குக் வித் கோமாளி ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. தாமுவும் விலகுகிறாரா? இதுதான் காரணமா? இத்தனை பிரச்சனையா?

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் 4 சீசன்கள் முடிவடைந்திருக்கும் நிலையில் ஐந்தாவது சீசன் எப்போது வெளியாகும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் இருந்து இயக்குனர், தயாரிப்பாளர், நடுவர் வெங்கடேஷ் பட் என்று அடுத்தடுத்து ஒவ்வொருவராக விலகிக் கொண்டிருக்கின்றனர்.

அதே நேரத்தில் செஃப் தாமுவும் வெங்கடேஷ் பட்டோடு விலகப் போகிறார் என்று வெங்கடேஷ் பட் அறிவித்திருந்தார். பிறகு தாமு விலகவில்லை என்று கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் இப்போது மீண்டும் இந்த நிகழ்ச்சியில் இருந்து தாமு விலகப் போகிறார் என்ற செய்திகள் வெளியாகி இருக்கிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

What is the reason behind leaving Chef Damu Cook with Comali

அந்த வகையில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு பெயர் போன விஜய் டிவியில் புதியது புதியதாக பல நிகழ்ச்சிகளை தொடங்கி வருகின்றனர். அந்த வகையில் ஒரு நிகழ்ச்சி வெற்றி பெற்றதும் அதில் அடுத்தடுத்த சீசன்கள் வந்து விடுகிறது. அந்த வரிசையில் ரசிகர்களில் மனதை கவர்ந்த நிகழ்ச்சிகளில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியும் இடம் பிடித்திருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் கோமாளிகள் செய்யும் காமெடிகள் மற்றும் அதற்கு நடுவர்கள் செய்யும் அதட்டல்கள் ரசிகர்களை அதிகமாக கவர்ந்திருக்கிறது. இப்படியான நிலையில் கடந்த நான்கு சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்து இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் இந்த நிகழ்ச்சி பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததும் தொடங்கப்படும்.

சமீபத்தில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி முடிவடைந்து சில மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் ஐந்தாவது சீசன் தொடங்கப்படவில்லை என்று ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கின்றனர். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் இருந்து இயக்குனர், தயாரிப்பாளர் என்று அடுத்தடுத்து வெளியேறி இருக்கிறார்கள். அதோடு நான்கு சீசன்களாக நடுவராக இருந்து வந்த வெங்கடேஷ் பட் தானும் வரப்போற குக் வித் கோமாளி ஐந்தாவது சீசனில் இல்லை என்று திடீர் என்று வீடியோ வெளியிட்டு இருந்தார்.

அதோடு அந்த வீடியோவில் தாமுவும் தன்னோடு வந்துவிடுவார் என்று குறிப்பிட்டு இருந்தார். இப்படியான நிலையில் சில நாட்களில் அந்த வீடியோவை டெலிட் செய்த வெங்கடேஷ் பட் நண்பர்களின் பேச்சு மாறினாலும் நட்பு மாறாது என்று மறைமுகமாக ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு இந்த சீசனில் ப்ரோமோ காட்சிகள் சூட்டிங் தொடங்கி விட்டது என்று ஒரு செய்தி இணையத்தில் வெளியாகி இருந்தது.

அதிலும் இந்த சீசனில் நடுவராக வெங்கடேஷ் பட்டுக்கு பதிலாக மாதம் பட்டி ரங்கராஜன் கலந்து கொள்கிறார் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே நடிகராகவும் பல பிரபலங்களின் வீட்டு நிகழ்ச்சிகளில் சமையலில் அசத்தி கொண்டிருக்கும் மாதம்பட்டி ரங்கராஜனுக்கு சமூக வலைத்தளத்தில் அதிகமான பாலோவர்ஸ் இருக்கின்றனர். அவர் இந்த நிகழ்ச்சிக்கு வந்தால் நிகழ்ச்சி மேலும் களைக்கட்டும் என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது.

இந்த நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் அடுத்த ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அதாவது அந்த தகவலில் தாமுவும் இந்த இந்த சீசனிலிருந்து வெளியேறப் போவதாக கூறப்படுகிறது. யார் எங்கே போனாலும் நான் விஜய் டிவியில் இருந்து போகமாட்டேன் என்று தாமு உறுதியாக கூறி இருந்த நிலையில் தற்போது அவர் குழப்பத்தில் இருப்பதாகவும் அவரை வெளியே இழுக்கும் முயற்சி தொடர்ந்து நடந்து கொண்டு இருப்பதாகவும்,

அதனால் தாமு மதில் மேல் பூனையாக விஜய் டிவியில் தொடரலாமா? அல்லது வேறு டிவி சேனலுக்கு போகலாமா? என்று குழப்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இது உண்மையான செய்தி தானா அல்லது குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பற்றி ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாக்குவதற்காக இப்படி போலி செய்திகளை பரப்புகிறார்களா என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது.

எது எப்படியோ இன்னும் ஒரு வாரத்திற்குள் ப்ரோமோ வெளியானால்தான் இந்த சீசன் தொடரும் என்பது தெரிகிறது. இது பற்றி சேனல் தரப்பில் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த தகவல்களையும் அளிக்கவில்லை.. என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X