கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும் கிழவியை தூக்கி மணையில் வை.. பிக் பாஸ் பார்வதி செய்த வேலை!

சென்னை: பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் டாப் போட்டியாளராக வரவேண்டிய பார்வதி தன்னுடைய செய்கையால் ரெட் கார்டை பெற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருக்கிறார். ரெட் கார்டு கொடுக்கப்பட்டு ஒரு வாரம் ஆன போதும் வெளியில் தலைகாட்டாத பார்வதி, தற்போது என்ன செய்திருக்கிறார் தெரியுமா?

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்தே, வீட்டில் எந்த வாக்குவாதம் வந்தாலும் அதில் மூக்கை நுழைத்துவிடுவார் பார்வதி. இதனால், ஒவ்வொரு ப்ரோமோவிலும் பார்வதியே இடம் பிடித்து இருந்தார். பார்வதி ப்ரோமோவில் இடம்பெற வேண்டும் என்பதற்காக தான் பல சண்டைகளை போடுவதாக பல விமர்சனங்கள் வந்தன. அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு வாரமும் விஜய் சேதுபதி பார்வதியை திட்டாத நாளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு ஒவ்வொரு வாரமும் அவரிடம் ஏதாவது ஒரு சேட்டையை செய்து வாங்கி கட்டிக்கொள்வார்.

Bigg Boss 9 VJ Parvathy instagram 9

ரெட் கார்ட்: பார்வதியின் செயல் விமர்சிக்க பட்டாலும், தொடர்ந்து ரசிகர்களிடம் ஆதரவை பெற்று எத்தனை முறை நாமினேட் செய்தாலும் அதிலிருந்து தப்பித்து வந்தார் பார்வதி. இதனால் நிச்சயமாக பார்வதி பைனல் லிஸ்டில் இடம்பெறுவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், டிக்கெட்டு டூ பினாலே கார் டாஸ்கில் சாண்ட்ராவை எட்டி உதைத்து வெளியே தள்ளினார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பலரையும் கொந்தளிப்பில் ஆழ்த்தியது. இதையடுத்து, பார்வதிக்கு மற்றும் அவருக்கும் உடந்தையாக இருந்த கம்ருதீனுக்கு ரெட் கார்ட் கொடுத்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றினார் விஜய் சேதுபதி.

கவலைப்படாத பார்வதி: ரெட் கார்ட் பெற்று வெளியே வந்த பார்வதி தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் தனக்கு ஆதரவாக வந்த மீம்ஸ்களை பதிவிட்டு, நான் பிக் பாஸ் டைட்டில் வின்னர் என பதிவிட்டு இருந்தார். இத்தனை நாட்களாக வெளியில் தலைகாட்டாமல் இருந்த பார்வதி, தற்போது தனது தோழி மற்றும் அம்மாவுடன் 'பராசக்தி' திரைப்படத்திற்கு சென்றுள்ளார். அந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சிகள் அவர் நடந்து கொண்ட முறை குறித்தும் பலரும் இணையத்தில் அவரை திட்டி கொண்டு இருக்கும் நிலையில், அதைப்பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் கூலாக தியேட்டரில் படம் பார்த்துள்ளார். இந்த போட்டோவை பார்வதியின் தோழி பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள், "கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும் கிழவியை தூக்கி மணையில் வை" என்பது போல பவிஜே பார்வதி ஜாலியாக படம் பார்க்க சென்று இருக்கிறார் என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X