நாஞ்சில் விஜயனின் திருவிளையாடல்.. அர்ஜுனா அர்ஜுனா அம்பு விடும் அர்ஜுனா.. வைஷுவின் பதிவு!

சென்னை: நாஞ்சில் விஜயன் என் ஆபாச போட்டோக்களை வெளியிட்டுவிடுவேன் என மிரட்டுவதாக வைஷு குற்றம் சாட்டி இருக்கும் நிலையில், நாஞ்சில் விஜயன், கமிஷனர் அலுவலகத்தில் வைஷு மீது புகார் அளித்துள்ளார். இப்படி இருவரும் மாறி மாறி குற்றம் சாட்டி வரும் நிலையில், வைஷு தனது இன்ஸ்டாகிராமில் நாஞ்சில் விஜயனுடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளது, பரபரப்பை கிளப்பு உள்ளது.

காமெடி நடிகர் நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை வைஷு கடந்த ஆண்டு கமிஷ்னர் அலுவலகத்தில் தன்னை காதலித்து ஏமாற்றவிட்டதாக புகார் அளித்திருந்தார். இதையடுத்து அந்த புகாரை வைஷு திரும்ப பெற்றுக்கொண்டார். கடந்த சில ஆண்டுகளாக இந்த பிரச்சனை ஓய்ந்து இருந்த நிலையில், வைஷு தனது இன்ஸ்டாவில் நாஞ்சில் விஜயனுடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து, விஜய்க்கு நீங்க சப்போர்ட் பண்றீங்க. ஆனால் என்னுடைய மனதை மட்டும் புரிந்து கொள்ளாமல் புறக்கணிக்கிறீர்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

VJ Vaishnavi shared Nanjil Vijayan video
Photo Credit:

ஆடியோ ஆதாரம்: இதனால் கடுப்பான நாஞ்சில் விஜயன், வைஷுவின் மாஸ்டர் பிளான் என்று ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில் பேசி இருக்கும் வைஷு, நான் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளிக்க சென்ற போது வழக்கறிஞர் பிரபு தான். காதலித்து என்னை ஏமாற்றினான், எனக்கு பணம் தர வேண்டும் என சொல்ல சொன்னார் என்று பேசி இருக்கிறார். இதைவெளியிட்ட நாஞ்சில் விஜயன், இப்பொழுது புரிகிறதா இவளுடைய சுயரூபம், அடுத்தவர்களின் குடும்பத்தை பற்றி கூட கவலைப்படாமல் கேடு விளைவிப்பவள் என பதிவிட்டு இருந்தார்.

மிரட்டினார்: இதையடுத்து,விஜே வைஷு Galatta Voice சேனலுக்கு அளித்த பேட்டியில், கடந்த ஜனவரி 6ஆம் தேதி ஹோட்டல் நாஞ்சில் என்னை சந்தித்து என் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். மீண்டும் இருவரும் நண்பர்களாக இருக்கலாம் என்றார். அதை நம்பித்தான் நான் பல விஷயத்தை அவரிடம் சொன்னேன். ஆனால், அவர் நான் பேசியதை ரெக்கார்ட் செய்து வெளியிடுவார் என்று நினைக்கவே இல்லை. என் ஆபாசமான போட்டோக்களை வெளியிடுவேன் என மிரட்டுகிறார். இப்போ என்னை சகோதரி என்று சொல்கிறார், என்னை தொடவில்லை என்று குழந்தை மீது சத்தியம் செய்ய சொல்லுங்க என பேசி இருந்தார்.

நாஞ்சில் விஜயனின் திருவிளையாடல்: இதையடுத்து, நாஞ்சில் விஜயன் தனது மனைவி மரியாவுடன் கமிஷ்னர் அலுவலகத்திற்கு சென்று என் குடும்பத்தை பற்றி தரக்குறைவாக பேசுகிறார். அவரை நான் காதலித்து ஏமாற்றியதற்கான ஆதாரம், பணம் வாங்கியதற்கான ஆதாரம் இருந்தால் வெளியிடட்டும் என சொல்லி இருந்தார். இப்படி இருவருக்கும் இடையே பிரச்சனை பற்றி எரிந்து கொண்டு இருக்க தற்போது வைஷு தனது இன்ஸ்டாகிராமில் நாஞ்சில் விஜயனின் திருவிளையாடல் என்ற பெயரில் இருவரும் ஒன்றாக குளத்தில் ஒன்றாக குளிக்கும் போது வீடியோவை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X