Thirumanam serial: சந்தோஷ் ஜனனி பக்கத்திலா இல்லை சக்தி பக்கத்திலா?
சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் திருமணம் சீரியலில் சந்தோஷ் மவுனமாக இருந்தே பல காரியங்களை சாதித்துக் கொள்வதாக தோன்றுகிறது. சில ஆண்கள் இப்படித்தான் என்ன நினைக்கிறார்கள் என்பதையே கண்டுபிடிக்க முடியாது.
சந்தோஷ் காதலித்தது சக்தியை, கல்யாணம் செய்துக் கொண்டது ஜனனியை. இன்னும் தான் சக்திக்குத்தான் சொந்தம் என்று வாழ்வதும், சக்தி சந்தோஷ் மீது இன்னும் உரிமை கொண்டாடுவதும் எங்காவது ஒரு சில வீடுகளில் இன்னமும் நடந்துகொண்டுதான் இருக்கிறதா?
கல்யாணம் என்று ஒன்று ஆன பிறகும், இன்னும் மனசாட்சி அது இது என்று, ஜனனியை டிவோர்ஸ் பண்ணிட்டு சக்தியுடன் வாழ்வதுதான் சரி என்று முடிவெடுக்கிறான். இப்போது சந்தோஷ், ஜனனி வீட்டாருக்குத் தெரியாமல் விவாகரத்து கேஸ் நடந்துகொண்டு இருக்கிறது.

புருஷனாக நடிக்க
ஜனனி அப்பாவுக்கு உடம்பு சரி இல்லாமல் போனதுக்கு, ஒரு நாள் வீட்டில் ஜனனியும், சந்தோஷும் சத்தம் போட்டு பேசிக்கொண்டு இருந்ததும், அந்த இரவு நேரத்தில் அவன் வெளியில் போனதும்தான் காரணம். இது ஜனனிக்குத் தெரிந்துவிட, என் அப்பாவுக்காக நான் எதையும் செய்வேன். என் தங்கச்சி கல்யாணம் நல்லபடியா நடக்கணும். அதனால, நீங்க சக்தி கூட வாழறது அப்புறம் இருக்கட்டும். அப்பா நல்லாகும் வரைக்கும் எனக்கு புருஷனா நடிங்கன்னு புருஷன்கிட்டேயே கேட்கறா.

சந்தோஷ் இயலாமை
தர்ம சங்கடத்தில் தவிக்கும் சந்தோஷ், இயலாமையால் ஏதும்செய்ய முடியாமல் தவிக்கிறான்.ஆனால், இதுக்கு என்கிட்டே கேட்கணுமா ஜனனி. நீங்க எது சொன்னாலும் செய்யறேன்னு சொல்றான். அப்பா கிட்ட நாங்க சந்தோஷமாத்தான் இருக்கோம்னு காட்டிக்க, அப்பாவுக்கு லன்ச் வாங்கிட்டு வாங்கன்னு சொல்றா. அவனும் உடனே என்ன வேணும்னு கேட்டு வாங்கிட்டு வர்றான்.

சக்தி போனில்
சந்தோஷுக்கு போன் பண்றா சக்தி, அவன் போனை எடுக்காமலிருக்க ஜனனிக்கு போன் பண்றா. ஜனனி போனை எடுத்து சந்தோஷ் அங்க இருக்காரான்னு கேட்க, ஆமாம்னு ஜனனி சொல்ல, எதுக்குங்க சொன்னீங்கன்னு சந்தோஷ் கோச்சுக்கறான். ரெண்டு பேரையும் மீட் பண்ணி முக்கியமான விஷயம் பேசணும்.வாங்கன்னு கூப்பிடறா. சரி,வர்றோம்னு சொல்றான் சந்தோஷ்.

அல்லது அங்கே
சந்தோஷ் ஜனனியை அழைச்சுக்கிட்டு சக்தி வர சொன்ன ரெஸ்ட்டாரெண்ட் போறான். அங்கே சக்தி பக்கத்துல ஒரு சீட், ஜனனி பக்கத்துல ஒரு சீட். சக்தி, தன்னருகில் உட்கார சந்தோஷை அழைக்க, ஜனனியும் சந்தோஷைப் பார்க்கறா. எதுக்குடா வம்புன்னு ஜக்கிரதையா வேறு ஒரு சேரை இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்றான். என்னோட சேஃப்டிக்காக இந்த டிவோர்ஸ் பத்திரத்துல ரெண்டு பேரும் கை எழுத்துப் போடுங்கன்னு கேட்கறா சக்தி.
ஜனனி பேசாமல் கை எழுத்துப் போட்டுவிட்டு எழுந்து வந்துடறா. சந்தோஷும் கை எழுத்துப் போட்டுட்டு வந்துட, எதுக்குங்க இப்படி செய்தீங்க. என்கிட்டே ஒரு வார்த்தை கேட்டு இருக்கக் கூடாதுன்னு கேட்கறான். ஜனனி கோவத்தில் இருக்கா.


Click it and Unblock the Notifications











