twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Bigg boss 3 tamil: அட மக்குகளா... மதுமிதா கேட்ட பழைய சாதத்தோட அருமை தெரியுமா?

    |

    சென்னை: விஜய் டிவியின் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி ரொம்ப பரபரப்பா ஒளிபரப்பாகிட்டு வருது. பிக் பாஸ் வீட்டில் ஹவுஸ் மேட்ஸுக்கு வசதி வாய்ப்பு, நல்ல சாப்பாடு என்று எதற்கும் பஞ்சமில்லை.

    நேற்று மற்றும் அதற்கு முந்தைய தினம் என்று இரண்டு நாட்களாக சாப்பிட்டு இருக்கார் போலும். அது அவருக்கு பிடிக்கவில்லை. ஓட்ஸ் மற்றும் காய்கறிகள், சாஸ் எல்லாம் போட்டு இனிப்பு சுவையுடன் அந்த சிற்றுண்டி இருந்திருக்கிறது.

    பாவம் மதுமிதாவுக்குனு அந்த சுவை பிடிக்கவில்லை. தாம் சாப்பிடப் போகும் தட்டில் என்ன உணவு வேண்டும் என்று சாப்பிடுபவர் தீர்மானிக்கும் உரிமை மனிதர்கள் எல்லாருக்கும் உண்டு. இதை சாப்பிடு, அதை சாப்பிடாதே என்று கட்டளையிட யாருக்கும் உரிமை இல்லை.

    எனக்கு பிடிக்கலை

    எனக்கு பிடிக்கலை

    ஓட்ஸ் எனக்கு பிடிக்காது... ஓட்ஸ் சாப்பிட்டால் நான் இளைச்சு போயிருவேன். அதோட அந்த டிஷ்ஷில் இனிப்பு சுவையும் இருந்ததுனால தனக்கு பிடிக்கலைன்னு சொல்லி இருக்கார் மதுமிதா. அதோட, அம்மா அதாவது ஃபாத்திமா அம்மா சமையல் டீமிலிருந்த போது தனக்காக ராத்திரியே கொஞ்சம் சாதம் எடுத்து வச்சு தண்ணீர் ஊற்றி வச்சுருவாங்க. அதைத்தான் நான் சாப்பிடுவேன்.

    கொஞ்சம் சாதம்

    கொஞ்சம் சாதம்

    எனக்காக யாரும் எதுவும் மெனக்கெட்டு செய்ய வேண்டாம், ராத்திரி அல்லது மதியம் வைக்கும் சாதத்தில் ராத்திரி நேரத்தில் கொஞ்சம் எடுத்து வச்சு தண்ணீர் ஊத்தி வச்சிருங்க. அதை தினமும் காலையில் நான் பழைய சாதமா பழம் கஞ்சின்னு சாப்பிட்டுக்கறேன்னு சொன்னார். அவ்ளோதான்... அபிராமி, காலையில சாதமா.. ஐயோ எனக்கு கேரா வரும். சுத்தமா காலையில சாதம் சாப்பிட எனக்குப் பிடிக்காதுன்னு கமெண்ட் சொல்றார்.

    சாப்பிட பிடிக்குமா அம்மணி?

    சாப்பிட பிடிக்குமா அம்மணி?

    அப்போ காலையில் அரிசியில் செய்த அதே சாதம், எண்ணெய் பருப்புன்னு சேர்த்து பொங்கலா சாப்பிட்டா ரொம்ப பிடிக்குமா உங்களுக்கு அபிராமி அம்மணி ? மதுமிதா மிக ஏழ்மையில் இருந்துதான் இந்த நிலைமைக்கு வந்திருக்கார். அதனாலேயே அவர் பழைய சாதம் கேட்டால் அது ஏழைகளின் உணவு என்று அர்த்தம் இல்லை.

    ஹெல்தி உணவா

    ஹெல்தி உணவா

    நவ நாகரிக மிகவும் ஹெல்தியான உணவா அமெரிக்காவில்,இன்னும் தமிழர்கள் வசிக்கும் அத்தனை நாடுகளிலும் இந்த பழைய சாதம் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அங்குள்ள சூப்பர் மார்க்கெட், அதோடு தமிழகத்தின் அத்தனை நகரங்களிலுள்ள சூப்பர் மார்க்கெட்டுகளில் மண் பாணையில் வச்சு விற்கிறார்கள். பழைய சாதத்தில் இருக்கும் ஈஸ்ட், நல்ல பாக்டீரியா , உடல் கொழுப்பை கரைத்து, உடல் எடையை குறைக்கிறது,எதிர்ப்பு சக்தியை தூண்டுதுன்னு எத்தனை நன்மைகளை ஆராய்ச்சி மூலம் பட்டியலிட்டு இருக்கிறார்கள் அமெரிக்க அறிஞர்கள்.

    பிக் பாஸ் அடுத்து 4 வது சீசனில் எல்லாருக்கும் காலை உணவாக பழைய சாதமுண்டு என்கிற ஆப்ஷனையும் குடுங்க பிக் பாஸ்.சாப்பிடறவங்க சாப்பிடட்டும்.

    English summary
    Vijay TV's Bigg Boss 3 has been aired. There is no dearth of accommodations and good meals to house mates in Bigg Boss.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X