‘’Where is tha party’’… விஜய் டிவியின் நியூ இயர் ஸ்பெஷல் கொண்டாட்டம் !

சென்னை : பல வித்தியாசமான நிகழ்ச்சிகளை ரசிகர்களுக்கு கொடுத்து ரசிகர் மனதில் தனிஇடத்தை பிடித்திருக்கிறது விஜய் டிவி டிவி.

புத்தாண்டு தினத்தை சிறப்பாக கொண்டாட பல தொலைக்காட்சிகள் போட்டிப்போட்டுக்கொண்டு பல சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பா திட்டமிட்டுள்ளன.

அந்த வகையில் விஜய் டிவி கலகலப்பான புதிய ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளது. இதற்கான ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது.

விஜய் டிவி

விஜய் டிவி

விஜய் தொலைக்காட்சி திறமை உள்ளவர்களை தட்டிகொடுக்க மறந்ததே இல்லை. இன்று திரையில் மின்னிக்கொண்டு இருக்கும் பல நட்சத்திரங்களுக்கு ஏணிப்படியாக இருந்து ஏற்றிவிட்டது விஜய் தொலைக்காட்சிதான். விஜய் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் போதும் முன்னேறி விடலாம் என்ற எண்ணத்தை சாமானியன் மனதில் விதைத்துள்ளது விஜய் தொலைக்காட்சி.

புத்தாண்டு நிகழ்ச்சி

புத்தாண்டு நிகழ்ச்சி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் ஷோ நன்றாகவே ரசிகர்களின் மத்தியில் பிரபலமடைந்து இருக்கிறது. இதில் கலந்துகொண்டு ரசிகர்களின் மத்தியில் தங்களுக்கென்று தனி இடத்தை பிடித்த ஒரு சில பெண் போட்டியாளர்கள் தற்போது விஜய் டிவியில் புத்தாண்டு ஸ்பெஷல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உள்ளனர்.

Where is tha party

Where is tha party

இந்த நிகழ்ச்சிக்கான ஷூட்டிங் முடிந்து தற்போது இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. 'Where is tha party'' என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான பூவையார் தனக்கே உரித்தான பாணியில் பாட்டு பாடுகிறார்.

ஜனவரி 1ந் தேதி

ஜனவரி 1ந் தேதி

குரோஷி மற்றும் பாலாவின் தாறுமாறான நகைச்சுவையுடன் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சி பட்டையை கிளப்பி உள்ளது. இதில் விஜய் தொலைக்காட்சியின் பல நட்சத்திரங்கள் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சி ஜனவரி1ந் தேதி மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X