போதை… பார்ட்டி… குத்தாட்டம்… ஆபிஸ் அட்டகாசங்கள்.
அழகாய் போய்க்கொண்டிருந்த ஆபிஸ் சீரியல் இப்போது வேறு முகத்தை காட்ட ஆரம்பித்திருக்கிறது. ஐ.டி துறையில் வேலை பார்த்தாலே அவுட்டிங், பார்ட்டி என்பது தவிர்க்க முடியாதது என்கிற சாயலில் செல்லும் தொடரின் கடந்த 4 எபிசோடுகளும் முகம் சுழிக்கவைப்பதாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
எபிசோடு ஆரம்பித்தது முதல் முடியும் வரை ஆணும், பெண்ணும் சேர்ந்து குடிப்பது போலவும் குத்தாட்டம் போடுவது போலவும் காட்டுவதால் ஆபிஸ் டீமை ரசித்தவர்கள் கூட இப்போது சேனலை மாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
சேனல்களில் அதுவும் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் இதுபோன்ற காட்சிகளை இத்தனை டீப்பாக காட்ட வேண்டியது அவசியமா என்று கேள்வி எழுப்புகின்றனர் ரசிகர்கள்.

ஐ.டி என்றாலே பார்ட்டிதானா?
ஐ.டி துறையைச் சார்ந்தவர்கள் வார இறுதி நாளில் அவுட்டிங் போனாலே குடித்துவிட்டு கூத்தடிப்பார்கள் என்பது போலத்தான் இந்த தொடரில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

பெற்றோர்கள் கலக்கம்
இதனால் ஐ.டி துறைக்கு பெண் குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் பெற்றோர்கள் மனதில் ஒருவித கலக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. எல்லோருமே இப்படித்தானோ என்பதுபோல பேசத் தொடங்கிவிட்டனர்.

குடிப்பது தான் முழு எபிசோடும்
விஷ்ணு, லட்சுமி, சவுந்தர்யா, கவுசிக், சூசன் என ஆண், பெண் வித்தியாசமின்றி குடிப்பதாக காட்சியமைப்பு உள்ளது. குடிக்காத ராஜிக்கும் கூட ஆரஞ்ச் ஜூஸ் உடன் வோட்காவை கலந்து கொடுக்கிறான் கவுசிக்

என்னை கல்யாணம் பண்ணிக்கோ
போதையில் தனியாக இருக்கும் போது கார்த்திக்கை காதலிப்பதாக கூறும் ராஜி. தன்னுடைய அப்பா தடுத்தால் கூட தன்னை தூக்கிக் கொண்டு போய் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்கிறாள்.

ராஜியின் குத்தாட்டம்
போதை ஏறிய உடன் கும்பலாக குத்தாட்டம் போடும் ராஜிக்கு கடைசி வரைக்கும் போதை தெளியவே இல்லை. ராஜிக்கு கார்த்திக் ஊட்டி விடுவதை தூரத்தில் இருந்து பார்த்து பொறாமைப் படுகிறான் கவுசிக்.

மாமா குரூப் காணோமே
இந்த டீம் போல சேல்ஸ் டீம் குரூப் ஆட்டோவில் மகாபலிபுரம் அவுட்டிங் வந்திருக்கின்றனர் ஆனால் இரண்டு எபிசோடுகளாக அவர்களைக் காணவில்லை. ஒரே குடியாக இருப்பதால் சேனலை மாற்ற ஆரம்பித்துவிட்டனர் ரசிகர்கள். இனியாவது இது போன்ற காட்சிகளை தவிர்ப்பார்களா?

நண்பர்களுக்குள் பிரிவா?
கார்த்திக், ராஜி, விஷ்ணு, லட்சுமி, ஆகிய நால்வரையும் பிரிக்க வேண்டும் என்பதுதான் கவுசிக்கின் திட்டம். மகாபலிபுரத்தை விட்டுப் போவதற்குள் என்ன செய்து அவர்களை பிரிக்கலாம் என்று திட்டமிடுகிறான் அது நிறைவேறியதா என்பதை அடுத்த எபிசோடுகளில் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











