Rasaathi Serial: கவர்ச்சி கவுனா... புடவையா...எது ராசாத்தி சாய்ஸ்?
சென்னை: வல்லரசு கவர்ச்சி கவுன் தந்து போட்டுட்டு வான்னு சொல்றான். தேவயானி பாண்டியன் கிட்டே புடவை குடுத்துட்டு கட்டிக்கச் சொல்லுன்னு சொல்றாங்க. ராசாத்தி எதைச் செய்தால் நல்லா இருக்கும்?
சன் டிவியின் ராசாத்தி சீரியலில் பாண்டியன் கூட ராசாத்திக்கு கல்யாணம் கல்யாணம்னு சொல்லிகிட்டே இருக்காங்க. ஆனால், ராசாத்திக்கு ஒவ்வொரு முறையும் எதாவது இக்கட்டு வந்துகிட்டே இருக்கு. காரணம் யாருன்னு பார்த்தால் சிந்தாமணி.
வல்லரசைத்தான் கல்யாணம் செய்துக்கணும்னு சத்தியம் வாங்கிக்கறாங்க சிந்தாமணி. ராசாத்தி மனசில் இருப்பது பாண்டியன்தான்... பாண்டியன் ராசாத்தி வீட்டுக்கே வந்தும் காதலை நம்ப மாட்டேன்னு சொல்றாங்க சவுந்திர வள்ளி. சவுந்திர வள்ளியா நடிக்கும் தேவயானிக்கு, சிந்தாமணியா நடிக்கும் விசித்திராவுக்கும் நடக்கும் கடும்போட்டித்தான் ராசாத்தி கல்யாணம்.

ஒரு கோடி ரூபாய்
ஜமீன்தார் வீடு... ஜமீன் குடும்ப கதை என்பதாலோ என்னவோ, தோப்பு விக்கறது, குத்தகை என்று பேசும்போதே லட்சங்கள்..ஒரு கோடி ரூபாய் பேங்க் டெபாசிட் என்றுதான் பேசிக்கொள்கிறார்கள். ஒரு ஜமீன் குடும்பத்தில் மருமகளாக வந்து, மாமனாரை கொலை செய்து அதிகாரத்தை பிடுங்கிக்கறாங்க சிந்தாமணியா நடிச்சு இருக்கும் விசித்திரா. அந்த வீட்டு பெண்ணா சிந்தாமணியிடம் மாட்டிக்கொண்டு தத்தளிக்கும் பாவப்பட்ட பெண்தான் ராசாத்தி.

ராசாத்தி மேனகா
ராசாத்தியை பாண்டியன் லவ் பண்றான்... பாண்டியனை மேனகா லவ் பண்றா .. ராசாத்தியும் பாண்டியனைத்தான் லவ் பண்றா.. இதே சுத்தலில் ராசாத்தி ஆரம்பித்த காலத்தில் இருந்தே சீரியல் பயணிக்குது. ராசாத்திதான் ஒவ்வொரு முறையும் பாண்டியனோட நிச்சயதார்த்தம் நின்னு போக காரணமா இருக்கா. எதனாலன்னு பார்த்தால் ராசாத்தி அண்ணன் மேல வச்சு இருக்கும் பாசம். ராசாத்தி சீரியலும் ஒருவித அண்ணன் தங்கை பாசக் கதைதான்.

பாண்டியன் புடவை வல்லரசு கவுன்
வல்லரசு, திடீர்னு ராசாத்தியை கூப்பிட்டு, ராசாத்தி இந்த மாடர்ன் டிரஸை போட்டுக்கிட்டு வா. புடவையில் பார்த்து போரடிச்சு போச்சுன்னு சொல்லி ஒரு கவுன் தர்றான். எனக்கு இதெல்லாம் பழக்கமில்லைன்னு ராசாத்தி சொல்றா. நான் சொல்றேன் போட்டுகிட்டு வான்னு சொல்றான் வல்லரசு. ராசாத்தி வாங்கிகிட்டு போயி பிரிச்சு பார்த்தால் கவர்ச்சியான கவுன். சவுந்திரவள்ளி பாண்டியனை கூப்பிட்டு உன்னை ராசாத்தி லவ் பண்றது உண்மைன்னா இந்த இந்த புடவையை கட்ட சொல்லு பார்க்கலாம்னு சொல்றாங்க.

புடவை ராசாத்தி
ராசாத்தி வல்லரசு சொல்றபடி கவுன் போடுவாளா, இல்லை பாண்டியன் கேட்டுகிட்டே மாதிரி புடவை கட்டிக்குவாளா? வெளியில் வல்லரசு ராசாத்தி கவுன் போட்டுக்கிட்டு வருவான்னு காத்து இருக்கான். போலீஸான அவனுக்கு போன் வருது. அந்த சமயம் பார்த்து சவுந்திரவள்ளி வல்லரசு பார்க்காத மாதிரி வீட்டுக்குள்ளே போயி, ராசாத்தியை பார்க்கறாங்க... ராசாத்தி அவங்க வாங்கிக் கொடுத்த பச்சை கலர் புடவையை கட்டிக்கிட்டு நிக்கறா!
அப்புறமென்ன அவ்ளோதான்...கவர்ச்சி கவுனெல்லாம் கிடையாது... கிளம்புங்க!


Click it and Unblock the Notifications











