சினிமாவிலும் சாதிப்போம்: சின்னத்திரை தம்பதிகள் பிரஜீன் – சண்ட்ரா

By Mayura Akilan

சின்னத்திரையைப் போல சினிமாவிலும் ஜெயிப்போம் என்று நம்பிக்கையோடு கூறியுள்ளனர் பிரஜீன் - சாண்ட்ரா தம்பதியினர்.

சன் மியூசிக் சேனலில் ஆரம்ப காலத்தில் தொகுப்பாளராக அறிமுகமாகி சின்னத்திரையில் தனக்கென ஒரு ரசிகைகள் வட்டத்தை உருவாக்கியவர் பிரஜீன்

கிரண் டிவியில் தொகுப்பாளினியாக அறிமுகமான சாண்ட்ராவை கடந்த சில வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இருவருமே சினிமாவில் நடித்து வருகிறார்கள். ஆனால் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு வெற்றி கிட்டவில்லை. பிரஜீன், பிருத்விராஜ் நடித்த ஒரு மலையாளப்படத்தில் இரண்டாவது ஹீரோவாக அறிமுகமானார்.

ஹீரோவான பிரஜீன்

ஹீரோவான பிரஜீன்

தீக்குளிக்கும் பச்சை மரம் என்ற படத்தில் சோலோ ஹீரோவானர். பிரஜீன் இந்த படம் மருத்துவமனை மார்ச்சுவரியை கதைக்களமாக கொண்டது. மது அம்பாட் ஒளிப்பதிவு செய்திருந்தார். வினீஷ், பிரயன் என்ற இருவர் இயக்கி இருந்தார்கள்.

மணல் நகரம்

மணல் நகரம்

இந்தப் படம் பாராட்டுகளை குவித்த போதும் வசூல் ரீதியாக வெற்றிபெறவில்லை அடுத்து தற்போது டோர்னமெண்ட் என்று விளையாட்டை மையகமாக கொண்ட படத்திலும், ஒரு தலை ராகம் ஹீரோ சங்கர் இயக்கும் மணல் நகரம் என்ற படத்திலும் நடித்து வருகிறார் பிரஜீன்

பாலியல் தொழிலாளியாக சாண்ட்ரா

பாலியல் தொழிலாளியாக சாண்ட்ரா

இவரது மனைவி சாண்ட்ரா சிவப்பு எனக்கு பிடிக்கும் என்ற படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்து வருகிறார். இருவரும் சினிமாவில் ஒரு வெற்றிக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

நானும் ஜெயிப்பேன்

நானும் ஜெயிப்பேன்

சின்னத்திரை நடிகர்களால் பெரிய திரையில் ஜெயிக்க முடியாது என்ற காலம் மலையேறிவிட்டது. ஷாருக்கானிலிருந்து, சிவகார்த்திகேயன் வரை சின்னத்திரை நட்சத்திரமாக இருந்து பெரிய இடத்துக்கு வந்தவர்கள். நானும் வருவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று நம்பிக்கையோடு கூறுகிறார் பிரஜீன்.

7 ஆண்டுகால போராட்டம்

7 ஆண்டுகால போராட்டம்

சினிமாவில் வெற்றி பெற கடந்த 7 வருடங்களாக போராடி வருகிறேன் என்று கூறிய அவர், சாண்ட்ரா இப்போது பல ஷோக்களை நடத்தி வருகிறார் என்றார்.

இருவரும் ஜெயிப்போம்

இருவரும் ஜெயிப்போம்

சாண்ட்ரா நடிக்கும் சிவப்பு எனக்கு பிடிக்கும் ஆபாசமோ கவர்ச்சியோ இல்லாத நல்ல கருத்தை கொண்ட படம். இருவரும் சினிமாவில் ஜெயிப்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது. என்கிறார் பிரஜீன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X