For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  முட்டை போண்டா சாப்பிட்டு பாரதியிடம் மாட்டிக் கொள்ளும் செளந்தர்யா குடும்பம்...அடுத்து என்ன ?

  |

  சென்னை : சில நாட்களுக்கு முன் வரை டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து முன்னணியில் இருந்து வந்த சீரியல் விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா தான். இந்த இடத்தை சமீபத்தில் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தட்டி பறித்தது.

  கடந்த சில வாரங்களாகவே கண்ணம்மா இரட்டை குழந்தைகள் விவகாரம் பற்றியே பேசுவது, புலம்புவது. அடுத்த ஷாட்டிலேயே அதே விஷயத்தை வைத்து செளந்தர்யா புலம்புவது. வெண்பாவின் மிரட்டல். அதை கண்ணம்மாவும் நம்பி, வெண்பா சொல்வதை எல்லாம் செய்வதாக கெஞ்சுவது என செம போராக இருந்தது. சில விஷயங்கள் லாஜிக் இல்லாமலும் இருந்தது.

  பாபநாசம் 2 இப்போ இல்லை... ஸ்ரீபிரியா வெளியிட்ட அதிரடி தகவல் பாபநாசம் 2 இப்போ இல்லை... ஸ்ரீபிரியா வெளியிட்ட அதிரடி தகவல்

  எதிர்பார்ப்பை வீணாக்கிய பாரதி

  எதிர்பார்ப்பை வீணாக்கிய பாரதி

  இந்நிலையில் சரிந்த ரேட்டிங்கை மீண்டும் உயர்த்துவதற்கு, கண்ணம்மா நல்லவ. மீதமுள்ள காலத்தை அவளுடன் வாழ நினைக்கிறேன் என பாரதி குடும்பத்தினர்களிடம் பேசுவது போலவும், பாரதியை இனி தடுக்க முடியாது என வெண்பா தடுமாறுவது போலவும் ஒரே ப்ரோமோ வெளியிடப்பட்டது. இதனால் கண்ணம்மாவும், பாரதியும் ஒன்று சேர போகிறார்கள் என்ற ஆர்வத்தில் ரசிகர்களும் சீரியலை பார்த்தால், கடைசியில் நடிப்பு என கூறி புஸ் ஆக்கினார் பாரதி.

   சத்தியம் கேட்கும் பாரதியின் அப்பா

  சத்தியம் கேட்கும் பாரதியின் அப்பா

  இதனால், அட..போங்கப்பா என்ற ரேஞ்ஜில் கடுப்பான ரசிகர்கள், பாரதி கண்ணம்மா ப்ரோமோவை கழுவி ஊற்ற துவங்கினர். அடுத்த ப்ரோமோவில் பாரதியின் அப்பா வேணுகோபால் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாகவும், அவர் கண்ணம்மாவை பார்க்க ஆசைப்படுவதாகவும், பதறி அடித்து ஹாஸ்பிடலுக்கு வரும் கண்ணம்மா மற்றும் அங்கு இருக்கும் பாரதியிடம் சேர்ந்து வாழ சத்தியம் கேட்பதாக காட்டப்பட்டது.

  காமெடியான எபிசோட்

  காமெடியான எபிசோட்

  ஆனால் ப்ரோமோவிற்கும், சீரியலுக்கும் சம்பந்தமே இல்லாதது போல், வேணு கோபால் நெஞ்சுவலி வந்ததாக நடித்து ஹாஸ்பிடலில் சேருவதாகவும், அங்கு மனைவி செளந்தர்யா, இளைய மகன் அகிலனுடன் சேர்ந்து முட்டை போண்டா சாப்பிடுவதாகவும், அப்போது அங்கு வரும் பாரதியிடம் அவர்கள் மாட்டிக் கொள்வது போன்றும் காமெடியாக நேற்றைய எபிசோட் காட்டப்பட்டது. இதையும் நெட்டிசன்கள் கழுவி ஊற்றினார்கள். ஒருவர் நிஜமாக நெஞ்சு வலியுடன் இருக்கிறாரா அல்லது நடிக்கிறாரா என்பதை கூட கண்டு பிடிக்க தெரியாத அதிபுத்திசாலி டாக்டராக இருக்கிறாரே பாரதி என கிண்டல் செய்தனர்.

  Bharathi Kannamma setல் பட்டையகிளப்பும் Venba | Farina Azad, BK shooting
  மொக்கை காமெடி

  மொக்கை காமெடி

  காமெடி என்ற பெயரில் மொக்கை போடுகிறார்கள். இதை பாரதி இனியாவது கண்டுபிடிப்பாரா அல்லது அவர் அப்பா கேட்டபடி கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழ்வதாக சத்தியம் செய்வாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து சிலர் கமெண்ட் செய்துனர். வழக்கம் போல் இதுவும் சொதப்பல் காட்சியாக தான் முடியும் என பலர் கூறி உள்ளனர்.

  வீட்டிற்கு வர மறுக்கும் கண்ணம்மா

  வீட்டிற்கு வர மறுக்கும் கண்ணம்மா

  இனி வரும் எபிசோடில், அப்பாவின் உடல்நிலைக்கு எந்த பிரச்சனையும் இல்லை என அவரை டிஸ்சார்ஜ் செய்கிறார் பாரதி. கண்ணம்மாவையும், அவரது குழந்தையையும் தங்களுடனேயே வீட்டில் வந்து இருக்கும்படி கேட்கிறார் வேணுகோபால். ஆனால் கண்ணம்மா வைராக்கியமாக அதை மறுத்து, பாரதிக்கு நோஸ்கட் கொடுக்கிறார். சரி, வீடு வரை வந்து டிராப் செய்யும்படி கண்ணம்மாவை கேட்கிறார் வேணுகோபால். கண்ணம்மாவும் சம்மதம் சொல்லி வீடு வரை செல்கிறாள்.

  பாரதி மன்னிப்பு கேட்கனும்

  பாரதி மன்னிப்பு கேட்கனும்

  வீட்டு வாசல் வரை செல்லும் கண்ணம்மா, உள்ளே செல்ல மறுக்கிறாள். பாரதி தனது தவறை உணர்ந்து தன்னிடம் மன்னிப்பு கேட்டால், அதற்கு பிறகு வீட்டிற்கு வருவதா வேண்டாமா என யோசிப்பதாக சொல்கிறாள் கண்ணம்மா. செளந்தர்யாவும் மற்றவர்களும் எவ்வளவு பேசினாலும் சென்டிமென்ட்டாக பேசி வீட்டிற்குள் செல்லாமல், அங்கிருந்து சென்று விடுகிறாள் கண்ணம்மா.

  English summary
  Bharathi discharges as there is no problem with his father’s health. Venugopal asks Kannamma and her child to come home with them. But Kannamma eagerly denies. Venugopal asks Kannamma to come up to the house and drop him. Kannamma agrees and goes home.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X