போலி போலி போலி பிக் பாஸ்: ஆதாரம் இதோ- கமல் சார் இது என்னான்னு கேளுங்க

By Siva

சென்னை: பிக் பாஸ் பார்வையாளர்களை நன்றாக ஏமாற்றுவது தெரிய வந்துள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சி ஸ்கிரிப்ட் படி நடக்கவில்லை என்று சம்பந்தப்பட்டவர்கள் எத்தனை முறை கூறினாலும் அதை நம்ப பார்வையாளர்கள் தயாராக இல்லை. எழுதிக் கொடுத்தபடி தான் போட்டியாளர்கள் நடிக்கிறார்கள் என்று அடித்துக் கூறுகிறார்கள் பார்வையாளர்கள்.

What is this Bigg Boss?

பிக் பாஸ் வீட்டில் நடப்பதை முன்கூட்டியே வீடியோவாக்குவதாகவும் பேச்சு உள்ளது.

மும்தாஜ்

அணியின் தலைவரான மும்தாஜும், உறுப்பினரான மகத்தும் மோதிக் கொள்வது போன்ற ப்ரொமோ வீடியோ கடந்த 25ம் தேதி வெளியானது. தம்பி லீடர் சொல்றத செய்! #பிக்பாஸ் - தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #VivoBiggBoss என்று எழுதி ப்ரொமோ வீடியோவை வெளியிட்டனர்.

பிக் பாஸ்

ப்ரொமோவை பார்த்துவிட்டு அன்றைய இரவு பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்தால் மகத்தும், மும்தாஜும் மோதிய அந்த காட்சி வரவே இல்லை. யோவ் பிக் பாஸ் ப்ரொமோ வீடியோவில் காண்பித்த சண்டை காட்சி எங்கய்யா?. எங்களை ஏமாற்றப் பார்க்கிறீரா என்று நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்தனர்.

சண்டை

25ம் தேதி வெளியான ப்ரொமோ வீடியோவில் இருந்த சண்டை காட்சி நேற்றைய நிகழ்ச்சியில் தான் காண்பிக்கப்பட்டது. மூன்று நாட்களுக்கு முன்பே ப்ரொமோவில் காட்டப்பட்ட காட்சி நேற்று நடந்தது போன்று காண்பித்து ஏமாற்றுகிறீர்களா என்று பார்வையாளர்கள் கோபம் அடைந்துள்ளனர். அப்படி என்றால் நிகழ்ச்சியை ஸ்கிரிப்ட் படி முன்கூட்டியே வீடியோ எடுத்து வைத்து விருப்பப்படும் நேரத்தில் எங்களுக்கு போட்டுக் காட்டி அன்றன்று நடப்பது போன்று நாடகம் ஆடுகிறீர்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

போலி

போட்டியாளர்கள் மட்டும் அல்ல பிக் பாஸுமே போலி என்பது தற்போது தெரிய வந்துள்ளது. டாஸ்க் ஐடியா கொடுப்பவர் தான் சொதப்பல் என்று பார்த்தால் எடிடிங் அணியும் சொதப்பலா என்று பார்வையாளர்கள் சிரிக்கிறார்கள். என்ன பிக் பாஸ் இப்படி செய்துவிட்டீர்களே? கமல் சார் இன்று இரவு நீங்கள் இந்த வீடியோ பஞ்சாயத்து குறித்து பேச வேண்டும். கடைசியில் பிக் பாஸுக்கு குறும்படம் போண்ட வேண்டியது வந்துவிட்டதே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X