யாஷிகாவை 4 பேர் சேர்ந்து தூக்கிட்டு போறாங்க: அய்யய்யோ என்னாச்சு?
Recommended Video

சென்னை: யாஷிகாவை 4 பேர் சேர்ந்து தூக்கிச் செல்லும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் 2 வீட்டில் இருக்கும் விஜயலட்சுமிக்கு அடிபட்டது போன்று காட்டினார்கள். அய்யய்யோ விஜிக்கு என்னாச்சு என்று நிகழ்ச்சியை பார்த்தால் ஒன்றும் ஆகவில்லை.
லேசான அடிக்கு தான் ப்ரொமோ வீடியோவில் அந்த பில்ட் அப் கொடுத்தார்கள்.
வீடியோ
யாஷிகாவுக்கு ஏதோ ஆகிவிட்டது போன்று ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. படுத்துக் கிடக்கும் யாஷிகாவை பிக் பாஸ் கன்ஃபெஷன் அறைக்கு வரச் சொல்கிறார். உடனே நான்கு பேர் சேர்ந்து அவரை தூக்கிச் செல்கிறார்கள்.

உடல் நலம்
யாஷிகாவின் கழுத்தை பிடி, காலை பிடி என்று ஆளாளுக்கு டென்ஷன் ஆகிறார்கள். அவரை நான்கு பேர் தூக்கிச் சென்றதால் ஏதோ சீரியஸான விஷயம் என்று நினைத்து இன்று இரவு நிகழ்ச்சியை பார்த்தால் நம்மை ஏமாற்றிவிடுவார்கள். நம்மை ஏமாற்றி ஏமாற்றி விளையாடுவதே பிக் பாஸுக்கு ஒரு வேலையாகிவிட்டது. எத்தனை முறை ஏமாந்தாலும் பார்வையாளர்கள் நிகழ்ச்சியை பார்க்கத் தவறுவது இல்லை.
ஃபைனல்
யாஷிகா, ஐஸ்வர்யா ஆகியோரை ஃபைனலுக்கு அழைத்துச் செல்ல விரும்புகிறார் பிக் பாஸ். யாஷிகா மீது மக்கள் பரிதாபப்பட வேண்டும் என்று இந்த வீடியோவை வெளியிட்டது போன்று உள்ளது.
கலாய்
ஃபைனல் நெருங்க நெருங்க மயக்கம், காயம் என்று டிராமா மேல் டிராமாவாக உள்ளது.


Click it and Unblock the Notifications











