பிந்துமா, பிக் பாஸ் வீட்டில் என்னம்மா பண்ணிக்கிட்டு இருக்க?
சென்னை: பிக் பாஸ் வீட்டில் பிந்து மாதவி இருக்கும் இடம் தெரியாமல் உள்ளார்.
பிக் பாஸ் வீட்டிற்கு வைல்டு கார்டு மூலம் வந்தவர் நடிகை பிந்து மாதவி. அவருக்கு வாரத்திற்கு ரூ.3 லட்சம் சம்பளம் கொடுக்கிறாராம் பிக் பாஸ். பிக் பாஸ் வீட்டிற்கு வந்த புதிதில் பிந்து காயத்ரியை பார்த்து நீ எல்லாம் ஒரு தலைவியா என்று கேட்டார்.
அந்த கேள்வியால் பிந்து மீது ரசிகர்களுக்கு மதிப்பு ஏற்பட்டது.

பிந்து
காயத்ரியை கேள்வி கேட்டார், ஆரவிடம் வழிவது உனக்கு தேவையா என்று ஓவியாவை கேட்டார் பிந்து மாதவி. அதன் பிறகு அவர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் இடமே தெரியவில்லை.

புஸ்
ப்ரொமோ வீடியோக்களிலும் மேக்கப் ராணி ரைசாவும், கால்சியம் காயத்ரியும் தான் வருகிறார்கள் மோதுகிறார்கள். பிந்து மாதவி வாய் திறப்பதே இல்லை.
வேஸ்ட்
பிக் பாஸ் வீட்டிற்கு வைல்டு கார்டு மூலம் வந்த பிந்து மாதவி சுத்த வேஸ்ட் என்று நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகிறார்கள்.

ஓவியா
ஓவியா ரேஞ்சுக்கு பரபரப்பை ஏற்படுத்துவார் பிந்து மாதவி என்று எதிர்பார்க்கப்பட்டது. கடைசியில் அவர் ஒப்புக்கு சப்பானி போன்று பிக் பாஸ் வீட்டில் உள்ளார்.


Click it and Unblock the Notifications











