அந்த பெட்டில் என்ன தான் நடந்துச்சு பிக் பாஸ்?: ஐஸும், யாஷிகாவும் எங்க காதில் ஓட்டை போடுறாங்க
Recommended Video

சென்னை: அந்த பெட்டில் ஷாரிக்கும், ஐஸ்வர்யாவும் அப்படி என்ன தான் செய்தார்கள் பிக் பாஸ்.
நேற்று முன்தினம் இரவு படுக்கையில் ஷாரிக்கும், ஐஸ்வர்யாவும் என்ன தான் செய்தார்கள் என்பதை தெரிந்து கொள்ள பார்வையாளர்கள் விரும்புகிறார்கள்.
மகத்தின் லூட்டியை கண்டுகொள்ளாத கமல் நேற்று முன்தினம் கோபப்பட்டு கண்டித்தார் என்றால் நிச்சயம் ஏதோ நடந்திருக்க வேண்டும்.

உறுதி
படுக்கையில் நடந்ததை நான் கூற விரும்பவில்லை என்று பொன்னம்பலம் மீண்டும் மீண்டும் கூறுகிறார். சும்மா தான் பேசினோம் என்று மல்லுக்குப் பாய்கிறார் ஐஸ்வர்யா.

போட்டியாளர்கள்
தூங்கச் சொல்லி விளக்குகளை சுவிட்ச் ஆஃப் செய்த பிறகு ஐஸ்வர்யா ஷாரிக்கின் படுக்கைக்கு சென்று படுத்துள்ளார். தமிழ் கலாச்சாரப்படி இது அசிங்கம் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

யாஷிகா
இரவு நேரத்தில் ஆம்பள பையனின் படுக்கைக்கு சென்றதை ஒத்துக் கொண்ட ஐஸ்வர்யா சும்மா தான் பேசினோம் என்கிறார். அவருக்கு ஆதரவாக யாஷிகா சண்டை போடுகிறார்.

பிக் பாஸ்
ஏன் பிக் பாஸ், ஒரு குறும்படம் போட்டு இந்த பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டியது தானே. இந்த ஐஸ்வர்யா, யாஷிகா ஆகியோர் கூகூன்னு கத்தி எங்கள் காதில் ஓட்டை போடுகிறார்கள்.

வேண்டாம்
சண்டை போட்டால் நிகழ்ச்சி விறுவிறுப்பாக செல்லும் என்று யாரோ பிக் பாஸுக்கு தவறான ஐடியா கொடுத்துள்ளார்கள். பிக் பாஸ் வீட்டில் நடக்கும் சண்டையை பார்த்தால் எரிச்சலில் டிவியை ஆஃப் செய்யத் தோன்றுகிறது.
பிக்பாஸ் இல்லத்தில் இன்று .. கைதி ஆகிறார் யாஷிகா


Click it and Unblock the Notifications











