விஜயகாந்த் இடம் எனக்குதான்.. வாட்டர் மெலன் திவாகரின் அடாவடி பேச்சு!
சென்னை: மக்களின் கவனத்தை தன்பக்கம் திருப்ப வாட்டர் லெமன் ஸ்டார் திவாகர் கோமாளித்தனமாக பல சேட்டைகளை செய்து வந்தார். சூர்யா நடித்த கஜினி படத்தில் சூர்யா தர்பூசணி சாப்பிடும் ஒரு காட்சியில் நடித்தன் மூலம் பிரபலமானார். இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர். பிக் பாஸ் வீட்டிற்குள் கேமரா முன்னாடி சென்று ரீல்ஸ் போட்டு நடிப்பு அரக்கன் என பிக் பாஸ் பிரியர்களையும் கேமராவையும் விடாது தொல்லை கொடுத்துவந்தார்.
இதையடுத்து, நாமினேஷனில் சிக்கி குறைந்த வாக்குகளை பெற்று வெளியேறினார். எத்தனை பேர் தன்னை கேலி கிண்டல் செய்தாலும், தன்னை ஒரு பெரிய நடிகராக நினைத்துக்கொண்டு பேட்டியில் பேசுவதும் நடித்து காட்டுவது தான் இவரின் வேலை.நேற்று திருவொற்றியூரில் உள்ள பட்டிணத்தார் கோவிலில் சாமி தரிசனம் செய்த திவாகர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,எனக்கு இருக்கும் அழகிற்கு த்ரிஷா,சமந்தா போலத்தான் பெண் வேண்டும் என்றார்.
\

திவாகர் பேட்டி: அதோடு மட்டுமில்லாமல், இயக்குநர் வெற்றிமாறன் வாய்ப்பு கொடுத்தால் வடசென்னை 2 படத்தில் ஹீரோவாகவே அல்லது இரண்டாவது ஹீரோவாகவே, இப்படி என்ன கதாபாத்திரம் கொடுத்தாலும், அதில் சிறப்பாக நடித்து மக்கள் மனதில் பெயர் எடுப்பேன். சிவாஜி, கமல்ஹாசனுக்கு அடுத்த இடத்தில் நான் இருக்க வேண்டும் என்பது என் ஆசை என்று சொன்ன திவாகர், சிம்பு போல நடித்து காட்டி செய்தியாளர்களை அலறவிட்டார்.
அடுத்த விஜயகாந்த் நான் தான்: அதோடு மட்டுமில்லாமல், விஜயகாந்த் மறைவால் அந்த இடம் காலியாக உள்ளது. அந்த இடத்தை பிடிப்பதற்காகத்தான் இந்த வாட்டர்மெலன் ஸ்டார் வந்து இருக்கிறேன். மதுரையில் இருந்து சென்னைக்கு வந்து சினிமாவில் நுழைந்து மக்கள் மனதில் இடம் பிடித்தார் விஜயகாந்த், அவருக்கு பிறகு அந்த ஊரில் இருந்து பெரிதாக யாரும் வரவில்லை. நானும் மதுரைக்காரன் தான், கேப்டன் போன்று நானும் சினிமாவில் பெரிய ஆளாக வருவேன். எனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை. பார்க்க நீங்க விஜயகாந்த் மாதிரியே இருக்கிறீர்கள் என்று பலர் என்னிடம் சொல்கிறார்கள். நாளை நானே நடிகர் சங்க தலைவராகக்கூட வரலாம் என பேசி உள்ளார். இதைக் கேட்டு கொந்தளித்த விஜய்காந்த் ரசிகர்கள் திவாகரை கண்டபடி திட்டிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











