சினிமாவை விட மோசமா சின்னத்திரை..அடுத்தடுத்து சீரியலில் இருந்து விலகும் நடிகைகள்.. என்னதான் நடக்குது!
சென்னை: இரண்டரை மணி நேரத்தில் முடிந்து விடும் சினிமாவை விட தினம் தினம் புதுப்புது கதையோடு சுவாரசியமாக இல்லத்தில் இருந்தபடியே பார்க்கும் சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். எந்த வேலையாக இருந்தாலும், பிடித்தமான சீரியல் வருகிறது என்றால் அந்த நேரத்திற்கு முன்பாகவே தொலைக்காட்சி பெட்டியில் முன் அமர்ந்து விடுவது இல்லத்தரசிகளின் வழக்கமாக இருக்கிறது. அப்படி சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கும் இந்த நேரத்தில் பிரபலமான சீரியல்களில் இருந்து அடிக்கடி மனதிற்கு பிடித்த நடிகைகள் விலகி செல்வது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா ஜீ தொலைக்காட்சியில் மௌனம் பேசியதே என்ற சீரியலில் நடித்து வந்தார். திடீரென அந்த சீரியலில் இரந்து விலகிய ஜோவிதா, அதற்கான காரணத்தை பதிவிட்டு இருந்தார். அதாவது, இந்த சீரியலில் என்னுடைய ரோலின் பெயர் துளசி. இந்த ரோலானாது கலாச்சாரத்திற்கு எதிரானதாக என்னை மாற்றியது. சுயநலமான ஒரு கதாபாத்திரம். இத்தனை நாட்களாக இந்த சீரியலில் நடித்து வந்த நிலையில் அது எனக்கு கஷ்டமாக இருந்ததால் அதில் இருந்து விலகுகிறேன் என மட்டுமே கூறியிருந்தார்.

மாரி சீரியல்: அதே போல, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மாரி சீரியலில் கதாநாயகியாக நடித்த ஆஷிகா இந்த சீரியலில் இருந்து விலகினார். ஆனால், எதற்காக விலகினார் என்று தெரியவில்லை. தற்போது அவருக்கு பதிலாக அஞ்சனா ஸ்ரீநிவாஸன் நடிக்கிறார். ஆஷிகா விலகியதால், அந்த மாரி கதாபாத்திரம் இறந்துவிட்டதாக கதையை மாற்றி, வேறொரு பெண்ணின் உடலில் மீண்டும் வருவது போல கதை கொண்டு செல்லப்படுகிறது. அதே போல இந்த சீரியலில் நடித்து வந்த ஹீரோவான ஆதர்ஷ் விலகிவிட்டார்.

ஆனந்த ராகம்: அதேபோல,ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ஆனந்த ராகம் சீரியலில் நடித்து வந்த, ஸ்வேதா திடீரென நடித்து வருகிறார். சீரியலில் வாய் பேச முடியாத பெண்ணாகத்தான் நடித்துக் கொண்டிருக்கிறார்.அபி கேரக்டர் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல் என்று மட்டும் பதிவிட்டு இருந்தார்.ஆனால், விலகியதற்கான காரணத்தை சொல்லவில்லை,.

நெஞ்சத்தை கிள்ளாதே: ஜீ தமிழ் சேனலில் நடிகர் ஜெய் ஆகாஷ் மற்றும் ரேஷ்மா முரளிதரன் நடித்த நெஞ்சத்தை கிள்ளாதே சீரியல் ஆறு மாதத்திலேயே முடிக்கப்பட்டு விட்டது. இதற்கு விளக்கம் கொடுத்த ஜெய் ஆகாஷ், சீரியல் தொடங்குவதற்கு முன்பே எனக்கு ஏற்பட்ட விபத்தில் காலில் அடிபட்டு இருந்தது. அதற்கு மேஜர் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று சொல்லி இருந்தார்கள். ஆனால் குறிப்பிட்ட நாளில் சீரியல் தொடங்க வேண்டும் என்பதற்காக நான் ஆபரேஷன் செய்யாமல் அந்த வலியோடு தான் சீரியலில் நடிக்க தொடங்கினேன்,இப்போது ஆப்ரேஷன் செய்வதால் இந்த சீரியல் இருந்து விலகி இருக்கிறேன் என்றார். இப்படி அடுத்தடுத்து சீரியல்களில் மனதிற்கு பிடித்த நடிகைகள் சீரியல் இருந்து விலகுவதால், சீரியல் பிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.மேலும், சின்னத்திரையில் நடிகர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறதா என்றும் பயில்வான் சொல்வது போலத்தான் நடக்கிறதா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











