Bigg Boss: சாண்ட்ராவும் லேசுபட்டவங்க இல்ல.. பார்வதியை முதுகில் குத்தி இருக்காங்க.. திவாகர் வேதனை!
சென்னை: இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் கார் டாஸ்க்கில் பல சர்ச்சைகள் வெடித்தன. இதில், காருக்குள் இருந்த சாண்ட்ரா, பார்வதி கமரூதீன் மூன்று பேருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது. அனைவருமே வரம்பு மீறி பேசி கொண்டனர். ஒரு கட்டத்தில் சாண்ட்ராவை பார்வதி எட்டி உதைக்க, அவருக்கு உதவியாக கம்ருதீனும் சாண்ட்ராவை எட்டி உதைத்து வலுக்கட்டயமாக காரில் இருந்து வெளியே தள்ளினார்கள். இதைப்பார்த்த அனைவரும் இருவருக்கும் ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்புங்கள் என கருத்துக்களை இணையத்தில் பதிவிட்டு வந்த நிலையில் நேற்று விஜய் சேதுபதி பார்வதிக்கும் கமரூதீனுக்கும் ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பினார்.
மேலும், பார்வதி மற்றும் கம்ருதீனை வாயை திறந்து பேசக்கூடா விடாமல் இருவரையும் வெளியேற்றினார். இருவருக்கும் ரெட் கார்டு கொடுத்ததும் அங்கிருந்த ஆடியன்ஸ் ஆட்டம் போட்டு கை தட்டி, ஆரவாரம் செய்தனர். அதுமட்டுமில்லாமல் சபரி விசில் அடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பிக் பாஸ் வரலாற்றிலேயே முதலாவது பெண் போட்டியாளருக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது இதுவே முதல் சம்பவமாக பார்க்கப்பட்டது.

வாட்டர்மெலன் திவாகர் வேதனை: இந்த நிலையில், பிக் பாஸ் 9வது சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர் வாட்டர்மெலன் திவாகர் இந்த சம்பவம் குறித்து பேசி பேட்டி அளித்துள்ளார். பார்வதிக்கு ரெட் கார்ட் கொடுத்தது எனக்கு வேதனையாக இருக்கு. கார் டாஸ்கில் சாண்ட்ரா பார்வதியின் கோபத்தை தூண்டுறாங்க. பார்வதி ரொம்ப நல்ல பெண்ணு, யார் கோவத்தை தூண்டினாலும் கோவம் வரத்தான் செய்யும், அதுவும் இல்லாமல் விளையாட்டில் போட்டியாளர்கள் மாத்தி மாத்தி தள்ளிவிடுவது இயல்பு தான். ஒரு தடவை துஷாரை வினோத்தை தள்ளிவிட்டு இருந்தார். அதேபோல சபரியும் பார்வதியை தள்ளிவிட்டார். இது எல்லாமே விளையாட்டு தான். அப்படி இருக்கும் போது இதை ஒரு கேமாகத்தான் பார்க்க வேண்டும்.
முதுகில் குத்தினார்: ஒரு காலத்தில் சாண்ட்ரா அக்கா நிறைய வார்த்தைகளை விட்டு இருக்காங்க. நாங்க உள்ள இருக்கும்போதும் சாண்ட்ரா அக்கா பார்வதியை பயன்படுத்திக்கொண்டு முதுகுல குத்தி இருக்காங்க. ஏன் என்றால் எதற்கு எடுத்தாலும் அழுவது, கீழே விழுந்தவுடன் வலிப்பு வருமா, நானும் ஒரு மருத்துவர் என்கிற முறையில் இதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஸ்ட்ராங்கா கேம் விளையாடுறாங்க, ஓடுறாங்க, பாடுறாங்க, பாடுறாங்க, ஆனால் அழுது நாடகமாடுகிறார். கனி பிக் பாஸ் வீட்டை விட்டு சென்றதில் அவர்களுக்கு சந்தோஷம் தான். ஆனால், அன்றைக்கும் அழுது நாடகமாடுகிறார்கள். சாண்ட்ராவின் கணவர் பிரஜனும் கொஞ்சம் கூட நாகரீகம் தெரியாதவர் தான். உண்மையில் பார்வதிக்கு ரெட் கார்ட் கொடுத்தது என் மனதிற்கு வருத்தமாக தான் இருக்கிறது. பிக் பாஸ் வீட்டில் 90 நாள் இருந்து இருக்கிறார். அவர் தான் டைட்டில் வின்னராக வருவார் என்று நான் மிகவும் எதிர்பார்த்தேன். மதுரை மண்ணில் இருந்து இந்த முறை நானும், பார்வதியும் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றோம், பார்வதி உண்மையில் மண் பற்று கொண்ட பெண் என்று திவாகர் அந்த பேட்டியில் பார்வதிக்கு ஆதரவாக பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











