Lakshmi stores serial: ஒரு காதல் வந்துச்சா ஒரு காதல் வந்துச்சா? நடந்த கல்யாணம்?

சென்னை: சன் டிவியின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் கதை இப்போது ரொம்ப சீரியஸாக ஒளிபரப்பாகி வருது. இந்த மாதிரி தவறுகளை சரி செய்ய முடியுமா என்பது போல காட்சி அமைப்புக்கள் இருக்கின்றன.

பாக்கிய லட்சுமியும் ரவியும் காதலர்கள்.ரவி பணக்கார வீட்டு பையன்.இருவரும் பீச்சில் சந்திக்கும் போது , பீச்சில் சுற்றித் திரியும் நல்ல ரவுடிகளால் பாக்கியலட்சுமியின் கழுத்தில்தாலி கட்ட நேர்ந்துவிடுகிறது.

இதனால், பாக்கிய லட்சுமி அழுது கொண்டு இருக்க, விருப்பம் இல்லேன்னா தாலியை கழட்டி தூக்கி கடலில் போட்டுடு பாக்கிய லட்சுமின்னு சொல்றான். எப்படிங்க நான் தூக்கிப் போடுவேன். உங்களை எனக்கு அவ்வளவு பிடிக்கும் ரவின்னு அவளும் தாலியை ஏத்துக்கறா.

திருமணத்தை பதிவு

திருமணத்தை பதிவு

ரவி, பாக்கிய லட்சுமிக்கு நடந்த ரகசியத் திருமணம் யாருக்கும் தெரியாத இந்த நேரத்தில், ரவிக்கும் மினிஸ்டரின் மகள் தேஜாவுக்கும்தான் கல்யாணம் என்று ரவியின் அண்ணன் தேவராஜ் தேஜாவுக்கு சத்தியம் கொடுத்துட்டு வந்துடறார்.இந்த நேரத்தில்தான் ரவியும், பாக்கிய லட்சுமியும் பதிவுத் திருமணம் செய்துக்கலாம்னு முடிவு செய்யறாங்க. பதிவுத் திருமணத்துக்குத் தயாராக இருவரும் கிளம்புகிறார்கள்.

தாத்தாவிடம் பாக்கியலட்சுமி

தாத்தாவிடம் பாக்கியலட்சுமி

ரகசிய கல்யாணம் பற்றி பாக்கிய லட்சுமி தாத்தாவிடம் மட்டும் சொல்லி இருக்கிறாள், இந்த விஷயத்தை ரவியின் அண்ணி மகாலட்சுமியிடம் சொல்லி விட்டதாகவும் பொய் சொல்லிடறா. .அப்போ , மகாம்மா இந்த பதிவுத் திருமணத்துக்கு வருவங்களான்னும் கேட்கறார். அப்போதும் வருவாங்கன்னு போய் சொல்லிடறாங்க .அது மட்டுமில்லை, ரவிக்கு தேஜாவை நிச்சயம் செய்து இருக்கும் விஷயத்தையும் தாத்தாவிடம் பாக்கிய லட்சுமி மறைச்சுடறா தங்கையுடன் சேர்ந்து.

ரெஜிஸ்டர் அலுவலகத்தில்

ரெஜிஸ்டர் அலுவலகத்தில்

பதிவுத் திருமண அலுவலகத்தில் ரவிக்கும் பாக்கிய லட்சுமிக்கும் கல்யாணம் நடக்க இருக்கும் விஷயத்தை அறிந்த, ரவியின் அண்ணன் தேவராஜ், இன்னொரு தம்பி மனைவி உமாவுடன் சேர்ந்து இந்த கல்யாணத்தை நிறுத்த வருகிறார்.ரவி இல்லாத அந்த இடத்தில் தேவராஜ் பாக்கிய லட்சுமியைப் பிடித்து தள்ளிவிட, இதைப்பார்த்த அவளின் தங்கை தேவராஜை மரியாதை இல்லாமல் பேசறா.இதைத் தாங்கிக்காத அந்த மனிதர் அந்த பெண்ணை அடிக்கப்போக,அது பாக்கியலட்சுமி தாத்தா கன்னத்தில் பட்டுவிடுகிறது.

ரவியை ஏன்

ரவியை ஏன்

ரவியின் அன்னனனுக்கு தெரியாமல் நடக்கும் இந்த ரகசிய கல்யாணத்தில் ரவியின் அண்ணன் தேவராஜ் வருவதை உடனே சென்று ரவியிடம் தெரிவிக்காதது தப்பு இல்லையா பாக்கியலட்சுமி?
சரி, அப்படியே உன் பார்வைக்கு தேவராஜ் உனது தாத்தாவை அடித்தது தப்பு என்றாலும், அவர் சட்டையை உலுக்கு கேள்விகள் கேட்டு முடிந்த போதே ஆத்திரம் தணிந்து இருக்க வேணாமா, அது என்னகைநீட்டி உன் மீது நம்பிக்கை வைத்த பெரிய வக்கீலை அடிப்பது.அதுவும் அவர் தம்பியை கல்யாணம் செய்துக்க வந்துட்டு? எத்தனை கேள்விகள் இடிக்கிறது.இனி எப்படி அவர் முகத்தில் முழித்து அந்த வீட்டில் வாழ முடியும்?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X