போலீஸ் இப்படியா அடிப்பாங்க... என்ன கொடுமை சரவணா...!
சென்னை: சன் டிவியின் அக்னி நட்சத்திரம் சீரியலில் நிஜமாவே கோப அக்னி கொப்பளிக்குது. வீட்டு வேலை செய்யும் டிரைவர் குடும்பத்துடன் அப்பா ஒண்ணுக்குள் ஒண்ணா பழகறது அகிலாவுக்கும், அம்மா நளினிக்கும் பிடிக்கலை.
ஆனா, இருவரும் பால்ய பிராயத்திலிருந்து நண்பர்கள் என்பது தெரிந்தும் இவர்கள் ஏன் இப்படி நடந்துக்கறாங்கன்னு தெரியலை.
நளினி, டிரைவரின் பொண்டாட்டி ஜெயந்தியை எப்படியாவது கொடுமைப்படுத்தணும்னு மகள் அகிலாவுடன் சேர்ந்து திட்டம் போடறாங்க.

உடம்பு சரியில்லாத
உடம்பு சரியில்லாமல் தன் கணவர் சொன்ன ஒரே காரணத்துக்காக நளினி வீட்டுக்கு வேலைக்குப் போன ஜெயந்தியை, ஒய்வு குடுக்காம வேலை பார்க்க வைக்கறாங்க. ஆனா, நளினி தான் கீழே விழுந்துட்டது போல வீல் சேரில் உட்கார்ந்து ஜெயந்தியை வேலை வாங்கறாங்க.

வேலைக்காரியை லீவில்
வேலைக்காரியை லீவில் அனுப்பிட்டு, வேணும்னே வேலைக்காரிக்கு லீவு வேணும்னு கேட்டுட்டு போயிட்டான்னு புருஷன்கிட்ட சொல்றாங்க. இப்படி இவங்க பணக்கார லொள்ளுத் தனமும்,இவங்க மகள் அகிலாவின் பணக்கார லொள்ளுத் தனமும் சேர்ந்து கடைசியில் பாவம் ஜெயந்தியை திருடி பட்டம் சுமக்க வைக்குது.

நகையை காணோம்
நளினியின் பெண் அகிலா வீட்டில் இருந்த நகைகளை காணோம்...எங்களுக்கு இந்த வேலைக்காரி மேலதான் சந்தேகம்னு போலீசில் புகார் குடுத்துடறா. போலீஸும் இந்த கேள்வியும் கேட்காமல், பணக்கார இடம்னு தெரிஞ்ச உடனே... ஜெயந்தியை அரெஸ்ட் பண்ணிடறாங்க.

நான் இல்லை
போலீஸ் ஜெயந்தியை எடுத்த நகையை எங்கே வச்சிருக்கேன்னு கேட்க...சத்தியமா எனக்கு எந்த நகையைப் பத்தியும் தெரியாதும்மா. இப்படி நகைக்கு ஆசைப்படறவ நான் இல்லைன்னு சொல்லி ஜெயந்தி அழறாங்க. மீரா அப்பாவைத் தேடி அழுதுகிட்டு போறா.

வாயைத் திறக்கலை
என்ன சொல்றான்னு இன்ஸ்பெக்டர் கேட்க, ஒண்ணும் பதில் பேச மாட்டேன்னு சொல்றா... அப்படி வாயைத் திறந்தாலும் இல்லேன்னு சொல்றா. என்ன செய்யறதுன்னு தெரியலைன்னு சொல்றாங்க கான்ஸ்டபிள்ஸ்.

அடுத்து வலி
முதலில் போலீஸ்னா என்னன்னு பயம் காமிக்கணும்... அடுத்து வலியை காமிக்கணும்... அடுத்து நரகத்தை காமிக்கணும்.. அப்போதுதான் பதில் வரும்னு இன்ஸ்பெக்டர் சொல்ல, பெண் போலீசு ஜெயந்தியின் கன்னத்தில் பொளேர்னு
அடிக்கறாங்க
சுருண்டு விழுந்த ஜெயந்திக்கு பேச்சு மூச்சு இல்லை...என்னாகுமோ...?


Click it and Unblock the Notifications











