1200 எபிசோடுகளாக அழும் துளசி!… கண்ணீரை எப்ப சார் துடைப்பீங்க?

By Mayura Akilan

எனக்கு மட்டும் ஏன் இப்படி கஷ்டத்துக்கு மேல கஷ்டமா வருது.... இது தென்றல் சீரியல் கதாநாயகி துளசியின் கேள்வி. சன் டிவியில் 2009ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி தொடங்கியது தென்றல் தொடர். விகடன் டெலிவிஷ்டாஸ் நிறுவனம் தயாரித்து வழங்கும் இந்த தொடரை, குமரன் இயக்குகிறார்.

எப்படித்தான் வருஷக்கணக்குல விடாம இந்த சீரியல் பாக்குறாங்களோ? என்று கேள்வி கேட்பவர்களுக்கு இல்லத்தரசிகள் சொல்லும் பதில், சீரியலில் வரும் கதாநாயகிகள் துளசி, சத்யா, ரேகா, கல்யாணி, இந்து என அனைவருமே எங்களின் குடும்பத்தில் ஒருவராகத்தான் பார்க்கிறோம். அதனால்தான் விடாமல் சீரியல் பார்ப்பதோடு கதாநாயகிகள் அழும்போது நாங்களும் அழுகிறோம் என்கின்றனர்.

அதுவும் இந்த துளசிப்பொண்ணு தினமும் அழுகுதே? ஏன் இப்படி அழுதுகிட்டே இருக்கே? என்று நேரடியாகவே கேட்கும் ரசிகர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

சித்தி கொடுமை

சித்தி கொடுமை

நடுத்த குடும்பத்தின் கதைதான் தென்றல். அம்மா வீட்டை விட்டு ஓடிப்போகவே அப்பா மறுமணம் செய்து கொள்கிறார். சித்தி கொடுமை அப்பாவின் பாராமுகம் என துளசியின் அழுகையும் சோகமும் ஆரம்பமாகிறது.

பணத்திற்காக திருமணம்

பணத்திற்காக திருமணம்

துளசியை பெண் கேட்டு வரும் வயசான நபருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்கின்றனர். ஆனால் அதிலிருந்து காப்பாற்றி திருமணம் செய்துகொள்கிறான் ஹீரோ தமிழ்.

மாமியார் கொடுமை

மாமியார் கொடுமை

அதுநாள் வரை சித்தி கொடுமைக்கு ஆளான துளசிக்கு அப்புறம் மாமியார் கொடுமை தொடங்குகிறது. துளசியை விவாகரத்து செய்துவிட்டு மகனுக்கு பணக்கார பெண்ணான சாருவை மணமுடிக்க திட்டமிடுகிறாள் மாமியார்.

ஒரே அழுகைதான்

ஒரே அழுகைதான்

அப்படி இப்படி என்று ஒருவழியாக 1200 எபிசோடுகளை ஓட்டிவிட்டனர். துளசியின் தோழிகள் கல்யாணி, தீபாவின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. ஒரே கண்ணீர்தான்.

மாயமான தமிழ்

மாயமான தமிழ்

படிப்புக்காக துளசி பாண்டிச்சேரி போகவே அவளது கணவன் தமிழ் மாயமாகிவிடுகிறான். அவனைத் தேடி அலைகிறாள் துளசி. கொலைப்பழி விழவே ஜெயிலுக்கும் போய் பின்னர் மீண்டு வருகிறாள். வந்த பின்பும் அழுகைதான்.

மீண்டு வந்த தமிழ்

மீண்டு வந்த தமிழ்

ஒருவழியாக கடத்தல் கும்பலிடம் இருந்து தப்பி வந்தும் கணவனின் நிலையைக் கண்டு ஒரே கண்ணீர்தான் துளசிக்கு. ஏம்பா இந்த பொண்ணை இப்படி அழவைக்கிறீங்க என்று இல்லத்தரசிகள் கேட்கும் அளவிற்கு ஒரே அழுகைதான்.

1235 எபிசோடுகள்

1235 எபிசோடுகள்

தென்றல் தொடர் 1235 எபிசோடுகளை கடந்து விட்டது. சன் டிவியில் அதிக நாட்கள் ஒளிபரப்பான கோலங்கள், திருமதி செல்வம் சீரியல்களின் சாதனையை தென்றல் முறியடித்துவிட்டது. ஆனால் துளசியின் கண்ணீர்தான் இன்னமும் நின்ற பாடில்லை. ஹலோ தென்றல் தொடர் டைரக்டரா? சீரியலை எப்ப சார் முடிப்பீங்க?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X