யாஷிகா, ஐஸ்வர்யாவுக்கு இடையே படுத்த மகத்: படுத்தது மட்டும் அல்லாமல்...
Recommended Video

சென்னை: பிக் பாஸ் வீட்டில் நேற்று இரவு மகத் செய்த காரியத்தை பார்த்து சிங்கிள்ஸ் எல்லாம் வயித்தெரிச்சல் அடைந்தார்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கியதில் இருந்தே பார்வையாளர்களுக்கு பிடிக்காத ஆளாகிவிட்டார் நித்யா. அவர் தனது கணவரான பாலாஜியை நடத்தும் விதம் பார்வையாளர்களுக்கு பிடிக்கவில்லை.
இந்நிலையில் சக போட்டியாளர்களுக்கும் நித்யாவை பிடிக்கவில்லை.

பாலாஜி
பிக் பாஸ் பாலாஜியை கன்ஃபெஷன் அறைக்கு அழைத்து யார் இல்லை என்றால் பிக் பாஸ் வீடு நன்றாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள் என்று கேட்டார். பாலாஜி நித்யா பெயரை சொல்வார் என்று எதிர்பார்த்தால் மமதி பெயரை கூறினார். மமதி செயற்கையாக நடந்து கொள்வதாக தெரிவித்தார் பாலாஜி.

நித்யா
யாஷிகா, ஐஸ்வர்யா, ரம்யா, ஷாரிக் என்று பிக் பாஸ் வீட்டில் உள்ள பெரும்பான்மையானோர் நித்யா இல்லாவிட்டால் நன்றாக இருக்கும் என்று பிக் பாஸிடம் தெரிவித்துள்ளனர். ஜனனி மட்டும் பொன்னம்பலத்தின் பெயரை கூறினார். பிசிகல் காரணம் என்றார்.

சிம்பு
மகத் தனது நண்பர் சிம்புவை ரொம்ப மிஸ் பண்ணுவதாக தெரிவித்தார். சிம்புவை நான் இந்த அளவுக்கு மிஸ் பண்ணுவேன் என்று எதிர்பார்க்கவில்லை என்று ஜனனியிடம் தெரிவித்தார்.

சென்றாயன்
நேற்று முன்தினம் எல்லாம் மனைவியை திட்டிய பாலாஜி நேற்று தங்கம், ராசாத்தி என்று கொஞ்சியுள்ளார். அழாத நித்தி என்று ஆறுதல் கூறியுள்ளார். மனைவியின் தட்டில் இருந்து சாப்பாட்டை எடுத்து சாப்பிட்டுள்ளார். தனது மனைவியை வேலைக்காரி மாதிரி வேலை வாங்குவதாக சென்றாயனிடம் கூறினார் பாலாஜி.

ஐஸ்வர்யா
இரவில் மகத் யாஷிகா, ஐஸ்வர்யா படுத்திருந்த இடத்திற்கு சென்று அவர்களுக்கு இடையே படுத்துக் கொண்டார். அதை பார்த்த பாலாஜி டேய் என்னடா இங்கே படுத்திருக்க, என்னங்கடா நடக்கிறது இங்க என்று கேட்டு அதிர்ச்சி அடைந்தார்.

அதிர்ச்சி
யாஷிகா மீது கால்போட்டதுடன் அவரை கட்டிப்பிடித்து படுத்துக் கொண்டார். காமெடிக்கு செய்கிறேன் என்ற பெயரில் தன் ஆசையை எல்லாம் தீர்த்துக் கொண்டார் மகத்.


Click it and Unblock the Notifications











