சிலுக்குன்னு கூப்பிட்டு இருக்கானே...அந்த கண்களின் கவர்ச்சிக்காகவா?
சென்னை: சன் டிவியின் சூப்பர் சிஸ்டர் நிகழ்ச்சியில் ரோஜா சீரியலில் அனுவாக நடிக்கும் ஷாலினி தன் அக்காவுடன் கலந்துகொண்டார்.
அம்மாவுக்கு ஷாலினி நடிகையானதில் விருப்பம் இல்லையாம். அப்புறம் ஒரு வழியா நடி.. ஆனா, ஆண்களை தொட்டு நடிக்க கூடாதுன்னு கண்டிஷன் போட்டாங்களாம்.

அதனாலதான் இன்றுவரை வில்லியாக நடிக்கிறேன்னு சொன்னார். வில்லியாக நடிப்பதில் இப்படியும் ஒரு நல்லது இருக்கிறது பாருங்களேன்...
இன்று வரை தன் நடிப்பைப் பாராட்டி அம்மா ஒரு வார்த்தை பேசியதேயில்லை... நதியா மேடம்கூட நடிச்சு இருக்கேன் பாரும்மான்னு சொன்னேன். அன்னிக்கு ரோஜா சீரியலை அம்மா பார்க்கவே இல்லைன்னு சொல்லி கலங்கினார் ஷாலினி.
ஆஃபீஸ் போற அக்காவுக்கு காலையிலேயே எழுந்திரிச்சு சமைச்சு குடுப்பாங்க.ஒரு நாள்கூட காலையில ஷூட்டிங் கிளம்புறியே எங்க சாப்பிடுவ.. வந்தவுடனே என்ன சாப்பிட்டேன்னு கேட்டதே இல்லைன்னும் சொன்னார்.
சன் டிவி இந்த மாதிரி பர்சனல் விஷயங்களை சொல்ல தூண்டிவிட்டு, வேடிக்கை பார்ப்பது கொஞ்சம்கூட நல்லா இல்லை.இது பாவமில்லையா?
ஸ்கூல் படிக்கும்போது ஒரு பையன் ஷாலினியைப் பார்த்து சிலுக்குன்னு கூப்பிடுவானாம். ஏன் அப்படி கூப்பிட்டான்னு கேட்டதுக்கு அவர் தெரியலைன்னு சொன்னார்.
ஆனா,ஷாலினிக்கு கண்கள் கவர்ச்சியா இருக்கு.. ஒரு வேளை அதனால சிலுக்குன்னு கூப்பிட்டு இருப்பானோ?


Click it and Unblock the Notifications











