ஜாக்கெட் கொக்கி போட முடியாமல் தவிக்கும் விஜே ரம்யா.. வீடியோவுக்கு கீழ் குவியும் மோசமான கமெண்ட்ஸ்!
சென்னை: டிடி நீலகண்டன் போல பிரபலமான தொகுப்பாளினி தான் விஜே ரம்யா. ஏகப்பட்ட ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். மொழி படத்தில் தொடங்கி மங்காத்தா, ஆடை உள்ளிட்ட பல படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
சமீபத்தில் தங்கலான் இசை வெளியீட்டு விழாவையும் சிறப்பாக நடத்தியிருந்த விஜே ரம்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் வீடியோ ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து வருகிறது.

ஜாக்கெட்டுக்கு கொக்கி போட முடியாமல் கஷ்டப்படும் அந்த அவஸ்த்தை இருக்கே என்பது போல அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு லைக்குகளை குவித்து வருகிறார்.
தஞ்சாவூர் பொண்ணு: தஞ்சாவூரில் பிறந்து வளர்ந்த ரம்யா விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வந்தார். கலக்கப் போவது யாரு, உங்களில் யாரு அடுத்த பிரபுதேவா, நம்ம வீட்டுக் கல்யாணம், கேடி பாய்ஸ் கில்லாடி கேர்ள்ஸ் என ஏகப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்ச்சிகளை தொகுத்து வழங்கினார். சினிமாவிலும் அவருக்கு நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன.
சினிமாவில் விஜே ரம்யா: தொகுப்பாளினியாக கலக்கிய ரம்யா சுப்ரமணியன் சினிமாவில் மொழி படத்தில் சிறு வேடத்தில் நடித்தார். அதன் பின்னர் அஜித் நடித்த மங்காத்தா படத்தில் ரிப்போர்ட்டராக நடித்திருந்தார். ஓ காதல் கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, வனமகன், கேம் ஓவர், ஆடை, மாஸ்டர், சங்கத் தலைவன், ரசவாதி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ஆடை படத்தில் அமலா பால் தோழியாக சிறப்பான கதாபாத்திரம் இவருக்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

விவாகரத்து: 2014ம் ஆண்டு விஜே ரம்யா அபராஜித் ஜெயராமன் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். ஆனால், டிடி நீலகண்டனை போல இவருக்கும் திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை. ஒரே வருடத்தில் 2015ம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தார். அதன் பின்னர் மறு திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருகிறார்.
ஜாக்கெட் கொக்கி போட முடியல: என்னதான் ஸ்ட்ராங்காகவும் இண்டிபெண்டண்ட் உமனாகவும் இருந்தாலும் இந்த ஜாக்கெட் கொக்கியை போடும் போது தான் உண்மையான போரை சந்திக்கிறேன் என சேலை அணிந்த நிலையில், தனது ஜாக்கெட் கொக்கியை போட தவிக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து தத்துவம் சொல்லியிருக்கிறார் விஜே ரம்யா.
குவியும் கமெண்ட்ஸ்: உங்களை இப்படி வீடியோ எடுத்தவங்களை போட சொல்லியிருக்கலாமே என்றும், ரம்யா மேடம் உங்க மேல நல்ல மரியாதை இருக்கு, இப்படி எல்லாம் வீடியோ போடாதீங்க என்றும், உதவிக்கு வரலாமா? என்றும் மேலும், படுமோசமான கமெண்ட்டுகளும் அவரது போஸ்ட்டுக்கு குவிந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











