வெளியேற்றத்திற்கு வருத்தப்படல.. ஆனால் சிவாங்கி செய்தது? ரகசியங்களை வெளி கொண்டு வந்த விஜே விஷால்

சென்னை: குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் இருந்து விஜே விஷால் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்.

விஜே விஷால் வெளியே வந்த பிறகு முதல் முறையாக வீடியோ ஒன்றை வெளியிட்டு அனைவருக்கும் நன்றி கூறி இருக்கிறார்.

சிவாங்கி மற்றும் விஜே விஷால் பற்றி வெளியாகி வரும் வதந்திகளுக்கு விஷால் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

What VJ Vishal eliminated had to say about Shivangi Cook with Comali

எதிர்பாராத வெளியேற்றம்: குக் வித் கோமாளி நான்காவது சீசன் நிகழ்ச்சியில் இந்த வாரம் விஜே விஷால் எலிமினேஷன் செய்யப்பட்டிருக்கிறார். இது அவருடைய ரசிகர்களின் மத்தியில் பெருத்த அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. பலரும் தங்களுடைய ஏமாற்றம் மற்றும் வருத்தத்தை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்கள். அது குறித்து முதல் முறையாக விஜே விஷால் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

ஆறுதல் வார்த்தைகள்: தனக்கு பலரும் வருத்தத்தை தெரிவித்து வருவதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த அளவிற்கு எனக்கு வரவேற்பு இருக்கும் என்றும் ரசிகர்களின் மத்தியில் ஆதரவு இருக்கும் என்றும் தெரியும்போது எனக்கு அப்படியே பறப்பது போன்று இருக்கிறது. பலர் இந்த நிகழ்ச்சியில் இருந்து நான் எலிமினேஷன் ஆனதற்கு அழுது வீடியோ வெளியிட்டு இருக்கிறார்கள். அதை நான் போஸ்ட் செய்யவில்லை. ஆனால் அவர்களுக்கு கமெண்ட் செய்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

What VJ Vishal eliminated had to say about Shivangi Cook with Comali

ஆரம்ப பயணம்: மேலும் விஜே விஷால் வெளியேறியது சிவாங்கியை காப்பாற்றுவதற்காக விஜய் டிவி செய்யும் சூழ்ச்சி என்று பலர் கருத்து கூறி வருகிறார்கள். அதற்கும் விஷால் கருத்து கூறியிருக்கிறார். அதில் சிவாங்கியும் நானும் ஒரே நேரத்தில் பயணத்தை தொடங்கியவர்கள்.. அந்த நேரத்தில் சிவாங்கி பாடகியாக மாற வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருந்தார். நான் தொகுப்பாளராக மாற வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டு இருந்தேன்.

கண்டு கொள்வது கிடையாது: இருவருக்கும் ஆரம்பத்திலேயே நல்ல பாண்டிங் இருந்தது. இப்போது ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் எங்களை பற்றி வரும் மீம்ஸ்கள் மற்றும் வதந்திகளை பற்றி சிவாங்கியும் நானும் எந்த நேரத்திலும் கண்டு கொண்டதே கிடையாது. நாங்கள் இருவருமே எப்போதும் நல்ல நண்பர்களாக இருக்கிறோம். இந்த நிகழ்ச்சிக்காக அனைத்து குக்குகள் மற்றும் கோமாளிகள் எல்லோருமே பெரிய அளவில் ஹார்ட்ஒர்க் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

What VJ Vishal eliminated had to say about Shivangi Cook with Comali

நடப்பது இதுதான்: அந்த நாளில் என்ன நடக்கிறதோ அதுதான் முடிவு. யாரும் வேண்டுமென்றே இங்கே செயல்படுவது கிடையாது. கோமாளிகளும் எங்களுக்கு சிறப்பானதை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் சிலர் சிவாங்கி குறித்து கூறுவது பார்க்கும்போது வேதனையாகத்தான் இருக்கிறது. இங்கே ஒருதலைப் பட்சமாக யாருக்கும் எதுவும் நடப்பதே இல்லை. நான் என்னுடைய பெஸ்ட் கொடுத்தேன் ஆனால் அதைவிட இன்னொருவருக்கு பெஸ்ட்டாக இருந்தால் நாம் ஒன்றும் சொல்வதற்கு இல்லை.

நல்ல நண்பன்: அதனால் யாரை பற்றியும் தேவையில்லாமல் எந்த தவறான கருத்துக்களையும் கூற வேண்டாம் என்று விஜே விஷால் வெளியிட்ட வீடியோவை சிவாங்கி ரசிகர்கள் அதிகமானோர் பகிர்ந்து, நண்பன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். தன்னை பெருமையாக பேச வேண்டும் என்று அமைதியாக இருக்காமல் அங்கே நடப்பது பற்றி வெளிப்படையாக விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி கூறி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X