கல்யாணத்துக்கு முன்னாடியே ஜாலி டூரா? வி.ஜே பார்வதி - கம்ருதீனின் கொடைக்கானலில் செம ரொமான்ஸ்!

சென்னை: தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் எப்போதுமே தங்களது அதிரடிச் செயல்களால் பரபரப்பை ஏற்படுத்தும் ஜோடிகளுக்குத் தமிழ் ரசிகர்களிடம் பஞ்சமே இல்லை. அந்த வகையில், பிக் பாஸ் வீட்டின் ரெட் கார்ட் ஜோடியான வி.ஜே பார்வதி மற்றும் நடிகர் கம்ருதீன் இருவரும் தற்போது ஜாலியாகக் கொடைக்கானலுக்கு டூர் சென்று இருக்கிறார்கள்.

தொகுப்பாளினியான வி.ஜே பார்வதி, ஆரம்பத்தில் பொதுமக்களிடம் மிகவும் விவகாரமான மற்றும் ஏடாகூடமான கேள்விகளைக் கேட்டு இணையத்தில் பிரபலமானவர். அதனைத் தொடர்ந்து இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்து கொண்டார். அதே பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கம்ருதீனும் ஒரு போட்டியாளராகக் கலந்துகொண்டார். பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும்போதே இருவருக்குள் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தீவிரமாகக் காதலிக்கத் தொடங்கினார்கள். இவர்களின் இந்த காதல் காரணமாக பிக் பாஸ் வீட்டுக்குள் பலவிதமான சண்டைகளும், சர்ச்சைகளும் வெடித்தன.

ரெட் கார்ட்: பிக் பாஸ் வீட்டுக்குள் பார்வதி என்ன சொல்கிறாரோ, அதன்படியே கண்ணை மூடிக்கொண்டு கேட்டு நடந்து வந்தார் கம்ருதீன். இதன் உச்சகட்டமாக, பிக் பாஸ் வீட்டின் மிக முக்கியமான டாஸ்க்கான கார் டாஸ்கின் போது சக போட்டியாளரான சாண்ட்ராவை பார்வதியும் கம்ருதீனும் சேர்ந்து எட்டி உதைத்து காரை விட்டு வெளியே தள்ளினார்கள். இது பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் கண்டனத்தை ஏற்படுத்தியது. இதனால் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பார்வதி மற்றும் கம்ருதீன் இருவருக்குமே 'ரெட் கார்ட்' கொடுத்து வீட்டை விட்டு வெளியேற்றினார். அவர்கள் வெளியேறும் போது, அந்த பிக் பாஸ் சீசனின் டைட்டில் வின்னரான திவ்யா கணேஷ், கம்ருதீனிடம் தயவுசெய்து இந்த பார்வதியுடன் பிரண்ட்ஷிப் வச்சுக்காதே.. தள்ளி இரு என்று நேரடியாகவே அட்வைஸ் செய்தார்.

VJ Parvathy Kamruddin
Photo Credit:

இணை பிரியாத ஜோடிகள்: ஆனால், பிக் பாஸ் வின்னர் கொடுத்த அட்வைஸை எல்லாம் காற்றில் பறக்கவிட்ட கம்ருதீன், பார்வதியை விட்டு விலகவே இல்லை. பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியில் வந்த பிறகும் இருவருமே இணை பிரியாத ஜோடிகளாகப் பல இடங்களுக்கும் ஒன்றாகவே சுற்றித் திரிந்து வருகின்றனர். தற்போது பார்வதி தன்னுடைய அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராமில் காதலர் கம்ருதீனுடன் கொடைக்கானலுக்கு ஜாலியாக டூர் சென்றுள்ள வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும், திருமணமே செய்து கொள்ளாமல், அதற்குள் இப்படி கணவன்-மனைவி போல டூர் கிளம்பிவிட்டீர்களா? என்று கமெண்ட்களில் சரமாரியாகக் கேள்விகளை கேட்டுவருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X