அவ ஆரா பத்துக்கு பத்து.. பிக் பாஸ் பிரியங்காவோட டான்ஸ் பாருங்க.. அந்த சின்ன பொண்ணு செம க்யூட்!
சென்னை: முதல் திருமண வாழ்க்கையில் ஏகப்பட்ட சோகங்களை சந்தித்த பிரியங்கா தேஷ்பாண்டே, 2வதாக வஷி என்பவரை திருமணம் செய்துக் கொண்டு செம ஹேப்பியாக வாழ்ந்து வருகிறார். தனது உறவுக்கார குழந்தையுடன் அவர் ஹிப் ஹாப் ஆதியின் மீசையை முறுக்கு 2 படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு நடனமாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.
விஜய் டிவியில் டிடி நீலகண்டனுக்குப் பிறகு அதிகளவு ரசிகர்களை கவர்ந்த விஜே என்றால் அது பிரியங்கா தேஷ்பாண்டே தான். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குச் சென்று ரன்னர் அப் ஆகவும் 5வது சீசனில் கலக்கினார்.

பிக் பாஸுக்குப் பிறகும் மீண்டும் விஜய் டிவியிலேயே தொடர்ந்து ஏகப்பட்ட ரியாலிட்டி ஷோக்களை நடத்தி வருகிறார் பிரியங்கா தேஷ்பாண்டே.
2வது திருமணத்துக்குப் பிறகு ஹேப்பி: சமந்தா, அமலா பால், சம்யுக்தா சண்முகநாதன், செளந்தர்யா ரஜினிகாந்த் என பல பிரபலங்கள் முதல் திருமணத்தில் மனக்கசப்பு ஏற்பட்ட நிலையில், அந்த டாக்ஸிக் வாழ்க்கையில் இருந்து விலகி தங்களுக்கு பிடித்தது போல 2வது திருமணத்தை செய்துக் கொண்டு ஜாலியாக வாழ்ந்து வருகின்றனர். விஜய் டிவி பிரியங்கா தேஷ்பாண்டேவும் 2வது திருமணத்துக்குப் பிறகு செம ஜாலியாக வாழ்ந்து வருவதை அடிக்கடி வீடியோக்களாக வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்.
அவ ஆரா பத்துக்கு பத்து: மீசையை முறுக்கு 2 படத்தில் ஹிப் ஹாப் ஆதி மற்றும் கெத்திகா ஷர்மா நடனமாடிய அவ ஆரா பத்துக்கு பத்து பாடல் தான் தற்போது இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் டிரெண்டாகி வருகிறது. யூத் படத்தின் முட்ட கலக்கி பாடலுக்குப் பிறகு பலரும் இந்த பாடலுக்கு நடனமாடி வரும் நிலையில், பிரியங்காவும் தனது உறவுக்கார குழந்தையுடன் செம டான்ஸ் போட்டுள்ள வீடியோவை வெளியிட்டுள்ளார். வழக்கம் போலவே வீடியோவில் பிரியங்காவின் காமெடி சென்ஸ் அதிகமாகவே உள்ள நிலையில், ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரிப்பது உறுதி.
குழந்தை செம க்யூட்: விஜே பிரியங்காவுடன் அந்த குட்டிப் பொண்ணு செம க்யூட்டாக நடனமாடுவதை பார்த்து அந்த பொண்ணு வீடியோவையே தனியா விட்டு இருக்கலாம். ரொம்ப க்யூட்டா டான்ஸ் ஆடுது. கூட நீங்க வேற வந்து டான்ஸை கெடுக்குறீங்க என பிரியங்காவை நெட்டிசன்கள் ஜாலியாக கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











