twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Bigg Boss 3: வரப்போகுது பிக்பாஸ்... சேர்ந்தாச்சா பதினைந்து பிரபலங்கள்?

    |

    Recommended Video

    Bigg Boss Season 3: பொறுத்திருங்கள் இன்னும் 5 நாட்களில் பிக் பாஸ் - வீடியோ

    சென்னை: தமிழ் நாட்டின் மிக பிரபலமான பொழுதுபோக்கு தொலைக்காட்சி விஜய் தொலைக்காட்சி.

    இதுவரை எப்பொழுதும் புதிதான நிகழ்ச்சிகளை வழங்கி வரும் விஜய், பொழுது போக்கின் உச்சகட்டமாக பிக் பாஸ் நிகழ்ச்சியை தமிழில் தொடங்கி வைத்தது.

    ஒவ்வொரு முறை பிக் பாஸ் ஷோ முடியும் போதும் அடுத்த பிக் பாஸ் ஷோவின் எதிர்பார்ப்பு நேயர்களிடையே அதிகரிக்க தொடங்கி விடுகிறது.

    புதுமைகள் பிக்கபாஸ்

    புதுமைகள் பிக்கபாஸ்

    இந்த ஒரு ஷோவுக்கு மட்டும் சலிப்பே இல்லை என்பது உண்மை. ஏனென்றால் ஒவ்வொரு சீசனுக்கும் புதிய பரிமாணங்கள் உண்டு. புதிய முகங்கள், புதிய குணங்கள், புதிய பரிமாணங்கள் என்று ஏகப்பட்ட புதுமைகள் இதில் உண்டு.

    உலக நாயகன்

    உலக நாயகன்

    கடந்த இரண்டு சீசன்களாக பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பு அதிகம்.மேலும், யார் இந்த சீசனை தொகுத்து வழங்கப்போகிறார் என்று வலம் வந்த அந்த கேள்விக்கு விடையாக உலக நாயகன் கமல் ஹாசன் அவர்கள் கொண்ட 15 நிமிட டீஸர்
    வெளியானது

    கலக்கிய உல கநாயகன்

    மக்களின் மத்தியில் பெரிய வரவேற்பை ஏற்படுத்தியது. அந்த டீசர்.சினிமா துறையில்
    கலக்கிய உல கநாயகன் கமல்ஹாசன் அவர்கள் கடந்த இரண்டு சீசன்களில் தொகுப்பாளராக களம் இறங்கி ரசிகர்களை கவர்ந்தார்.

    நம்ம லைஃப்

    நம்ம லைஃப்

    இந்த சீசன், இது வெறும் ஷோ அல்ல நம்ம லைஃப் என்னும் புதிய பரிமாணத்தில் தொடங்கவுள்ளது.பிக் பாஸ் 3க்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அடுத்த முக்கியமானகேள்வி அனைவர் மனத்திலும் எழுகிறது அது யார் அந்த 15 போட்டியாளர்கள் என்று?

    யார் யார்

    யார் யார்

    பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் யாராக இருக்கும் என்ற கணிப்பு அனைவரிடமும் தொடங்கிவுள்ளது. ஆனால் கடந்த சீசன்கள் போல இந்த முறையும் முதல் எபிசோடில் யார் அந்த போட்டியாளர்கள் என்பதை அறிவிப்பார்கள்.

    இந்த நிகழ்ச்சி வரும் ஜூன் 23 அன்று இரவு 8 மணிக்கு ஆரம்பமாக உள்ளது. மேலும் இனி தினமும் திங்கள் முதல் ஞாயிறு வரை இரவு 9:30, மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

    English summary
    The most popular entertainment television channel of Vijay TV.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X