twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ‘காதல் ஒரு சாத்தான் மாதிரி’: இளவரசியின் அடுத்த ‘நச்’ டயலாக்

    |

    சென்னை: ஏற்கனவே, கணவர்கள் லிவர் மாதிரி, மனைவிகள் கிட்னி மாதிரினு அனாடமி கிளாஸ் எடுத்த இளவரசி சீரியலில் தற்போது, காதல் பாடம் எடுக்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.

    சண்டிவியில் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் இளவரசி. கதையை ஜவ்வாக இழுப்பது எப்படி என்று இவர்களைப் பார்த்துத் தான் கற்றுக் கொள்ள வேண்டும் போல.

    அப்படி போகிறது கதையின் போக்கு. இதோ சுபம் போட்டுவிடுவார்கள் என நம்பி , மனம் வெறுத்து ரிமோட்டில் வேற சானலுக்கு மாற்றியவர்கள் அதிகம்....

    தியாகி இளவரசி...

    தியாகி இளவரசி...

    இளவரசியின் கணவர் சுப்ரமணி. சில காலம் ‘தியாகி'யாக இளவரசி ஜெயிலில் இருக்க, சுப்ரமணியின் தோழியாகிறாள் மகா.

    புது ட்ரண்ட்...

    புது ட்ரண்ட்...

    இளவரசி நிரபராதி என தெரிய வந்து, ரிலீசாகிறாள். சீரியல் முடியப்போகிறது. அடுத்த புது சீரியல் என்ன? என மக்கள் பெட்டிங்கில் இறங்க, அப்டியெல்லாம் உங்கள சீக்கிரமா விட்ருவோமா என கதையில் புது ட்விஸ்ட்.

    நீங்களுமா..?

    நீங்களுமா..?

    இதுவரை பிரியமான தோழியாக இருந்த மகாவிற்கு, சுப்ரமணி மீது காதல் பூக்கிறது. (இதே போல் திருமதி செல்வம் கதையிலும் தோழியாக இருந்து காதலாக மாறிய நட்பு காட்டப் பட்டது குறிப்பிடத்தக்கது)

    டயாபடீஸ் உதாரணம்...

    டயாபடீஸ் உதாரணம்...

    ‘டயாபடீஸ் வந்தா தான் சர்க்கரையின் அருமை தெரியுமாம்' இது மகா சுப்ரமணியிடம் கூறும் டயலாக். இளவரசி சிறையில் இருந்து வந்ந்த பிறகு தான் சுப்ரமணியின் அருமை புரிந்துள்ளதாம் மகாவிற்கு.

    ஐ ஹேட் யூ மகா...

    ஐ ஹேட் யூ மகா...

    சுப்ரமணியை தன்னை காதலிக்கச் சொல்லி வற்புறுத்துகிறாள் மகா. ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து அவனை மிரட்டத் தொடங்குகிறாள். சுப்ரமணி அங்கிருந்து சென்ற பின் தான் அவன் மீது கோபப் பட்டதிற்காக தன்னைத் தானே கடிந்து கொள்கிறாள் பின்வருமாறு...

    காதல் தத்துவம்...

    காதல் தத்துவம்...

    'காதல் கடவுளா இருந்திருந்தா, கால்ல விழுந்திருப்பேன்... ஆனா, காதல் ஒரு சாத்தான், அதை கொம்பை பிடிச்சு தான் அடக்கணும்...' எனத் தத்துவம் பேசி தன்னைத் தானே வெறுத்துக் கொள்கிறாளாம் மகா.

    கொஞ்சம் யோசிங்க பாஸ்....

    கொஞ்சம் யோசிங்க பாஸ்....

    என்ன கொடுமை சார் இது... இப்படி நட்பெல்லாம் காதலாக மாறினால், பணி புரியும் இடத்திலோ அல்லது வேறு இடங்களிலோ நல்ல நட்பை கூட எப்படி அனுமதிப்பார்கள் வாழ்க்கைத் துணைவிகள்...?

    English summary
    Ilavarasi TV serial's new explanation on love is another example for its novel dialogues.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X