Vj Priyanka: 2022லேயே மலர்ந்த காதல்.. வசியுடன் பிரைவேட் பார்ட்டி பாடலுக்கு வைப் பண்ண பிரியங்கா வீடியோ!

சென்னை: விஜய் டிவியின் செல்ல தொகுப்பாளினியாக வலம் வரும் பிரியங்கா தேஷ்பாண்டே திருமணம் நேற்று நடைபெற்ற நிலையில், சின்னத்திரை வட்டாரம் முழுக்கவே அவரது திருமணம் பற்றிய பேச்சுக்கள் தான் ஓடிக்கொண்டிருக்கின்றன. விஜே பிரியங்காவின் கணவர் யார் என நெட்டிசன்கள் அலசி ஆராய்ந்த நிலையில், அவர் பெயர் வசி என்பது தெரிய வந்தது. மேலும், அவர் ஒரு டிஜே என்றும் தனியாக பல கலை நிகழ்ச்சிகளை நடத்தும் நிறுவனத்தையே வைத்துள்ளார் என்றும் கூறுகின்றனர்.

பிக் பாஸ் பிரியங்கா கடந்த 2016ம் ஆண்டு பிரவீன் குமார் என்பவரை திருமணம் செய்த நிலையில், 2022ம் ஆண்டு தான் அவரை விட்டு பிரிந்ததாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், அதே 2022ம் ஆண்டே வசியுடன் பிரியங்கா ஆட்டம் போட்ட வீடியோவை வசி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார்.

Vj Priyanka love story She danced with DJ Vashi at 2022 party video goes trending

கடந்த 2022ம் ஆண்டு முதல் இருவரும் நட்பாக பழகி, அதன் பின்னர் காதலிக்கத் தொடங்கி தற்போது திருமணம் செய்துக் கொண்டு கணவன் - மனைவியாக மாறியுள்ளனர்.

பிக் பாஸ் ரன்னர் அப்: 1992ம் ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி பிறந்த பிரியங்கா தேஷ்பாண்டேவுக்கு வரும் 28ம் தேதி வந்தால் 33 வயதாகிவிடும். இந்நிலையில், 2வது திருமணத்தை நடத்தி முடித்துள்ள பிரியங்கா கடந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் போட்டியாளராக பங்கேற்று ரன்னர் அப் ஆனார். அந்த சீசனில் ராஜு ஜெயமோகன் டைட்டிலை வென்றார். அமீர், பாவனி, நிரூப், தாமரைச் செல்வி என பல போட்டியாளர்கள் பங்கேற்றனர். அமீர் மற்றும் பாவனி தொடர்ந்து பிரியங்காவின் உயிர் தோழர்களாகவே வலம் வருகின்றனர்.

2022ல் மலர்ந்த காதல்: முதல் திருமணம் பிரியங்காவுக்கு சரியாக அமையாத நிலையில், ரொம்ப நாட்களாக தனிமையில் வாடி வந்தார். கடந்த 2022ம் ஆண்டே தனது வருங்கால கணவரை சந்தித்துள்ளார் விஜே பிரியங்கா. டிஜே வசியுடன் பிரியங்கா தேஷ்பாண்டே நடனமாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்போதே டிஜே வசி ஷேர் செய்த நிலையில், தற்போது சமூக வலைதளத்தில் அந்த வீடியோவை ரசிகர்கள் அதிகளவில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

பிரைவேட் பார்ட்டி பாட்டுக்கு வைப்: சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடிப்பில் வெளியான டான் படத்தில் இடம்பெற்ற பிரைவேட் பார்ட்டி பாடலுக்கு டிஜே வசி பிரியங்காவுடன் இணைந்து ஆட்டம் போட்ட வீடியோவை இருவரது திருமணத்துக்குப் பிறகு பார்த்த ரசிகர்கள் 2022ம் ஆண்டு டிசம்பர் மாதமே இருவரும் ஒருவரை ஒருவர் தெரிந்துக் கொண்டு பழக ஆரம்பித்துவிட்டனர் எனக் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகிறனர்.

வசதியான பார்ட்டி தான்: விஜே பிரியங்கா தன்னை விட வசதியான பார்ட்டியைத் தான் 2வதாக திருமணம் செய்துக் கொண்டார் என்றும் Ciique 187 எனும் டிஜே நிறுவனத்தை நடத்தி வரும் வசி சாச்சி பல பிரபல திருமணங்களில் தான் டிஜேவாக பணியாற்றி வருகிறார் என்றும் பல நாடுகளுக்கும் சென்று டிஜே நிகழ்ச்சிகளை நடத்தி வசதியாக வாழ்ந்து வருபவர் என்று கூறுகின்றனர். பிரியங்கா திருமணத்தில் அமீர் - பாவனி பங்கேற்ற நிலையில், அவர்களுடைய திருமணத்தில் பிரியங்கா பங்கேற்ற பின்னர் தான் கணவருடன் ஹனிமூன் செல்வார் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X