பிக் பாஸ் 2 போட்டியாளர்கள் யார், யார்?: என்னது பவர் இல்லையா?#BiggBoss2Tamil

By Siva

Recommended Video

பிக் பாஸ் வீட்டிற்கு செல்லும் நேரத்தில் பவர் ஸ்டாரை விடாது துரத்தும் சிறை- வீடியோ

சென்னை:பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் 16 பேர் யார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சி இன்று துவங்குகிறது. துவக்க நிகழ்ச்சியை இரவு 7 மணிக்கு பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுவிட்டார்களாம்.

 பிக் பாஸ்

பிக் பாஸ்

பிக் பாஸ் வீட்டிற்குள் கமல் ஹாஸன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கன்ஃபெஷன் அறையில் கமல் ஹாஸன் அமர்ந்து சிரிக்கும் புகைப்படம் வைரலாகியுள்ளது.

 யார் யார்?

யார் யார்?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் 16 போட்டியாளர்கள் யார், யார் என்று தெரிந்துவிட்டது. இந்த சீசனில் பிக் பாஸ் வீட்டை கலகலப்பாக்க பவர் ஸ்டார், கவர்ச்சிப் புயல் வீச வைக்க மும்தாஜ், இருட்டு அறையில் முரட்டுக் குத்து நடிகை யாஷிகா ஆனந்த், ஹோம்லி பெண் ஜனனி ஐயர், பாயும் புலி படத்தில் நடித்த ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கலந்து கொள்கிறார்களாம்.

ரம்யா

ரம்யா

மெட்ராஸ் படத்தில் நடித்த ரித்விகா, தாடி பாலாஜி, அவரின் மனைவி நித்யா, நடிகர் மகத் ராகவேந்திரா, டேனியல் போப், ஆனந்த் வைத்யநாதன், சென்ட்ராயன், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி ரம்யா, பொன்னம்பலம், மமதி சாரி, வைஷ்ணவி ஆகியோர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள்.

 பவர் ஸ்டார்

பவர் ஸ்டார்

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் பவர் ஸ்டார் சீனிவாசன் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியானால் தான் பவர் இருக்கிறாரா இல்லையா என்பது தெரிய வரும். பிக் பாஸ் வீட்டிற்கு செல்வதாகத் தான் பவர் ஸ்டார் பேட்டி அளித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 மகத்

மகத்

கடந்த முறை ஆரவ், ஓவியா என்று ஒரு காதல் ஜோடி உருவானது. இந்த முறை காதல் ஜோடி உருவாகவே மங்காத்தா பட புகழ் மகத்தை அழைத்து வந்துள்ளார்களாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X