா முன்பு அமர்ந்து கொண்டு அப்படியே ஒப்பிக்கும் காட்சிகள் சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியின் ஒரு அங்கமாகவே மாறி விட்டது. இதில், எக்ஸ்ட்ரா பர்ஃபார்மன்ஸ் கொடுப்பது விஜே பார்வதி மட்டுமே என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

பிக் பாஸ்னு நினைச்சிகிட்டு
பிக் பாஸ் நிகழ்ச்சி என நினைத்து கொண்டு இந்த நிகழ்ச்சியில் தெரியாமல் விஜே பார்வதி கலந்து கொண்டார் என ஏகப்பட்ட நெட்டிசன்கள் மீம் போட்டு கலாய்த்து வந்த நிலையில், வேடர்களின் இந்த வார கேப்டன் அம்ஜத் கானே இது ஏதோ காலையில் பாட்டுப் போட்டா ஆடணும், சமைத்து, சாப்பிட்டு தூங்கும் ஷோ என நினைத்து சிலர் வந்துட்டாங்க என மறைமுகமாக பார்வதியை கலாய்த்தது மேலும், ரசிகர்கள் மத்தியில் விஜே பார்வதியின் மீதான எதிர்மறை எண்ணத்தை அதிகரிக்க செய்துள்ளது.

ஐஸ்வர்யாவுடன் மோதல்
ஆண் போட்டியாளர்களை விட பெண் போட்டியாளர்களில் பார்வதிக்கு பிடிக்காத நபர் என்றால் அது ஐஸ்வர்யா தான். எல்லா டாஸ்க்கிலும் முதல் ஆளாக அவர் போவது தனக்கு பிடிக்கவில்லை என்றே கூறிய நிலையில், தற்போது அவருடன் இரவில் போட்ட சண்டை மீண்டும் பெரிதாக வெடித்துள்ளது.

யார் எலிமினேஷன்
கடந்த வாரம் சிருஷ்டி டாங்கே, இந்திரஜா மற்றும் காயத்ரி ரெட்டி ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டு மீண்டும் மறு வாய்ப்பு வழங்கப்பட்டு, கடைசியில் சிருஷ்டி மூன்றாம் உலகத்தை விட்டே வெளியேறிய நிலையில், இந்த வாரம் யார் எலிமினேட் ஆக போறா என்கிற கேள்வி எழுந்துள்ளது. ரசிகர்கள் பலரும் விஜே பார்வதியின் பெயரைத் தான் சொல்லி வருகின்றனர். வேடர்கள் அணியினர் ஒட்டுமொத்தமாக சேர்ந்து அவருக்கு எதிராகத் தான் வாக்கு அளிப்பார்கள் என்பதும் தெரிகிறது.

தலைவரிடமே சண்டை
மேலும், நேற்றைய எபிசோடில் இந்த வார வேடர்கள் தலைவர் அம்ஜத் கானிடமே நேரடியாக நீங்க தான் என்ன அப்படி பேசுறீங்க என பார்வதி சண்டை போட்ட நிலையில், மொத்த அணியும் ஓட்டுப் போடவில்லை என்றாலும், அவர் ஒருவர் ஓட்டுப் போட்டாலே மூன்றாம் உலகத்துக்கு விஜே பார்வதி பார்சல் செய்யப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வைவர் தமிழில் என்ன ட்விஸ்ட் காத்திருக்கிறது என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.