ப்பா.. எங்க உட்கார்ந்து எப்படி ஓட்டுறாரு பாருங்க.. பைக் ஸ்டன்ட்டில் பட்டையைக் கிளப்பும் ரக்ஷன்!

சென்னை: விஜய் டிவி புகழ் விஜே ரக்‌ஷன் பைக் ஸ்டன்ட் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

குக் வித் கோமாளி உள்ளிட்ட பல பிரபல ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கி வருகிறார் விஜே ரக்‌ஷன்.

துல்கர் சல்மான் உடன் இணைந்து இவர் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் ஆனது.

விஜே ரக்‌ஷன்

விஜே ரக்‌ஷன்

ராஜ் டிவி, கலைஞர் டிவி என பல நிறுவனங்களில் வேலை பார்த்து வந்த விஜே ரக்‌ஷன் கலக்கப் போவது யாரு சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பின்னர் விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளராக மாறிய இவர் ஏகப்பட்ட ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கி உள்ளார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருவது நம்ம விஜே ரக்‌ஷன் தான்.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

விஜய் டிவி பிரபலங்கள் பலர் சினிமாவில் சாதித்து வருகின்றனர். விஜே ரக்‌ஷனும் சின்னத்திரை டு சினிமா என்கிற பாணியில் துல்கர் சல்மான் நடித்த சூப்பர் ஹிட் ஆன கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் காமெடியனாக இல்லாமல் செகண்ட் ஹீரோவாகவே நடித்து அசத்தி இருப்பார். அதன் பிறகு புதிய படங்களில் ஹீரோவாகும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் ரக்‌ஷன்.

இப்படியும் பைக் ஓட்டலாமா

இப்படியும் பைக் ஓட்டலாமா

இந்நிலையில், நடிகரும் விஜேவுமான ரக்‌ஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் தான் செய்த பைக் ஸ்டன்ட் ஒன்றின் வீடியோவை ஷேர் செய்து ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார். இப்படியும் பைக் ஓட்டலாமா பாஸ் என ஏகப்பட்ட ரசிகர்கள் கமெண்ட் போட்டு கை, கால் பத்திரம் ரக்‌ஷன் என கவுன்ட்டரும் கொடுத்து வருகின்றனர்.

அங்க உட்கார்ந்து ஓட்டுறாரே

பைக் சீட்டில் அமர்ந்து ஓட்டாமல் டேங்கிற்கு மேல் அமர்ந்து கொண்டு இரண்டு கால்களையும் முன் டயரின் மட்கார்டில் வைத்தபடி செம ஸ்டைலாகவும், மாஸாகவும் இப்படியொரு சாகசத்தை நிகழ்த்தி காட்டி உள்ளார் விஜே ரக்‌ஷன். மேலும், அந்த வீடியோவுக்கு கேப்ஷனாக "Love the Life You Live" என்றும் போட்டு லைக்குகளை அள்ளி உள்ளார்.

ஆக்‌ஷன் படமா

ஆக்‌ஷன் படமா

நெக்ஸ்ட் ஆக்‌ஷன் மூவியா ரக்‌ஷன் என விஜய் டிவி பிரபலம் பழைய ஜோக் தங்கதுரை இந்த வீடியோவை பார்த்து பயங்கரமாக கமெண்ட் செய்துள்ளார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் ரக்‌ஷன் உடன் இணைந்து தங்கதுரையும் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

கவின் கமெண்ட்

கவின் கமெண்ட்

விஜய் டிவி பிரபலம் மற்றும் நடிகருமான கவின் இந்த ஸ்டன்ட் வீடியோவை பார்த்து விட்டு "பயங்கரமான ஆளா இருக்கியே பா" என கமெண்ட் போட்டுள்ளார். நடிகை பவித்ரா லக்‌ஷ்மி "மாஸே" என்றும், மணிமேகலை, "ஆள பார்த்தா டம்மி பீஸா இருக்க.. ஆனா பயங்கரமான ஆளா இருக்கியே பா என கமெண்ட் போட ஏகப்பட்ட கமெண்ட்டுகளும் குவிந்துள்ளன.

அஜித்துக்கு தம்பியா

அஜித்துக்கு தம்பியா

வலிமை படத்தில் அஜித்தின் தம்பி வில்லன் டீமில் இணைவது போல காட்சி இருந்திருக்கும். ஆனால், அவர் பெரிதாக பைக் ஸ்டன்ட் செய்வது போல இருக்காது. இந்த ஸ்டன்ட்டை பார்த்த ரசிகர்கள் வலிமை படத்தில் அஜித்துக்கு தம்பியாக நீங்களே நடிச்சிருக்கலாம் என கமெண்ட் செய்து வருகின்றனர். சீக்கிரமே ரக்‌ஷனை ஒரு பைக் ரேஸர் படத்தில் ரசிகர்கள் பார்க்க வாய்ப்புகள் நிறையவே இருக்குன்னு தெரியுது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X