சன் டிவி தொகுப்பாளினி ஆர்த்திக்கு கல்யாணம்…

By Mayura Akilan

தூய தமிழ், பட்டுப்புடவை என்று மக்கள் தொலைக்காட்சியில் வலம் வந்தவர் ஆர்த்தி இப்போது மார்டன் உடையில் ஆங்கிலம் கலந்து பேசி சன் டிவியில் சூரியவணக்கம் சொல்கிறார்.

மக்கள் தொலைக்காட்சியில் 8 வருடங்களாக தொகுப்பாளினியாக இருந்தவர் ஆர்த்தி. அதில் அவரின் சின்ன சின்ன ஆசை நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. சமையல் நிகழ்ச்சியும் நடத்தினார்.

இப்போது சன் டிவியில் காலை நிகழ்ச்சியோடு சினிமா நிகழ்ச்சி ஒன்றையும் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.

அழகு தொகுப்பாளினி ஆர்த்திக்கு திருமணம் என்பதுதான் லேட்டஸ்ட் செய்தி. இதுபற்றி அவரே கூறுகிறார் மேற்கொண்டு படியுங்கள்.

போராடிச்சிருச்சே

போராடிச்சிருச்சே

8 வருடம் ஒரே டி.வியில் வேலை பார்த்தது பெரிய அதிசயம்தான். ஒரே இடத்தில் போரடித்து விட்டதால்தான் விலகினேன், வேறெதுவும் காரணம் இல்லை.

நான்தான் ஸ்டார்

நான்தான் ஸ்டார்

காலேஜ் படிக்கும்போது கலை நிகழ்ச்சிகளில் நான்தான் ஸ்டார். தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக சென்றவளுக்கு கிடைத்தது தொகுப்பாளினி வேலை. அதையும் செய்துவிட்டேன்.

சினிமா வாய்ப்பு

சினிமா வாய்ப்பு

மக்கள் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக வேலை பார்த்த போது நிறைய சினிமா வாய்ப்புகள் வந்தது. அந்த ஏரியா எனக்கு செட்டாகுதுன்னு சொல்லி மறுத்திட்டேன்.

கல்யாண சாப்பாடு

கல்யாண சாப்பாடு

வீட்டில் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். விரைவில் எல்லோருக்கும் கல்யாண சாப்பாடு போடப்போகிறேன்.

பதில் பேசும் மாப்பிள்ளை

பதில் பேசும் மாப்பிள்ளை

நான் கொஞ்சம் லொட லொடன்னு பேசுற பொண்ணு அதை சகித்துக் கொள்கிறவராக இருக்கணும். இல்ல பதிலுக்கு பதில் பேசுறவரா இருக்கணும். எப்படிப்பட்டவர் வருகிறார் என்று பார்ப்போம் என்கிறார் ஆர்த்தி.

கூட்டு குடும்ப வாழ்க்கை

கூட்டு குடும்ப வாழ்க்கை

எனக்கு கூட்டு குடும்பம்தான் பிடிக்கும். அந்த குடும்பத்தில் ஒரு அங்கமாக மாற விரும்புகிற மாப்பிள்ளையாக பார்க்கிறார்கள் என்று சமர்த்தாக சொல்கிறார் ஆர்த்தி.

மனம் போல மாங்கல்யம் அமைய வாழ்த்துக்கள் ஆர்த்தி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X