பிக்பாஸ் சீசன் 5ல் பங்கேற்க போகும் பிரபலங்கள் இவர்களா? தீயாய் பரவும் புதிய தகவல்!

சென்னை: பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்க போகும் போட்டியாளர்கள் என சில பிரபலங்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் வைரலாகி வருகிறது.

Recommended Video

Bigg Boss Tamil season 5 Official Promo update | 31st August 2021

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் வரும் அக்டோபர் மாதம் முதல் தொடங்கவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.

கடந்த 4 சீசன்களை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன்தான் இந்த சீசனையும் தொகுத்து வழங்க உள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.

வெளியான போட்டோக்கள்

வெளியான போட்டோக்கள்

இதற்கான டீசர் மற்றும் புரமோவுக்கான படப்பிடிப்புகள் அண்மையில் நடைபெற்றது. இதன் போட்டோக்களும் வெளியாகி வைரலானது. அதோடு பிக்பாஸ் நிகழ்ச்சியின் வரும் சீசனில் கடந்த சீசன்களை போல விஜய் டிவி பிரபலங்கள் பங்கேற்க மாட்டார்கள் என்றும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

துள்ளுவதோ இளமை நடிகர்?

துள்ளுவதோ இளமை நடிகர்?

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் என சில பிரபலங்களின் பெயர்கள் வைரலாகி வருகிறது. அதன்படி துள்ளுவதோ இளமை படத்தில் நடிகர் தனுஷுக்கு நண்பனாக நடித்த நடிகர் அபினய் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,

நடிகர் அபினய், அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தார்.

அம்மா உணவகத்தில் சாப்பிடுகிறேன்

அம்மா உணவகத்தில் சாப்பிடுகிறேன்

அப்போது தனக்கு பட வாய்ப்புகள் எதுவும் இல்லை என்று கூறிய நடிகர் அபினய், அம்மா இறந்து விட்டார். சொத்துக்கள் அனைத்தையும் விற்றுவிட்டு தற்போது அம்மா உணவகத்தில்தான் சாப்பிட்டு வருகிறேன் என்று கூறினார். இந்நிலையில் அவர் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்றால் அவரது திறமை வெளிப்படும் என்றும் இதனால் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் தெரிகிறது.

மைனா பட வில்லி

மைனா பட வில்லி

இதேபோல் மைனா படத்தில் வில்லியாகவும் ராட்சசன் படத்தில் போலீஸ் அதிகாரியாகவும் நடித்த நடிகை சூசன் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்கலாம் என்றும் கூறப்படுகிறது. நல்ல திறமைசாலியான சூசனுக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் உள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி அவருக்கு ஒரு மேடையாக இருக்கும் என கூறப்படுகிறது.

சித்து பிளஸ் 2

சித்து பிளஸ் 2

இதேபோல் சித்து பிளஸ் 2 படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சாந்தினியும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்பார் என கூறப்படுகிறது. சித்து பிளஸ் 2 படத்தை தொடர்ந்து சில படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார் சாந்தினி. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் கிடைக்காததால் சீரியலில் நடித்து வருகிறார் சாந்தினி.

சீரியல் விரைவில் நிறைவு

சீரியல் விரைவில் நிறைவு

சாந்தினி தற்போது ரெட்டை ரோஜா சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது. சாந்தினி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதால் தான் ரெட்டை ரோஜா சீரியல் விரைவில் நிறைவு பெற உள்ளதாக கூறப்படுகிறது.

நடிகை வடிவுக்கரசி

நடிகை வடிவுக்கரசி

இதேபோல் மைனா நந்தினி, தனுசு ராசி நேயர்களே, 90 எம்எல் ஆகிய படங்களில் நடித்த நடிகை மசூம் சங்கர் ஆகியோரின் பெயரும் நிகழ்ச்சியில் அடிபட்டு வருகிறது. மேலும் சீனியர்களாக நடிகை வடிவுக்கரசி மற்றும் ரமேஷ் கண்ணா மற்றும் தீபா ஆகியோரின் பெயர்களும் அடிபட்டு வருகிறது.

சீரியல் நடிகை பாவனி ரெட்டி

சீரியல் நடிகை பாவனி ரெட்டி

ஏற்கனவே விஜய் டிவி பிரபலமான சுனிதா பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டது. அவரை தொடர்ந்து பிரபல சீரியல் நடிகையான பாவனி ரெட்டியும் பிக்பாஸ் சீசன் 5ல் பங்கேற்பார் என கூறப்பட்டது. இந்நிலையில் உறுதிப்படுத்தப்படாத தகவலும் வெளியாகி வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X