ரஜினியை பார்த்து 'வாடா' என்ற புதுமுக நடிகை: பதறிய படக்குழு
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியை பார்த்து வாடா என்று தான் கூறியதாக நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
நடிகைகள் குஷ்பு மற்றும் கவுதமி ஆகியோர் காபி வித் டிடி என்ற விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது குஷ்பு தனது திரை உலக அனுபவங்கள் பற்றி பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,

தர்மத்தின் தலைவன்
எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த், பிரபு, சுஹாசினி நடித்த தர்மத்தின் தலைவன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானேன் என்றார் குஷ்பு.

தமிழ் தெரியாது
அந்த படத்தில் நடித்தபோது எனக்கு தமிழ் தெரியாது. அதனால் படக்குழுவினர் எனக்கு தப்புத் தப்பாக தமிழ் கற்றுக் கொடுத்தனர். நானும் அதை கற்றுக் கொண்டேன்.

வாடா போடா
தமிழில் வாடா என்றால் காலை வணக்கம் என்றும், போடா என்றால் மாலை வணக்கம் என்றும் படக்குழுவினர் எனக்கு சொல்லிக் கொடுத்தனர் என்று குஷ்பு தெரிவித்தார்.

ரஜினியை பார்த்து
படப்பிடிப்புக்கு வந்த ரஜினியை பார்த்ததும் நான் வாடா என்று சட்டென்று தெரிவித்தேன். அதை கேட்ட படக்குழுவினர் அதிர்ந்துவிட்டனர். ரஜினியோ ஜாலி டைப் என்பதால் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சிரித்தார் என்று குஷ்பு கூறினார்.


Click it and Unblock the Notifications











