ஆரம்பிச்சுட்டாங்கப்பா...சிருஷ்டி டாங்கேவுடன் மல்லுக்கட்டும் விஜே பார்வதி.. சூடு பிடிக்கும் சர்வைவர்!

சென்னை: சர்வைவர் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான புரமோக்கள் வெளியாகியுள்ளது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சர்வைவர் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

அமெரிக்க தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி 40 சீசன்களை கடந்தது சர்வைவர் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி பெரும் ஹிட்டானது.

சர்வைவர் - 90 நாட்கள்

சர்வைவர் - 90 நாட்கள்

இந்நிலையில் இந்த நிகழ்ச்சி முதல் முறையாக தமிழ் தொலைக்காட்சியான ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கி வருகிறார். 90 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

சர்வைவர் போட்டியாளர்கள்

சர்வைவர் போட்டியாளர்கள்

நடிகர் விக்ராந்த், நடிகை சிருஷ்டி டாங்கே, பெசன்ட் ரவி, அம்ஜத் கான், விஜே பார்வதி, லட்சுமி பிரியா, சிங்கப்பூர் ராப் பாடகர் லேடி காஷ், காயத்ரி ரெட்டி, உமாபதி ராமையா, நந்தா, விஜயலட்சுமி, இந்திரஜா சங்கர், சரண் சக்தி, நாராயணன் லக்கி, ராம் சி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

ரூ. ஒரு கோடி பரிசு

ரூ. ஒரு கோடி பரிசு

இதில் 90 நாட்கள் தாக்கு பிடிக்கும் போட்டியாளருக்கு சர்வைவர் டைட்டில் மற்றும் ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும். இதில் போட்டியாளர்கள் காடர்கள், வேடர்கள் என இரண்டு குழுக்களாக பிரிந்துள்ளனர். நேற்று கடலில் நிற்கும் படகில் வைக்கப்பட்டிருந்த பொருட்களை ஓடிப்போய் போட்டியாளர்கள் எடுக்க வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது.

பெனால்ட்டி டாஸ்க்

பெனால்ட்டி டாஸ்க்

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான புரமோவில் காடர்களுக்கும் வேடர்களுக்கும் பெனால்டி டாஸ்க் கொடுக்கப்படுகிறது. இதில் காடர்களில் இருந்து காயத்ரியும் வேடர்களில் இருந்து ஐஸ்வர்யாவும் பங்கேற்கின்றனர். இதில் ஒரு பக்கத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பாட்டிலை மற்றொரு பக்கத்தில் இருந்து அடிக்க வேண்டும்.

இரண்டாவது புரமோ வெளியானது

இரண்டாவது புரமோ வெளியானது

இதில் பாட்டில் மீது அடி விழாதப்படி அந்தப் பக்கத்தில் இருப்பவர் தடுக்க வேண்டும் என விதியை சொல்கிறார் தொகுப்பாளரான அர்ஜூன். இந்தப் போட்டி பரபரப்பாக நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து இரண்டாவது புரமோ வெளியாகி உள்ளது.

சிருஷ்டி டாங்கேவுடன் சண்டை

சிருஷ்டி டாங்கேவுடன் சண்டை

இதில் விஜே பார்வதி நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவுடன் சண்டை போடுவது தெரியவந்துள்ளது. அதாவது டாஸ்க்கின் போட்டியாளர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவர் ஓடி வருகின்றனர். அப்போது விஜே பார்வதி தடுமாறி விழுவதாக தெரிகிறது.

எதற்கு சிரிக்க வேண்டும்?

எதற்கு சிரிக்க வேண்டும்?

அப்போது அதனை வேடிக்கையாக பார்த்து சிரிக்கிறார் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே. பின்னர் எல்லாம் முடிந்த பிறகு போட்டியாளர்கள் ஒன்றாக அமர்ந்து பேசுகின்றனர். அப்போது தான் விழுந்த போது எதற்கு சிரிக்க வேண்டும் என சிருஷ்டி டாங்கேவிடம் சண்டை போட ஆரம்பிக்கிறார் விஜே பார்வதி.

ஹர்ட் ஆவது தெரியவில்லையா?

ஹர்ட் ஆவது தெரியவில்லையா?

அதுகுறித்து நடிகை ஸ்ருஷ்டி டாங்கே விளக்கம் அளித்தும் அதனை கேட்க மறுக்கும் பார்வதி, தான் ஹர்ட் ஆகிறேன் என்று உங்களுக்கு தெரியவில்லையா? ஒருவர் கீழே விழுந்து என்ன நடந்தாலும் நீங்கள் சிரித்துக் கொண்டேதான் இருப்பீர்களா என்று கேட்டு மல்லுக்கட்டுகிறார்.

தவிக்கும் சிருஷ்டி டாங்கே

தவிக்கும் சிருஷ்டி டாங்கே

இதனால் பதிலே சொல்ல முடியாமல் தவித்து போகிறார் சிருஷ்டி டாங்கே. இப்படியாக உள்ளது இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது புரமோ. ஏற்கனவே சர்வைவர் நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சியை போன்றே இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

2 நாட்கள்தான் ஒற்றுமை

2 நாட்கள்தான் ஒற்றுமை

இந்நிலையில் இதிலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடப்பதை போன்றே சண்டைகள் தொடங்கியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் இரண்டு நாட்கள் தான் ஒற்றுமையாக இருப்பீர்களா? அதன் பிறகு இப்படிதான் சண்டை போட்டு கொள்வீர்களா என கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X