இளவரசியின் அபத்தங்கள்... சீரியலை எப்போ முடிப்பீங்க?

By Mayura Akilan

சன் டிவியில் ஒளிபரப்பாகும் இளவரசி நெடுந்தொடரில் மூடநம்பிக்கை தூண்டும் நிகழ்வுகளும், அபத்தமான வசனங்களும் அரங்கேறி வருகின்றன. கதையை எப்படி நகர்த்துவது என்று தெரியாமல் நொண்டியடிக்கத் தொடங்கியுள்ளது நெடுந்தொடர்.

ராடான் டிவி மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பான இளவரசி தொடர் சன்டிவியில் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. கண்ணீரும் கம்பலையுமாக அலையும் இளவரசி அடிக்கடி காணாமல் போகிறார் இல்லையென்றார் யாராவது கடத்தி விடுகின்றனர். இதுதான் கதையாக இருக்கிறது.

குடும்பத்தில் நடக்கும் பிரச்சினைகள்தான் இளவரசி கதையாக தொடங்கியது. ஆனால் இப்போது கதையை எப்படி நகர்த்து என்பதே பிரச்சினையாக உள்ளது.

சுப்ரமணி- இளவரசி

சுப்ரமணி- இளவரசி

தோழி செய்த கொலைக்காக சிறைக்குப் போன இளவரசி. அந்த கொலையை செய்த தோழி குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து சிறையில் இருந்து விடுதலையாகிறார். ஆனால் தனது குழந்தையையும், கணவரையும் சந்திக்காமல் தோழியில் வீட்டில் போய் ஒளிந்து கொள்கிறாள். நாயகன் சுப்ரமணி தனது மனைவி இளவரசியை தேடி அலைந்து வருகிறான்.

கடத்தப்பட்ட இளவரசி

கடத்தப்பட்ட இளவரசி

இளவரசியின் கொழுந்தனாரான போலீஸ் அதிகாரியால் பாதிக்கப்பட்ட ஒருவன், இளவரசியை கடத்துகிறான். அதே போல சுப்ரமணியுடன் பழகும் மகாவையையும் கொல்ல திட்டம் போடுகிறான். இந்த சீரியலில் அநேக எபிசோடுகளில் இளவரசி காணாமல் போகிறாள் அல்லது கடத்தப்படுகிறாள் என்பதுதான் கொடுமை.

அபத்த வசனங்கள்

அபத்த வசனங்கள்

வழக்கறிஞர்கள் தமிழரசி - மோகன்சர்மாவின் தம்பதியரின் மகன் விமானவிபத்தில் இறந்துவிட அவனது கர்ப்பிணி மனைவி பூஜா அதிக அளவில் பாதிக்கப்படுகிறாள். கீரை விற்கும் பெண் ஒருத்தி அவளுக்கு முதலில் கீரையை கொடுத்துவிட அக்கம் பக்கத்து பெண்கள் அவளிடம் கீரை வாங்க மறுத்துவிடுகின்றனர். கீரைக்காரியும் காசு வாங்க மறுத்துவிட்டு, விதவைப் பெண்ணிடம் முதலில் விற்பனை செய்தால் வியாபாரம் ஆகாது என்பது போல பேசுகிறாள்.

கருவை கலைக்க திட்டம்

கருவை கலைக்க திட்டம்

பிறக்கும் முன்பாகவே அப்பாவை முழுங்கிட்டு பிறக்கிறான் என்று பக்கத்து வீட்டுப் பெண் பேசவே, உடனே மருத்துவமனைக்குப் போய் குழந்தையை கலைத்துவிட நினைக்கிறாள். ஆனால் மருத்துவரின் முயற்சியால் அது நடக்காமல் போகிறது.

தம்பதியர் இணைவார்களா?

தம்பதியர் இணைவார்களா?

பிரிந்து வாழும் மாமியார் தமிழரசி - மாமனார் மோகன்சர்மாவை சேர்த்து வைக்கவேண்டும் என்ற பூஜாவின் எண்ணம் நிறைவேறியதா? அதேபோல் அடிக்கடி காணாமல் போகும் இளவரசி - சுப்ரமணி தம்பதியர் இணைவார்களா என்பதை இனிவரும் எபிசோடுகளில் காணலாம்.

எப்போ முடியும்?

எப்போ முடியும்?

சன்டிவியில் இளவரசிக்கு பின்பு தொடங்கப்பட்ட தொடர்கள் எல்லாம் இப்படித்தான் கதையை எப்படி நகர்த்துவது என்று தெரியாமல் அவசரம் அவசரமாக முடிக்கப்பட்டது. 900 மாவது எபிசோடை நெருங்கும் இளவரசி தொடரும் இப்போது போர் அடிக்க ஆரம்பித்துவிட்டது. சீக்கிரம் முடித்துவிட்டு வேறு புதிய தொடரை தொடங்கினால் சுவாரஸ்யமாக இருக்கும் என்கின்றனர் இல்லத்தரசிகள். சீரியல் தயாரிப்பாளர்கள் கவனிப்பார்களா?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X